ஷஅபான் மாதத்தின் சிறப்பு
கிப்லா மாற்றம்:
ரமழான் மாதத்தில் நோன்பு கடமை:
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்குமுன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்தது போல்உங்கள் மீதும் நோன்பு (நோற்பது)கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள்இறையச்சமுடையவர் ஆகலாம். (குர்ஆன் 2;183)
பனூ முஸ்தலக் யுத்தம்:
உமர் இப்னு கத்தாப்(ரழி) படைப்பிரிவு:
பஷீர் இப்னு சஅது(ரழி) படைப்பிரிவு:
அபூகதாதா(ரழி) படைப்பிரிவு:
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஷஅபான்மாதத்தில் அபூகதாதா(ரழி) அவர்களின் தலைமையில் 15பேருடன், நஜ்து மாகாணத்தில் உள்ள 'முஹாரிப்'என்னும் பகுதிக்கு ஒரு படையை நபி(ஸல்) அவர்கள்அனுப்பி வைத்தார்கள்.
தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்
இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
Posted by
அதிரை தென்றல் (Irfan Cmp)
Sunday, July 18, 2010
ஷஅபான்
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: (ரமழானிற்கு)பிறகு ஷஅபான் மாதத்தைவிட, வேறு எந்த மாதத்திலும் நபி(ஸல்) அவர்கள்அதிகமாக நோன்பு வைப்பவர்களாக இருக்கவில்லை.ஏனெனில் ஷஅபான் முழுவதுமே நோன்பு வைப்பார்கள்.மற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில நாட்களைத்தவிர, அதிகமான நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்என அறிவிக்கப்பட்டுள்ளது. (புகாரி,முஸ்லிம்)
ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவுஅல்லாஹுத் தஆலா தன் படைப்பினங்கள் அனைத்தின்பக்கமும் கவனம் செலுத்துகின்றான். படைப்புகள்அனைத்தையும் மன்னித்து விடுவான். ஆனால் இருவர்மன்னிக்கப்படுவதில்லை. 1.அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர். 2.எவருடனாவது விரோதம் கொண்டவர் எனநபி(ஸல்) அவர்கள் அருளியதாக அப்துல்லாஹ் இப்னுஅம்ரு(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)
இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்
நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்றதிலிருந்துபைத்துல் முகத்திஸை நோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஹிஜ்ரத் செய்த பதினேழாவதுமாதத்தில் (ஷஅபனில்) பைத்துல் முகத்தஸிலிருந்து,மஸ்ஜிதுல் ஹராம்(கஃபதுல்லாஹ்வின்) திசையைகிப்லாவாக மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆயத்தைஅருளினான்.
(நபியே), உம்முடைய முகம் (கிப்லா மாற்றக்கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம்திரும்புவதை நாம் காணுகிறோம். ஆகவே, நீர்விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை நிச்சயமாக நாம்திருப்பிவிடுகிறோம்; எனவே, உம்முகத்தை (தொழும்போதுமக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக! (முஃமின்களே) நீங்களும் எங்கிருந்தாலும் (தொழும்போதுமஸ்ஜிதுல் ஹராமாகிய) அதன் பக்கம் உங்களுடையமுகங்களை திருப்பிக் கொள்ளுங்கள். (குர்ஆன் 2;144)
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ஷஅபான்மாதத்தில் தான் ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதுகடமையாக்கப்பட்டது.
இதை "அல் முரஸீஃ யுத்தம்" என்றும்கூறப்படுகிறது. இந்த யுத்தம் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டுஷஅபான் மாதம் நிகழ்ந்ததென்றும், சிலர் ஹிஜ்ரி 6 ஆம்ஆண்டு ஷஅபான் மாதம் நிகழ்ந்ததென்றும் கூறுகின்றனர்.இப்போரில் எதிரிகள் அணியில் 10 பேர் கொல்லப்பட்டனர்.முஸ்லிம்களின் அணியில் யாரும் கொல்லப்படவில்லை.ஆனால் ஒரு அன்சாரி சஹாபி, ஹிஷாம் இப்னுஹுபாபா என்ற ஒரு முஸ்லிம் வீரரை எதிரிப்படையில்உள்ளவர் என்று எண்ணித் தவறாகக் கொலைசெய்துவிட்டார்.
இப்போரிலிருந்து திரும்பும்போது தான்அன்னை ஆயிஷா(ரழி) அவ்ர்கள் மீது, நயவஞ்சகர்கள்அவதூறு சம்பவத்தை பரப்பினர். இதனால்கவளையடைந்திருந்த அன்னையார் அவர்களுக்கு,அவர்களின் பத்தினித்தனத்தை பறைசாற்றிஅல்லாஹுத்தஆலா குர்ஆனில் அத்தியாயம் 24 இல், 11முதல் 20 வரை உள்ள வசனங்களை இறக்கி வைத்தான்.
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில்உமர்(ரழி) அவர்களின் தலைமையில் 30 நபர்களை'துர்பா' என்னும் பகுதிக்கு நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இவர்களின் வருகையை அறிந்த துர்பாவில்வசிக்கும் ஹவாஸின் கூட்டத்தினர்கள் அப்பகுதியை காலிசெய்துவிட்டு ஓடிவிட்டனர்.
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில்பஷீர் இப்னு சஅது(ரழி) அவர்களின் தலைமையில் 30நபர்களை அனுப்பி 'ஃபதக்' என்னும் பகுதியில் வசிக்கும்பனூ முர்ரா கிளையினர்மீது தக்குதல் நடத்த ஒருபடையினரையும் அனுப்பிவைத்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!