- ஐஸ்
வெட்டி எடுக்கப்பட்ட ஐஸை கோணிப்பையில் சுற்றி, அதன்மீது பைன் மரத்தூளைத் தூவி வைத்தால் ஐஸ் உருகாமல் (அதாவது அதிகம் உருகாமல்) இருப்பதாகக் கண்டுபிடித்தார் ஃபிரெடெரிக் டியூடர். அதற்கான ஐடியாவை அவருக்குக் கொடுத்தது அவரது நண்பர் என்று சொல்லப்படுகிறது.
மரத்தூள், அரிசித் தவிடு ஆகியவை வெப்பம் கடத்தாத இன்சுலேட்டர்கள். அதன் காரணமாக பனி கொஞ்சமாகத்தான் உருகியது. இந்தியாவுக்கு அவர்கள் முதலில் அனுப்பிய 180 டன் ஐஸில், 100 டன் பத்திரமாக வந்துசேர்ந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
ஒருவகையில் ஐஸே ஒரு வெப்பம் கடத்தாப் பொருள்தான். அதனால் ஐஸின் புறப்பகுதி லேசாக உருக ஆரம்பித்தாலும் அங்கிருந்து வெப்பம் சட் சட்டென்று பரவி உள்ளுக்குள் சென்றுவிடாது.
டியூடர் இந்தியாவுக்கு ஐஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துப் பல வருடங்களுக்குப் பின்னரே தெர்மகோல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதுவும் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து பெட்டிகள் எல்லாம் செய்யப்பட்டன.
தெர்மோஸ் ஃபிளாஸ்க் எனப்படும் வெற்றிட ஃபிளாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டபோது டியூடரின் கம்பெனியே போண்டி ஆகிவிட்டது.
- கம்பிவடம்இல்லாதஉலகம்

இதன் இயக்கமுறைப்படி, முதல் தொடர்புநீட்சி (Antenna) நகரத்தில் இயங்கும் வலையமைப்போடு இணைக்கப்படும். பின்னர் அடுத்தடுத்த தொடர்புநீட்சிகள் 60 மைல் தூரத்திற்கொருமுறை வைக்கப்பட்டு தொடர்பு நீட்டிக்கப்படும். புவியின் குவித்தன்மையின் காரணமாக அதற்குமேல் நீட்டிக்கமுடியாது.
இன்டெலின் ஆரம்பகால சோதனையில் வெற்றிகரமாக 30 மைல் தூரத்துக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. சாதாரண வை-ஃபை தொடர்புநீட்சிகளே இதில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வீரியத்தை அதிகரிக்க சிறப்பு வானலை மென்பொருட்கள் உதவி செய்தன.
இரு முனை கட்டமைப்பை ஏற்படுத்த வெறும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவாகுமென்று இண்டெல் தெரிவிக்கிறது. இந்த சோதனை இந்தியா, பனாமா, வியட்நாம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக இந்த செயல்பாடு 2008ம் ஆண்டின் மத்தியில் வரவிருக்கிறது…
- கடவுச் சொற்களை சேமிக்காதீர்!

முக்கியமாக வலைஉலவு நிலையத்துக்கு (Browsing Centre) சென்று வலை உலா வரும்போது இது கூடவே கூடாது. அது என்ன கடவுச்சொல்லை ஒவ்வொருமுறை தர ஒரு சோம்பேறித்தனமா? உதாரணத்துக்கு http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html என்ற தளத்தில் கிடைக்கும் மிகச்சிறிய ஒரு உதவிக்கருவி உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேமித்து வைத்திருக்கும் அனைத்து கடவுச் சொற்களையும் எடுத்துக் காட்டிவிடும். அப்புறம் அவ்வளவுதான். இது இப்படி என்றால் ஃபைர்ஃபாக்ஸ் இந்தக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எடுத்துக் காட்டுகிர்றது. பின்வரும் வழியில் செல்லுங்கள், Tools>Options>Security>Show Passwords அங்கு சென்றதும் மீண்டும் Show passwords என்ற ஒரு இடத்தைச் சொடுக்கினால் அனைத்து கடவுச்சொற்களையும் தோலுரித்துக் காட்டுகிறது ஃபைர்ஃபாக்ஸ். யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கக் கூடிய இந்த இரகசிய இடங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதில் அதிக கவனம் தேவை.
- நூலகம்
இளம் வயதினரின் நூலக நாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது! அதுவும் பதினெட்டு வயது முதல் 30 வயது வரை இந்த நாட்டம் அதிகமாக இருந்து பின் படிப்படியாகக் குறைந்து விடுகிறதென்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது! இதற்குக் காரணம் வேலைக்கு தேர்வாகும் நோக்கத்துடனும், தங்களின் கல்வி சம்பந்தமான சிறுதிட்டங்களுக்கும் முழுமையாக அவர்கள் நூல்நிலையங்களை நாடுவதாகத் தெரிகிறது. மேலும் இணைய சேவைகளுக்காகவும் நூலங்களுக்குச் செல்கிறவர்களும் பாதிக்குமேல் உண்டு.
உண்மையிலேயே உலக அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பேர் நூலகம் செல்வார்கள் என்றும் ஒரு முடிவுக்கு நம்மால் வரமுடிகிறதா…?
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!