தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்
ஒரு கட்சி துவங்கினால் என்ன!
நமக்கு எல்லாவற்றிலும் சீஸன் உண்டு. அந்தந்த சீஸனில் அதற்கு தகுந்தால் போல் நம் "பற்று" மாறிக் கொண்டே இருக்கும். இப்போது தேர்தல் சீஸன்.
கட்சி மன்றங்களை அமைத்து அங்கே அரசியலுக்கு சம்மந்தமே இல்லாத ஆளை அங்கே அமர்த்தி வேடிக்கை பார்ப்பது தற்போது புதிய டிரான்ட் என்னவெனில் பேண்ட் இசைக்குழுவை அழைத்து திறந்த வேனில் தெருத் தெருவாக உலா வருவது ஏன்னா வேடிக்கைகளை பார்த்து தானே மக்களை கவர்வது, கந்தூரியில் உலா வருவதை வேடிக்கையென பார்த்து மகிழும் நம்மூர்காரர்களை நன்றாக புரிந்துள்ளனர் என்பதே இந்த வேடிக்கை நிகழ்வு,
எத்தனை நாள் தான் கட்சிகளின் காமெடி டிராமாக்களை பார்த்துக் கொண்டே இருப்பது? நமக்கு போரடிக்காதா சார்? எத்தனை நாள் தான் ஓட்டை மட்டும் போடுவது? மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படும் ஆசை நமக்கு மட்டும் வாராதா என்ன?
எனவேதான் நாமே ஒரு கட்சி துவங்கினால் என்ன என்று ஒரு யோசனை. திகைத்து நிற்காதீர்கள். முதுபெரும் தலைவர்கள் இருந்த நாட்டில் கட்சியும் அரசியலும் அத்தனை மலிவான கிள்ளுக்கீரை விஷயமாகி விட்டதே என்று நினைக்காதீர்கள். இப்பொழுதெல்லாம் கட்சி துவங்க ஒரு விவஸ்தையும் தேவையில்லை என்று உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதானே? கட்சியமைத்து தேர்தல் காலங்களில் நடிகை, நடிகர்களை பிரச்சாரத்திற்கு அழைத்து நம்ம தமிழக மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கலாம் என்பது அன்றாட நமது தமிழக கட்சிகளின் நிலை இதொன்றும் புதிதல்ல.
கட்சி என்றால் கொள்கை வேண்டுமே சார்... என்ன கொள்கை வைக்கலாம்? தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தமிழை காப்பாற்றுவது முக்கிய கொள்கையாக இருக்கிறது. தமிழுக்காக உயிர் விடும் தலைவர்கள் நிறைய பேர் இருப்பதால் தமிழை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம்.
பாவம் தமிழ்.
மேடை பேச்சில் மயங்கி மயங்கியே தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றிய பெருமை கொண்டவர்கள் இல்லையா நாம்? எனவே நமது கொள்கைகளும் கொஞ்சு தமிழ் மொழியில் இப்போதைய கட்சிகளை மிஞ்சுவதாக இருக்க வேண்டாமா? உதாரணமாக,
"ஊழல் அற்ற சூழலுக்கு ஊது குழலாக இருந்து சூதுவாதற்ற அரசு அமைப்போம்" என்று முழங்கலாம்...
கச்சத்தீவு பற்றி பேசாமல் கட்சி நடத்த முடியுமா? "ஆதித் தமிழன் அரிசியை உலையிலும் கடலிலே வலையையும் போட்ட வரலாற்றை பறைசாற்றும் கச்சத்தீவை மீட்க இமயத்தின் உச்சதிற்கும் சென்று போராடுவோம்" என்று பொறி பறக்க பேசினால் தானே நாலு பேராவது நம்புவார்கள். கச்சத்தீவுக்கும் இமயமலைக்கும் என்ன சம்பந்தம் என்று யார் கேட்கப் போகிறார்கள்?
"ரோடு போடுவோம்" என்று சொன்னால் என்ன சார் சுவாரஸ்யம்? "காலை மாலை வேளையில் நீங்கள் வெளியே போகையில் காலை வைக்க சாலை தருவோம்" என்றால் கட்சியின் கவிஞர் அணிக்கு தலைமை தாங்கலாமே. ரோடு போட்டோமா இல்லையா என்று யாருக்கு கவலை?
