தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

குறுஞ்செய்தி (SMS) எனும் கொடுமை


எதுவுமே எலவசமா கெடச்சா என்ன கதியாகுங்கறதுக்கு, SMS சேவை நல்ல உதாரணம். ஆரம்பத்துல ஒரு SMS க்கு ஒரு ருபாய்ன்னு இருந்து, அப்புறம் படிப்படியா குறைஞ்சு, பத்து பைசா, அஞ்சு பைசா, ஒரு பைசான்னு கடைசில ஃபிரீ SMS ன்னு ஆயிடுச்சு. இப்பவெல்லாம் சில நெட்வொர்க்ல நாம SMS அனுப்ப அவங்க காசு தர்ற மாதிரி பிளான் எல்லாம் கூட வந்துருக்காம். 

சீக்கிரமா, மலிவா தகவல்களை பரிமாற SMS ரொம்ப உதவியா இருக்குங்கறது உண்மை தான். இரத்தம் தேவை மாதிரியான அவசர நேரங்கள்ல, SMS உயிரை கூட காக்கும். ஆனா உயிரை எடுக்கற மாதிரி SMS களும் ஏராளம். ஆரம்பத்துல குட் மார்னிங், குட் நைட்ன்னு நார்மலா ஆரம்பிச்சவங்க, அது போரடிச்சு போய் ஆளாளுக்கு தத்துவம் எழுத தொடங்கி, இப்ப செல்லு வச்சுருக்கவன்லா சாக்ரடீஸ்ங்கற மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டாங்க. எங்காவது அவசரமா போயிகிட்டு இருக்கும் போது SMS வரும். எடுத்துப்பார்த்தா “வாழ்க்கை என்பது வாழைப்பழம் மாதிரி, வாய்ல போட்ட இனிக்கும், கீழே போட்ட வழுக்கும்”  னு இருக்கும்.

SMS அனுப்பும் போதுதான், நம்மாளுங்களுக்கு பாசம் பொங்கி வழியும். என் உயிரே நீதான், நட்பின் இலக்கணம் நாம் தான்னு பொங்கி வழிவாங்க. நாளைக்கு தர்றேன்னு வாங்கிட்டு போன பணத்தை தரமாட்டாங்க, ஆனா SMS ல மட்டும் நட்புக்காக உயிரே தருவேன்னு உருகுவாங்க. உயிரெல்லாம் வேண்டா, பணத்தக் கொடுடா ம....ன்னு ரிப்ளை பண்ண தோணும். 

இவங்களுக்கு எங்க இருந்துதான் இந்த ’டே’ எல்லாம் கிடைக்குதோ. Today is Red Rose Day, Smile Day, Hugging Day, Black Dress Day இப்படி எத்தன டே.. போங்கடா டேய்!. இன்னொரு இம்சை என்னன்னா இதுல எதாவது ஒரு நெம்பரை சொல்லு, உனக்கு எப்படிபட்ட பொண்டாட்டி அமையும்ன்னு சொல்றேன்னு ஜோதிட கலைமாமணி மாதிரியான SMS களும். இதுல Reply Must ன்னு எச்சரிக்கை வேற.

இதையெல்லாம் விட “Please god help us” இந்த மெசேஜை பத்து பேருக்கு பார்வேர்ட் பண்ணினா பரீட்சைல படிக்காமயே பாஸ் ஆயிடலாம்ன்னு வர்ர SMS கள். அதையும் நம்பி படிக்காம பார்வேர்ட் பண்ணிகிட்டு இருக்கற பகுத்தறிவாளர்களும் உண்டு. அதை ஸ்டூடண்ட்ஸ்க்கு அனுப்பினா பரவால்ல, பள்ளிக்கூடத்துல ஒதுங்க கூடாதுன்றதுக்காக மழைலயே நனைஞ்சுகிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஏன்யா அனுப்பறீங்க?

தமிழ்நாட்டுல அனுப்பப்பட்ட மொத்த SMS யும் பிரிச்சு போட்டு பார்த்தா, பாதிக்கு மேல ஒருத்தர் பேரு இருக்கும். அவருதான் ‘விஜய்’. அவரை நெனச்சாத்தான் ரொம்ப பாவமா இருக்கு. ரொம்ப கலாய்க்கறாங்க. இப்பல்லாம் அவர கலாய்ச்சு வ்ர்ற SMS களை படிக்கறதுக்கு பதிலா, அவரு படத்தையே பார்க்கலாம் போலன்னு தோணுது. 


