தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

அறிந்தவை...(பாகம் 2)

விண்வெளி நிலையம் என்பது விண்ணில் மனிதர் வாழ்வதற்கென வடிவமைக்கப்பட்டு, மனிதனால் செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். விண்வெளி நிலையம், பெரிய அளவில் உந்தல் அல்லது இறங்கல் வசதிகளைக் கொண்டிராமையை வைத்து, ஏனைய ஆளேற்றிய விண்கலங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது - பதிலாக, விண்வெளி நிலையத்திலிருந்து போக்குவரத்துக்கு ஏனைய வாகனங்கள் பயன்படுகின்றன. விண்வெளி நிலையங்கள், சுற்றுப்பாதையில், சில மாதங்களைக்கொண்ட இடைத்தரக் கால அளவு வாழ்க்கைக்காக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன.
கடந்தகால, நிகழ்கால விண்வெளி நிலையங்கள்:
- சல்யூட்
- ஸ்கை லாப்
- மிர்
- அனைத்துலக விண்வெளி நிலையம் (ISS)

சில விண்வெளி நிலைய வடிவமைப்புகள், கூடிய அளவு மக்களுக்காக, நீண்ட கால விண்வெளி வாழிட நோக்கங்களைக் கருத்திற்கொண்டு முன்மொழியப் பட்டுள்ளன. முக்கியமாக இவை, மக்கள் வீடுகள் கட்டிக்கொள்ளக் கூடிய "விண்வெளி நகரங்களாகும்". இம் முன்மொழிவுகள், செயல்படுத்தும் நோக்கத்துக்காகத் தீவிர கவனத்துக்கு உட்படவில்லை.


அருஞ்சொற்பொருள்
நகர்பேசி - Cellular Phone
நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
தொலைபேசி இணைப்பகம் - Telephone Exchange
குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை - Code Division Multiple Access
வானொலிக் குறிகைகள் - Radio Signals
இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு - Digital Voice Data
பரவல் குறியீடு - Spreading Code
அலையெண் கற்றையகலம் - Frequency Bandwidth
பரவல் நிறமாலை தொழில்நுட்பம் - Spread spectrum technology
உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு - Global System for Mobile communication அல்லது GSM
காலப்பிரிப்பு பன்னணுகல் - Time Division Multiple Access
வானலைச் செலுத்துப்பெறுவி - Radio Transceiver
காட்சித் திரை - Display
இலக்கக் குறிகைச் செயலி - Digital Signal Processor அல்லது DSP
சூட்டிகையட்டை - Smart Card
சந்தாதாரர் அடையாளக்கூறு - Subscriber Identification Module அல்லது SIM
பன்னாட்டு நகர்சாதன அடையாளம் - International Mobile Equipment Identification - IMEI
பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity - IMSI
தள நிலையம் - Base Station
தள செலுத்துப்பெறு நிலையம் - Base Transceiver Station - BTS
தள நிலைய இயக்ககம் - Base Station Controller - BSC
வானலைவரிவை துவக்கம் - Radio Channel Setup
அலையெண் துள்ளல் - Frequency Hopping
கைமாற்றங்கள் - Handovers
நகர் நிலைமாற்றகம் - Mobile Switching Center - MSC
பிணையத் துணையமைப்பு - Network Subsystem
பொது தொலைபேசி பிணையம் - Public Switched Telephone Network - PSTN
ஒருங்கிணைநத இலக்கச் சேவைப் பிணையம் - Integrated Services Digital Network - ISDN
பதிவுசெய்தல் - Registration
உறுதிபடுத்துதல் - Authentication
இருப்பிடம் புதுப்பித்தல் - Location Update
அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு - Roaming Subscriber Call Routing
குறிகைமுறை - Signalling
இல் இருப்பிடம் பதிவகம் - Home Location Register - HLR
விஜய(வருகையாளர்) இருப்பிடம் பதிவகம் - Visitor Location Registor - VLR
நகர்நிலைய அலையல் எண் - Mobile Station Raoming Number - MSRN
பரவல் தரவுத்தளம் - Distributed Database
பயனில்லா காலகட்டங்கள் - Idle Time Slots
நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடம் - Broadcast Control Channel
தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் - Temporary Mobile Subscriber Identity - TMSI
கம்பியில்லா அணுகு நெறிமுறை - Wireless Access Protocol

ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.







ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III (George Fitzgerald Smoot) (பிறப்பு:பெப்ரவரி 20, 1945) ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை நாசாவைச் சேர்ந்த ஜான் மேத்தர் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி யாற்றுகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி) (Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது. வாழ்க்கையும் ஆய்வுகளும் ஸ்மூட் அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஃவுளோரிடா (புளோரிடா) மாநிலத்தில் யூக்கான் (Yukon) என்னும் ஊரில் பெப்ருவரி 20, 1945ல் பிறந்தார். இவர் மாசாச்சுசெட்சு இன்ச்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜி (எம் ஐ டி, MIT) யில் படித்து கணிதத்திலும் இயற்பியலிலும் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு அணுவுட்துகள்கள் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றர். அதன் பின்னர் தன் ஆய்வுத்துறையை மாற்றிக்கொண்டு பேரண்டம் பற்றி ஆராயத்தொடங்கினார். லாரன்ஸ் பெர்க்கிலி நாட்டு ஆய்வுச்சாலையில் 1968ல் நோபல் பரிசு பெற்ற லூயி ஆல்வாரஸ் என்னும் அறிஞருடன் கூட்டாக சேர்ந்து ஆய்வு நடத்தினார். அவ் ஆய்வானது நிலவுலகின் காற்றுமண்டலத்தின் மிகப்புறத்தே இருக்கும் மேலடுக்குப் பகுதிக்கு கருவிகள் பொருத்திய பலூன் (நொய்ம்பை) ஒன்றை அனுப்பி அதன் துணையால் எதிர்ப்பொருள் (antimatter) (பலூன்) இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும். அன்றிருந்த பேரண்டக் கொள்கைகள் அப்படி ஒரு நிலையைச் சுட்டியது.

பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபடுவதைக் காட்டும் படம். இது COBE என்னும் செயற்கைமதியின் துணையால் அறியப்பட்டது
பின்னர் ஸ்மூட் அவர்களின் ஆர்வம் பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சைப் (பே நு கவீ) (CMB) பற்றிய கருத்தில் வலுப்பெற்றது. பேரண்டத்தில் பின்புலமாக நுண்ணலைக் கதிர் வீச்சு இருப்பதை ஆர்னோ ஆலன் பென்சியாஸ் என்பவரும் ராபர்ட் வுட்ரோ வில்சன் என்பவரும் தற்செயலாய் 1964ல் கண்டு பிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்காக இவ்விரௌவர்ம் 1978ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். இந்த பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசைகளிலும் உள்ளனவா என்பது தெரியாமல் இருந்தது. பேரண்டத்தின் கட்டமைப்பும் அது சுழன்றுகொண்டு வருகின்றதா என்பதும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. பேரண்டத்தைப் பற்றிய கருத்துருக்களின் ஒன்று பேரண்டம் சுழலுவதாயின் இந்தப் பின்புல கதிர்வீச்சில் ஒருவர் காணும் திசைக்கு ஏறார்போல சிறு வேறுபாடுகள் இருக்குமெனவும், அதனைத் துல்லிய வெப்ப வேறுபாடுகளால் கண்டறியலாம் எனவும் அறிந்திருந்தனர். ஸ்மூட் அவர்கள் ஆல்வாரஸ், ரிச்சர்ட் முல்லர் ஆகியோரின் துணையுடன் 60 பாகை திசை வேறுபாட்டில் அறியக்கூடிய மிகத்துல்லிய நுண்ணலை வேறுபாட்டை அளக்கும் ரேடியோ அளவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். அதன் விளைவாக பேரண்டத்தில் நுண்ணலை கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசையிலும் இல்லை என்று கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பு பேரண்டத்தின் ஆதிமூலத் தோற்றத்திற்குக் காரணமான பெரும்பிறக்கம் (Big Bang) (பெருவெடி) என்னும் கொள்கைக்கு வலு சேர்க்கும் அடிப்படையாக உள்ளதாகக் கண்டுள்ளனர்.


(பிறப்பு : பெப்ரவரி 20 1945 (வயது 63)புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
துறை : இயற்பியல்
நிறுவனம் : Lawrence Berkeley National Laboratory
Alma mater : Massachusetts Institute of Technology
அறியப்பட்டது : Cosmic microwave background radiation
பரிசுகள் :
இயற்பியல் நோபல் பரிசு 2006 )

பிரெடெரிக் வில்லியம் ஹேர்ச்செல் (Frederick William Herschel, நவம்பர் 15, 1738 – ஆகஸ்ட் 25, 1822) என்பவர் ஜேர்மனியில் பிறந்த பிரித்தானிய வானிலையாளர் ஆவார். இவர் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தமைக்காகச் சிறப்புப் பெற்றார். இது தவிர அகச்சிவப்புக் கதிர் போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவித்தார்.

வானியல் காண்டுபிடிப்புகள்
கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள்: யுரேனஸ் மார்ச் 13 1781
கண்டுபிடித்த சந்திரன்கள்:

ஒபரோன் ஜனவரி 11 1787
டைட்டானியா ஜனவரி 11 1787
என்செலாடஸ் ஆகஸ்ட் 28 1789
மைமாஸ் செப்டம்பர் 17 1789.


ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.
1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.



சர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் (Sir Alexander Fleming )(ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்

நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன. பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் தட்டுகளாக இருக்கின்றன. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது பன்னிரண்டு சிறிய தட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் தட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய பெருங்கடல் பகுதிகளும் அடக்கம்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்