"ஊசியாய் குத்தும் விலைவாசியை பற்றி யோசி தமிழா யோசி" என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசலாம்...
நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும்.
நம் கட்சியின் தலைவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வரக்கூடும். அவர்களை எல்லாம் பேர் மட்டும் சொல்லி அழைத்தால் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாம் என்ற பழி நேர்ந்து விடாதா? சாதா பேரில் என்ன சார் இருக்கிறது? பட்டம் வேண்டும் சார் பட்டம்... எனவே, நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும். "தஞ்சையின் தங்கமே" "நெல்லையின் நெருப்பே" "மதுரையின் குதிரையே" "திருச்சியின் திருப்பமே" "கொங்கின் சங்கே" என்று என்னவேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் காக்கா...
கொள்கையெல்லாம் கிடக்கட்டும் முதலில் கட்சிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. வல்லினம் மெல்லினம் இடையினம் இவற்றில் எல்லாவற்றையும் சீட்டு போட்டு குலுக்கிப் பார்த்தாயிற்று. எந்த காம்பினேஷன் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிப் பெயரின் சுருக்கம் மாதிரியே இருக்கு. பேசாமல் "மக்களே கட்சியின் உயிர் அப்புறம் எதற்கு பெயர்?" என்று ஒரே போடா போட்டு விடலாமா?...காக்கா
அது சரி தேர்தல் நெருங்கி விட்டதே நாற்பது தொகுதிகளும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்று கேட்கிறீர்களா? கவலையே இல்லை காக்கா. கட்சியிலே மொத்தம் இருபதே பேர்தான் என்றால் கூட ஆளுக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமே! "அகில இந்திய" என்ற சொல்லை கட்சியின் பெயரின் முன்னே சேர்த்தால் போதும். கட்சியின் பலம் பற்றி யார் காக்கா கேள்வி கேட்பது? அப்படியென்றால் "சைபர்" தான் கட்சியின் ரிசல்டா என்று கேட்கிறீர்களா? "பூஜ்யம் வெறும் கணக்கு ராஜ்ஜியமே எங்கள் இலக்கு" என்று சிரித்துக் கொண்டே பேட்டி கொடுக்க நமக்குத் தெரியாதா என்ன?..இன்னொன்றும் சொல்லலாம் தோல்வியே வெற்றியின் முதல் படி இதற்க்கு ஏன் தலைவா கவலைபடறே இப்படி என்று...
வாங்க காக்கா வாங்க பொதுக்குழு, செயற்குழு, பாராளுமன்ற குழு, பட்டிமன்ற குழு, நிர்வாகக்குழு, கலைக்குழு கவிதைக்குழு என்று எல்லா குழுக்களிலும் தலைவர் செயலாளர் பதவிகள் காத்திருக்கின்றன மக்கள் தொண்டாற்றும் மாபெரும் பணிக்கு உவகையுடன் அழைக்கிறோம் வாருங்கள்...! என்று விளம்பரமிட்டு தொடங்கலாம் அரசியல் ஒரு சாக்கடை என்று சொன்னவர்களே முதல் வரிசையில் நிற்பர்.
படித்து முடித்து விட்டீர்களா? அநேகமாக இதற்குள் புதிதாக ஏதேனும் ஒரு கட்சி உண்மையிலேயே உருவாகியிருக்கக்கூடும்...அதனாலென்ன? தேர்தல் என்பது நம்மை பொறுத்தவரை அலுவலகத்தில் உணவு வேளையிலும் வீட்டிலும் அமர்ந்தபடி திகட்டத் திகட்ட வெட்டிப் பேச்சு பேசக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். பொழுது போக்கு. வேறென்ன அக்கறை? நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நமக்குத் தெரியாதா என்ன?
உதாரணமாக, கக்கன் போன்ற ஒருவரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்க விட்ட கூட்டம் நாம். காலம் மெதுவாகத்தான் வேலை செய்யும். இப்போது இருப்பவர்கள் போதாதென்று புதிது புதிதாய் தலைவர்கள் வருவார்கள், நாட்டையும் நம்மையும் சுரண்டுவார்கள்.
- அதிரை தென்றல் (Irfan)
நன்றி கலி காலம்
பொருட்காட்சியில் சில மணி நேரம்....
