தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

நாம் சிந்திக்க வேண்டியவை

கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்? அதாவது, பெயர் ரீதியான அடிப்படையைத்தவிர வேறு எந்த வகையிலும் நமக்கும் மற்றவர்களுக்கு மிடையில் வேறுபாடு கிடையாது. இறைவனை அலட்சியம் செய்வது, இறையச்சமின்மை, இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமை முதலான செயல்களில் நாமும் அவர்களைப் போல் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றோம். திருக்குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்று நமக்கு தெரிந்த போதிலும், ஒரு நிராகரிப்பாளன் அந்த தெய்வ நூலுடன் எவ்வாறு நடந்து கொள்கிறானோ அதே போல்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதர் என்று நமக்குத் தெரியும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாதவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட்டு விலகிச் செல்வதைப்போல் நாமும் அவர்களைப் பின்பற்று
வதிலிருந்து விலகிச் செல்கிறோம்.

பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும். லஞ்சம் கொடுப்பவனையும்வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும், வட்டி கொடுப்பவனையும் வட்டிவாங்குபவனையும் மிக மட்டமான குற்றவாளிகள் என்று அவன் தீர்ப்பு வழங்கியிருக்கிறான். புறம்பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது என்று தெளிவாகஅறிவுறுத்தியிருக்கிறான். கெட்ட பேச்சு, வெட்கங்கெட்ட செயல், தரக்குறைவான நடத்தைஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு என்று அவன் குறிப்பிட்டு இருக்கிறான்.

இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும், இறைவனுடைய அச்சம் நமக்கு அறவே இல்லை என்பதைப்போல் நாம் இந்தச் செயல்கள்அனைத்தையும் மற்றவரைப் போல் தயங்காமல் தாராளமாகச் செய்கின்றோம். இதனால் ஏற்பட்டவிளைவு நாம் மற்றவரைக் காட்டிலும் கொஞ்சம் முஸ்லிமாக இருப்பதுபோல் காட்சி அளித்தாலும்நமக்கு அன்பளிப்பு கிடைக்க முடியாது; தண்டனைதான் கிடைக்கும். மற்றவர்கள் நம்மீது அதிகாரம்செலுத்துவது எல்லா வழிகளிலும் நம்மை அவர்கள் தாழ்த்துவது இதே குற்றத்தால் ஏற்ப்பட்டவிளைவுதான்! காரணம், இஸ்லாம் என்ற அருட்பேறு நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதனை நாம் மதிக்கத் தவறிவிட்டோம்.

திருக்குர்ஆனுடைய அறிவுரை என்ன, நபி (ஸல்) அவர்கள் போதித்த வழி என்ன, இஸ்லாம் என்றால்என்ன என்பனவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு இல்லாமல்ஒரு மனிதன் முஸ்லிமாக முடியாது. ஆனால் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், இந்தஅறிவை அடைவதற்கு நீங்கள் சிந்திப்பதுகூட இல்லை. இதிலிருந்து நீங்கள் எத்துணைப் பெரியஅருட்பேற்றினை இழந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணராமல்தான் இருக்கிறீர்கள்.

இறைவனுடைய நூல் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுஉங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள்தொழுகிறீர்கள். ஆனால் அந்தத் தொழுகையில் நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்கிறீர்கள் என்றுஉங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் ஒன்று உண்டா? இன்னும் சொல்லப்போனால்கலிமாவின் பொருள்கூட நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. அந்தக் கலிமாவை கூறியதுடன்உங்கள்மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கள் யாவை என்று நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.

வயல் எரிந்து பொசுங்கிப் போனால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். வேலை கிடைக்காவிட்டால் என்னவாகும் என்று உங்களுக்கு தெரியும். உங்கள் உடமைக்கு பாதகம்ஏற்பட்டால் அந்த நஷ்டம் உங்களுக்குத் தெரியும். ஆனால், இஸ்லாத்தைப் பற்றித்தெரிந்து கொள்ளாமலிருப்பது எவ்வளவு பெரிய நஷ்டமென்று உங்களுக்குத் தெரியவில்லை! இந்தநஷ்டத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால் நீங்களாகவே வந்து "எங்களை யாரேனும் இதிலிருந்துகாப்பாற்ற மாட்டார்களா? என்று கேட்பீர்கள். நீங்கள் இப்படி கேட்கும்போது இறைவன் நாடினால், இந்த நஷ்டத்திலுருந்து மீளுவதற்கு உரிய வழியும் பிறந்துவிடும்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்