தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

உடலுக்காக சில குறிப்பு...

மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்'


ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
`ஜாகிங்' (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் மூளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.

சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.
பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான மூளைப் பதிவுகள் கணினி மூலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.
எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய மூளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.
ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் மூலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.
நாம் அனேக விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ளவும், பல்வேறு சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில் மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் இந்த மூளை செல்கள் உதவும்.



வெறும் காலுடன் ஓடுவதே நல்ல பலன்தரும்!

ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு `ஷு' (காலணி) முக்கியமான விஷயமாகத் தெரியும். பலர் `ஷு' இல்லாமல் ஓடுவது தவறு என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் "வெறும் காலுடன் ஓடுவதே நல்லது. `ஷு' அணிந்து ஓட்டப் பயிற்சி செய்வது உடலைப் பாதிக்கும்'' என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம், தடகள வீரர்கள் ஓட்டப் பயிற்சியால் பெறும் சாதக, பாதகங்கள் பற்றி ஆராய்ந்தது. இதில் மேற்கண்ட முடிவு கிடைத்துள்ளது.
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடகள வீரர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். உயர்ந்த குதிகால் (ஹீல்ஸ்) உடைய `ஷு', மற்றும் `ஹீல்ஸ்' இல்லாத `ஷு' அணிந்து இரு பிரிவினரும். `ஷு' இல்லாமல் வெற்றுக் காலுடன் ஒரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் சராசரியாக ஒரு மைல் தூரம் ஓட விடப்பட்டனர். இதில் அனைவரது கால்களும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் மேலும் கீழுமாகப் போய் வந்தன. இதனால் ஹீல்ஸ் கொண்ட ஷுக்களை அணிந்தவர்களுக்கு தரையுடன் ஏற்பட்ட உராய்வால் அதிர்வலைகள் முட்டு மற்றும் உடல்பகுதிக்கு அதிகமாக கடத்தப்பட்டது. இதனால் உடல் வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹீல்ஸ் இல்லாத `ஷு' அணிந்தவர்களுக்கும் அடிப்பாதத்தின் நடுப்பகுதி வழியாக குறைவான அதிர்வுகள் கடத்தப்பட்டன. `ஷு' இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
"நமது கால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளது. எனவே அதுவே இயற்கையான `ஷு'. உண்மையில் வெறும் காலுடன் பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. மலைப்பாதை போன்ற கரடு முரடான பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வெற்றுக் காலில் பயிற்சி செய்யலாம்'' என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.


ஆரோக்கிய `டயட்' டிப்ஸ்

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜுஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜுஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

Source : Evening Flower

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்