சென்னையில் படுஜோராக
பொழுதை கழிக்க தமிழக அரசால் பொருட்காட்சி என்னும் நிகழ்ச்சியை கிட்டதட்ட ஓரிரு
மாதங்களாக நடத்தி வெளியூர் வாழ் அனைத்து குடும்பத்தினர்களுக்கும் குடும்பத்துடன்
கண்டுக்கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் அதுமட்டுமல்ல இராட்சத ஊஞ்சல் என்று
குட்டிஸ் மனதை கொள்ளைகொள்ளும் அழவிற்கு அசத்தியிள்ளனர் தமிழக அரசுக்கு முதலில் நம்
நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
வழக்கம்போல் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் இரயில், அறிவியல் அரங்கம்
ஆகியவையும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
சரி நம்ம காட்சிக்கு
வருவோம் நான் மற்றும் என்னுடன் சேர்ந்த நாவர் (நண்பர்கள்) மொத்தம் ஐவர் சேர்ந்து
சென்றோம் உள்ளே நுழைந்தது வாசனையுடன் மிக அற்புதமான வரவேற்ப்பு (கூவம் தானுங்க) ஒரு
மாதிரியாக முகத்தை சுழித்துக்கொண்டு உள்ளே சென்றோம். இரு சக்கர வாகனத்தில் நடுவே
வழிமறித்து டிக்கெட் என்றார் கனத்த குரலுடன் எடுத்து பின் உள்ளே சென்றோம்.
நிரம்பி வழிந்த
கூட்டங்கள் அனைத்து தரப்பினரும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் வாங்கி
பயன்பெறும் வகையில் நிறைய அங்காடிகள் அதில்
பல இடங்களில் மின்னியது "டெல்லி அப்பளம்" ஒவ்வொருவரும் கையில் வைத்து
குடும்பமே சுவைத்து அதற்கு போட்டி போட்டுக்கொண்டு ஆனந்தமாக கண்டுகளித்தது
இதிலல்லவா சந்தோஷம் கோடானகோடி கொடுத்தாலும் இதற்கு ஈடாகாது.
மேலும் காட்சியகத்தில் ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ரயில்வே நிலையம்
மற்றும் சென்னையில் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் பழைமையான கட்டிடங்கள் ஓரிடத்தில்
காண்பது புதுமை, ஆச்சி மார்க் கடையில் பெரும் கூட்டம் வாங்குவதற்கு சிலரே இருந்த
நிலையில் பெரும்பாலனோர் ஓசியில் (புதியதாக) ருசித்து பார்த்த மீன்/இறால் ஊறுகாய் வகைகள்.
அறிவுக்குத் திறனான புத்தகங்கள் ஒரு பகுதியில் இடம்பெற்றிக்கலாம் சற்று வருத்தமே, சென்ற மாதங்களில்தான் சென்னையில் மிக பிரமாண்டமான புத்தக கண்காட்சி நிறையுற்றது குறிப்பிடத்தக்கது.
பொருட்காட்சியை காண வரும் பொதுமக்களுக்காக நகரின் முக்கிய இடங்களில் இருந்து
பொருட்காட்சிக்கு கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தவும் தேவையான வசதிகளைச் செய்துள்ளது தமிழக
அரசு.
நாம் அறிய வேண்டிய மோட்டார் இன்சூரன்ஸ்!
சாலை வழிப் பயணம் என்பது
ஆபத்துகள் நிறைந்தவையாகும். ஒரு விபத்து உயிர்களை
பலி கொள்வதோடு, குடும்பங்களையும் நொடியில் சிதைத்து விடுகிறது. அது போன்ற ஒரு
துயர நிகழ்வின் போது, தேவைப்படக்கூடிய நிதியுதவியை
உடனடியாக வழங்கி உதவக்கூடியது இன்சூரன்ஸ்.
மோட்டார் இன்சூரன்ஸின் சில வடிவங்கள் சட்டத்தின்
கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனவே, மோட்டார் இன்சூரன்ஸ்
பற்றி அறிந்து வைத்துக் கொள்வது
மிகவும் அவசியம். மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்ய வேண்டியவை மற்றும்
செய்யக் கூடாதவை பற்றி இங்கே
பட்டியலிடப்பட்டுள்ளன:
செய்ய வேண்டியவை:
* இது போன்ற பாலிஸிகளை யார்
மூலமும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், உங்கள் வாகன டீலர்
மூலமாக மட்டுமே பெற வேண்டும்
என்று எவ்வித நிபந்தனையும் கிடையாது
என்றும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள்
வாகன டீலர் மூலம் இன்சூரன்ஸுக்கு
ஏற்பாடு செய்திருந்தாலும், விண்ணப்பப் படிவத்தை நீங்களே நிரப்பவும்.