இதுல பாதிப்பேருக்கு மேல தமக்கு வர்றத பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் தான். பில்லை கட்டுடா நாயேன்னு வந்துருக்கற SMS ஐ கூட படிக்காம பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் உண்டு.


SMSன்னால ஏற்படற இன்னொரு கொடுமை என்னன்னா, ரொம்ப நாள் கஷ்டப்பட்டு பலபேரு கால்ல விழுந்து ஒரு ஃபிகர் நெம்பர் வாங்கி ’hi' ன்னு அனுப்பிட்டு ஆவலா வெயிட் பண்ணுவோம். கரெக்டா 2 வது நிமிசத்துல மொபைல் ரிங்கும். ஆஹா சிக்கிடிச்சுடா மயிலுன்னு ஓபன் பண்ணி பார்த்தா, “ஒரு சூ ல இருந்து மூனு குரங்கு தப்பிச்சிடுச்சாம்...” னு நம்மை டேமேஜ் பண்ற SMSஐ பங்காளி ஒருத்தன் அனுப்பியிருப்பான். அப்ப வரும் பாருங்க கோபம். நல்ல வேளை நமக்கெல்லாம் நெத்திக்கண் இல்லை. 


உபயோகமா அனுப்புற SMSகள், SMS மூலமா உரையாடல் எல்லாம் தப்பே இல்ல. குறுஞ்செய்தி எல்லாம் குமரிகள் அனுப்பும் போதும், குமரிகளுக்கு அனுப்பும் போதும்தான் குதூகலமா இருக்கும். நேரங்கெட்ட நேரத்துல, மொக்கையா வர்ர குறுஞ்செய்திகள் கடுப்பை தான் உண்டாக்கும்.  அதனால தத்துவஞானிகளெல்லாம் போயி புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க. ஏன்னா, “வாழ்க்கை என்பது வாழக்கா பஜ்ஜி மாதிரி...”

3 உங்களின் கருத்து (Comments):

{ m.nainathambi.அபூஇப்ராஹீம் } at: September 14, 2010 at 2:32 PM said...

///இதுல பாதிப்பேருக்கு மேல தமக்கு வர்றத பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் தான். பில்லை கட்டுடா நாயேன்னு வந்துருக்கற SMS ஐ கூட படிக்காம பார்வேர்ட் பண்ற ஆசாமிகள் உண்டு.///

நல்லாவே ரசித்தேன் - மெய்யாலுமே சரிதான் இதுவே என்கூட வேலை செய்யும் யெமன் நாட்டைச் சேர்ந்தவருக்கு வந்த SMS from bank "PLEASE DO NOT DELAY YOUR PAYMENT Bank is expecting your payment today" இதனை அப்படியே எனக்கு அனுப்பிவைத்தார் அதனைப் பார்த்ததும் அவரிடமே கேட்டேன் ஏன் எனக்கு அனுப்பினாய் என்று ஆனால் அவன் சொன்னதோ நல்லா படி அங்கே "your payment"ன்னு இருக்கு "my payment"ன்னு இல்லை அதான் எல்லோருக்கும் அனுப்பினேன்னு !! :)

{ தாஜுதீன் (THAJUDEEN ) } at: September 14, 2010 at 4:16 PM said...

//இதையெல்லாம் விட “Please god help us” இந்த மெசேஜை பத்து பேருக்கு பார்வேர்ட் பண்ணினா பரீட்சைல படிக்காமயே பாஸ் ஆயிடலாம்ன்னு வர்ர SMS கள்.//

சகோ. இர்ஃபான் நல்ல பகிர்வு.

என்னாதான் டெக்னாலஜி வந்தாலும், நம்ம மக்கள் பழைய மூட நம்பிக்கையை அப்படியே தினிச்சுடுவானுங்க

{ அதிரை தும்பி } at: September 21, 2010 at 9:23 AM said...

தாஜூதீன் SAID

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்