தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்.

மடிக்கணினிகளில் குறிப்பிட்ட அளவு தான் ஒலி நமக்கு கேட்கும் அந்த குறிப்பிட்ட அளவை விட மேலும் ஒலியின் அளவை அதிகமாகக் கூட்டலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. மடிக்கணினிகள் இன்று இல்லாத இடம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா இடங்களிலிலும் மடிக்கணினிகளின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. நமக்கு பிடித்த இசையின் ஒலி அளவை மடிக்கணினிகளின் குறிப்பிட்ட அளவு வரை தான் கேட்க முடியும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் மடிக்கணினிகளில் ஒலியின்  அளவை மேலும் கூட்டலாம். இதற்க்காக ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் மூலம் எப்படி இருக்கும் ஒலியின் அளவைக்க்கூட்ட முடியும் என்று சற்று வேடிக்கையாக தோன்றினாலும் பயன்படுத்திப்பாருங்கள் உண்மை புரியும். மென்பொருளின் பெயர் VLC Media player இந்த மென்பொருளை நம் கணினியில் தரவிரக்க இந்த சுட்டியை சொடுக்கவும்.


இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவியதும்,  இந்த மென்பொருளை இயக்கி நமக்கு பிடித்த ஆடியோ அல்லது வீடியோ பாடல்களை open செய்து கொள்ளுங்கள். அடுத்து படம் 1 -ல் உள்ளது போல் Volume  சொடுக்கி ஒலியின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். கண்டிப்பாக இந்தத் தகவல் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி - விண்மணி 

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்