* விண்ணப்பப்
படிவத்தை மிகவும் கவனமாகவும், முழுமையாகவும்,
உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் நிரப்புங்கள்.
* பரஸ்பர
ஒப்புதலுக்குப் பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின்
நகல் ஒன்றை பத்திரமாக ஆவணப்படுத்திக்
கொள்ளுங்கள்.
* பாலிஸி
பற்றிய தகவல் தொகுப்பேட்டை கவனமாகப்
படித்துப் பார்த்து, அந்த இன்சூரன்ஸுக்குள் அடங்கக்கூடியவை
எவை, அடங்காதவை எவை என்பது பற்றி
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
* இதில்
கூடுதலாகப் பெறக்கூடிய பாதுகாப்பு பற்றிய தகவல்களை கேட்டு
அறிந்து கொண்டு, அவற்றில் எது
உங்களுக்கு தேவை என்பதை தேர்வு
செய்து கொள்ளுங்கள்
* ஆர்சி
புத்தகம், பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ்
போன்ற ஆவணங்களை சரிபார்ப்புக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பியுங்கள்.
* இந்த
ஆவணங்கள் அனைத்தையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமானது.
செய்யக்கூடாதவை:
* உங்கள்
விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேறு யாரையும்
அனுமதிக்காதீர்கள்.
* படிவத்தில்
எந்த கட்டத்தையும் நிரப்பாமல் வெறுமையாக விட வேண்டாம்
* உங்கள்
பாலிஸியை இடைவெளி விடாது உரிய
நேரத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
* ஏற்கெனவே
லைசென்ஸ் எடுக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்கும் போது,
சரியான நடைமுறை என்ன என்பது
பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள்
இன்சூர் செய்யும் வாகனத்தின் உபயோகத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைக்
கொடுப்பது தவறான செயல்.
அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி [காணொளி]
கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பில் பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்...
அந்த நிகழ்வின் முழு காணொளி தொகுப்பு!
அந்த நிகழ்வின் முழு காணொளி தொகுப்பு!
அதிரை ஈத் மிலனில் பெருநாள் சந்திப்பு விழா அழைப்பு!
அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் வருகின்ற 20.10.2013 அன்று காலை 10 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதில் நமதூருக்கு அருகில் உள்ள நமது தொப்புகொடி உறவுகளான இந்து , கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம் M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன்(சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்)
மற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி )ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
இந்நிகழ்வுக்கு தலைமையாக ஜனாப் இப்ராஹிம் அன்சாரி அவர்களும் ,வரவேற்ப்புரை ஜனாப் ஜமீல் முகமது சாலிஹ் அவர்களும் முன்னிலை வக்கீல் ஜனாப் முனாஃப் BA,BL (நோட்டரி பப்ளிக் & பிரமாண ஆணையர் ) அவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி துறை கா, மு கல்லூரி )அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .
எனவே இந்த சமூக நல்லிணக்க விழாவில் தாங்களும் கலந்து கொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான மாற்று மத அன்பர்களையும் அழைத்துவர கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு: கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
அதிரை ஈத் மிலன் கமிட்டி.
அதிராம்பட்டினம்
adiraieidmilan.blogspot.com
குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 3)
பங்கிடும் முறை
சில இடங்களில்
குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு
உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து
வரு
கிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறுதான் கொடுக்கவேண்டும், இவ்வளவுதான் உண்ணவேண்டும் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். அதேசமயம், இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம்
எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.
