தற்பொழுது உலக கோப்பை கால்பந்து ஜுரம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக்கிடக்கின்ற சூழ்நிலையில் நம்மூர் மட்டும் என்ன விதி விலக்கா? கால்பந்துப்போட்டிக்கு எப்போதுமே நம்மூர் மக்களின் ஆர்வமும், ஆதரவும் நம் முன்னோர்களின் காலத்திலிருந்தே இருக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை.
தற்போது நடைப்பெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியை ஆரம்பம் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் வந்து ஆச்சரியபட வைக்கிறார்கள் அனைவரும் கண்டு ரசிக்க வசதியாக புரஜக்டர் மூலம் பெரிய திரையில் கானொளி நம்மூரில்(நடுத்தெரு சரபுதீன் காகா வீட்டில்) ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் அதை உற்சாகத்துடன் கண்டு ரசிப்பதையும் கீழே உள்ள புகைப்படங்களை காணலாம்.
இறுதிஆட்டத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறார்கள் நம்மூர் ரசிகர்களுக்கு ஆர்வம் அழவே இல்லாமல் போய்விட்டது இந்த மாதிரியான ஆர்வம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருந்தால் நாம் விரைவில் உலககோப்பை போட்டியில் நுழைய வாய்ப்புகள் அதிகம்.
வாய்ப்புகள் இருந்தும் ஒவ்வொரு இந்தியனும் ஏன் பயன் படுத்துவதில்லை?
வாய்ப்புகள் இருந்தும் ஒவ்வொரு இந்தியனும் ஏன் பயன் படுத்துவதில்லை?
படங்கள் : சிஎம்பீ அமீன் (சச்சோ)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!