குர்பானி
கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக்
கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். 'அல்ஹஜ்' அத்தியாயத்தின் 28 வது வசனத்தில் 'அவற்றை நீங்களும் உண்ணுங்கள்;
வறிய ஏழைகளுக்கும்
வழங்குகள்' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ஆட்டை உரிப்பவரின்
கூலி
"நபி(ஸல்)அவர்கள்
குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை
என்னிடம் ஒப்படைத்தபோது, அதன் இறைச்சியையும், தோலையும் விநியோகிக்குமாறும்,
ஆட்டை உரித்து அறுத்து
பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டனர்"
என்று அலி(ரலி)அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நூல்:
புகாரி(1717)
இந்த
ஹதீஸிலிருந்து அறுப்பவர்களுக்கும் உரிப்பவர்களுக்கும் தனியாகத்தான் கூலி
கொடுக்கவேண்டுமே தவிர குர்பானியின் எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில்
கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
விநியோகம்
செய்தல்
குர்பானி
கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி
(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில்
முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்டபோது, 'நீங்கள் உண்ணுங்கள்; வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். நூல்: புகாரி(1719)
எனவே குர்பானி
கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக்
கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
பிற ஊர்களுக்கு
எடுத்துச் செல்லலாமா?
மக்காவில்
குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களிடம்
நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம்
பெற்றுள்ளது. ஆக, குர்பானி இறைச்சியை தேவைப்பட்டால் பிற
ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் விநியோகிக்கலாம்.
ஒரு
குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் கொடுப்பது?
நபி(ஸல்)அவர்கள்
காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ
அய்யூப்(ரலி)அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது
குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு
மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர்
காணக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று விடையத்தார்கள்.
அறிவிப்பவர்: அதா இப்னு
யஸார்; நூல்கள்: திர்மிதீ (1425), இப்னு மாஜா (3137), முஅத்தா (921)
எனவே ஒருவர்
தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி
கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.
அதேசமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்பதற்கும் தடை எதுவுமில்லை. நபி(ஸல்)
அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானிக் கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப்
பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான்
பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர்: அலீ
(ரலி), நூல்: புகாரி (1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ
ஒட்டகத்தையோ குர்பானிக் கொடுக்க விரும்புபவர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ
அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.
நபி(ஸல்)அவர்கள்
ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் ஏழு பேர் சார்பாக ஒரு ஒட்டகத்தையும் ஏழு
பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம் (2323)
இந்த ஹதீஸ்
மூலம் ஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பது தெளிவானாலும், ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேர்வதற்கும் இன்னொரு ஹதீஸ் ஆதாரமாக
உள்ளதை அறிய முடிகிறது.
நாங்கள் நபி(ஸல்)
அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில்
ஏழுபேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள்
கூட்டு சேர்ந்தோம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: திர்மிதீ(1421), நஸாயீ(4316), இப்னுமாஜா (3122)
ஆக, ஒட்டகத்தைப் பொறுத்தவரை ஏழு பேரும் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம், அல்லது 10 பேரும் கூட்டு சேர்ந்துக் கொடுக்கலாம்.
நம் தமிழகத்தில்
சிலர் ஆட்டைதான் குர்பானி கொடுக்கவேண்டும்; அந்தளவு
வசதியுள்ளவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். இந்தியாவில்தான்
ஆட்டின் விலை அதிகமாக உள்ளதே தவிர,
வெளிநாடுகளை எடுத்துக்
கொண்டால் ஆட்டைவிட மாட்டின் விலைதான் கூடுதலாக இருக்கும். எனவே இந்தியாவைப்
பொறுத்தவரை ஆடு கொடுக்க வசதியில்லாதவர்கள் குர்பானி கொடுக்க விரும்பினால் ஏழு பேர்
சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டைக் குர்பானி
கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை
மேலே நாம் பார்த்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பயணி மற்றும்
பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?
வீட்டில்
ஆண்களின் உதவியின்றி குடும்பத்தை நடத்தும் பெண்கள், வசதிப்
பெற்றிருந்தால் அவர்களும் தங்களுக்காக குர்பானி கொடுக்கலாம். குர்பானி என்பது ஆண்
பெண் ஆகிய இரு பாலருக்கும் உரிய வணக்கமாகும். அதுபோல் ஒருவர் தன் சொந்த ஊரில்தான்
கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனை ஏதுமில்லை.
பிரயாணத்தில் இருப்பவர்களும் குர்பானி கொடுக்கலாம். நபி(ஸல்) அவர்கள்
ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு சென்று தனது மனைவிமார்களுக்கு குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நாங்கள் மினாவில்
இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் 'இது என்ன?' என்று கேட்டேன். மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் தம் துணைவியர்களுக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என்று
பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(5548)
இறந்தவர்கள்
சார்பாகக் குர்பானி கொடுக்கலாமா?
நபி(ஸல்)அவர்களுடைய
வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப் பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள்
மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹீம், மகள் ஜைனப்(ரலி), மனைவி கதீஜா(ரலி), சிறிய தந்தை அபூதாலிப் ஆகியோர் மரணித்தனர்.
இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி(ஸல்) அவர்களால் நேசிக்கப்பட்ட
இவர்களுக்கு முதலில் குர்பானிக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் உயிருடன் வாழும் தன்
குடும்பத்தார்களுக்கு கொடுத்தார்களே தவிர மரணித்தவர்களுக்காக அல்ல!
அதே சமயம்
இறந்தவர் மரணிப்பதற்கு முன்பு குர்பானி கொடுக்கும்படி யாரிடமாவது கூறிச்
சென்றிருந்தாலோ அல்லது அவர் ஆசைப்பட்டிருந்தாலோ அவர் சார்பில் கொடுக்கலாம். ஹஜ்
செய்வதாக நேர்ச்சை செய்துவிட்டு இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் அதை
நிறைவேற்ற நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதின் மூலம் மேற்கூறிய
சட்டமும் நமக்கு கிடைக்கிறது.
(உக்பா இப்னு
ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று '(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துக் கொண்டு (அதை
நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார்' என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)' என்றார். நபி(ஸல்) அவர்கள்,
'அல்லாஹ்வின் கடனை
நிறைவேற்று; கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமைப்
படைத்தவன்' என்றார்கள்.
அறிவிப்பவர்:இப்னு
அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி (6699)
நபி(ஸல்)
அவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?
நாங்கள் நபி(ஸல்)
அவர்களுக்காக ஒரு குர்பானி கொடுக்கிறோம் என்று சிலர் வழக்கமாக்கி வருகிறார்கள்.
இதற்கு அல்லாஹ்வின் கட்டளையோ நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலோ எதுவுமில்லை. எனவே
இதுவும் மார்க்கத்தில் இல்லாததுதான்.
குர்பானிப்
பிராணியைப் பயன்படுத்தலாமா?
குர்பானிக்
கொடுப்பதற்காக வாங்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம்
ஆகியவற்றின் பாலை அருந்துவதையோ, அவற்றின் மீது பயணிப்பதையோ, அதன் மீது சுமைகளைத் சுமத்துவதையோ அல்லது அவைகளை உழுவதற்கு பயன்படுத்துவதையோ
தவிர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் அவற்றின் முடிகளை வெட்டியெடுத்து
பயன்படுத்தவும் கூடாது. ஆனால் வெட்டுவதினால் பிராணிகளுக்கு எதுவும் பயன் உண்டு
என்றால் வெட்டிக்கொள்ளலாம்.
அதேசமயம் மிகவும்
தேவையுள்ள சந்தர்ப்பத்தில் மட்டும் குர்பானிப் பிராணியை பயன்படுத்திக் கொள்வதற்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு ஒட்டகத்தைத் தவிர வேறு ஒட்டகம்
இல்லை. இப்போது இவர் வேறு ஒட்டகத்தை பெறும் வரைக்கும் குர்பானி கொடுக்கவேண்டிய
ஒட்டகத்தில் பயணிக்கலாம். அதிலிருந்து பால் கரந்து அருந்திக் கொள்ளலாம். ஆனால்
மற்றொன்று இருக்கும்போது இதை பயன்படுத்தக் கூடாது. ஆடு, மாடுகளுக்குரிய சட்டமும் இதுபோன்றுதான்.
ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப்பற்றிக்
கேட்கப்பட்டது. அவர்கள் நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் அதில் ஏறிச் செல்லவேண்டிய
நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும்வரை முறையோடு அதில்
ஏறிச் செல்க!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ்(ரஹ்); நூல்:முஸ்லிம்(2346),(2347), நஸாயீ(2752),அபூதாவூத்(1498), அஹ்மத்(14230)
மேலும் நபி(ஸல்)
அவர்கள் ஒரு நபித்தோழர் சிரமத்துடன் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு
சென்றதைப் பார்த்தபோது அதில் ஏறி சவாரி செய்யும்படி கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒருவர் தமது
குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள்
"அதில் ஏறிக் கொள்ளும்" என்றார்கள். அதற்கவர் "இது குர்பானி
ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்"
என்றார்கள். மீண்டும் அவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும்
"(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி); நூல்:புகாரி(1690)
நபி(ஸல்) அவர்கள்
சிரமத்தின்போது பயணிப்பதற்கு சலுகை வழங்கியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில்
பயணிப்பதற்கு கால்நடைகள் பெருமளவில் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், பால் கரப்பது போன்ற மற்ற விஷயங்களிலும் கஷ்டமான சூழ்நிலையில் இதுபோன்றே நமக்கு
அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பொது
நிதியிருந்து குர்பானி கொடுத்தல்
வசதியுள்ளவர்கள்
மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி(ஸல்) அவர்கள்
நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய 'ஜகாத்' என்ற பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக்
கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்பக் காலத்தில் இரண்டு நாட்கள்
தொடர்ந்து சாப்பிடக்கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார
முன்னேற்றத்தை எட்டியது. இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி
கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானிப் பிராணிகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்
வழங்கினார்கள்.
நபி(ஸல்) அவர்கள்
குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம்
நிரம்பிய ஆட்டுக் குட்டிதான் கிடைத்தது. 'அல்லாஹ்வின்
தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டிதானே கிடைத்துள்ளது' எனக் கூறினேன். 'அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி); நூல்கள்: புகாரி(5547), முஸ்லிம் (3634)
பொது
நிதியிலிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி(ஸல்) அவர்களது
காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிருந்து அறிந்துக் கொள்ளலாம்.
அல்லாஹ் மிக
அறிந்தவன்!
(முற்றும்)
(இதைத்
தொகுப்பதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டுமாக!)
நன்றி : பயணிக்கும் பாதை
குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 2)
அடையாளமிடுதல்
அதிகமான
ஆடுகளையும் மாடுகளையும் வைத்திருப்பவர்கள் குர்பானிக்கு பொருத்தமானதை அவற்றில்
தேர்வுசெய்து அதற்கு அடையாளம் இட வேண்டும். அப்படியில்லாமல் பெருநாளன்று இருக்கும்
கால்நடைகளில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றைப் பிடித்து அறுத்துவிடக் கூடாது.
அடையாளம் இடுவது கட்டாயம் இல்லையென்றாலும் முறையாக தேர்வு செய்யப்பட்ட குர்பானிப்
பிராணி மற்றப் பிராணிகளுடன் குழம்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும், குர்பானிக் கொடுப்பதை ஏழைகள் அறிந்துக்கொள்ள
வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்)அவர்கள் காலத்தில் அடையாளமிடக்கூடிய வழக்கம்
இருந்தது. இன்று பெரும்பாலும் குர்பானிக்கென்று பிரத்யேகமாக பிராணிகள்
வாங்கப்படுவதால் அடையாளமிட வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அறுக்கும் அன்று வரை
விற்பவர்களிடத்திலேயே விட்டு வைப்பவர்களும், அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்களும்
இம்முறையைக் கையாளுவதே சிறந்தது.
அல்லாஹ்வின்
தூதர்(ஸல்)அவர்களின் பலி ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயேத்
திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் (அவற்றின்) கழுத்தில்
போட்டு அவற்றுக்கு அடையாளச் சின்னமிட்டு இறையில்லம் கஃஅபாவிற்கு அவற்றை அனுப்பி
வைத்தார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(2335), முஸ்லிம்(2549)
சிலர்
குர்பானிக்காக தேர்வு செய்யப்பட்ட ஒரு நல்ல பிராணியை வாங்காமல், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் அதைவிட
மட்டமான தரத்தில் உள்ள பிராணியை வாங்குவதையும் காண்கிறோம். குர்பானிப் பிராணிகள்
தரமானதாக இருக்கவேண்டுமே தவிர, அவ்வாறெல்லாம்
செய்யக்கூடாது. முடிந்தவரை எந்த விதத்திலும் தரம் குறையாததாக பார்த்துக் கொள்ள
வேண்டும்.
குர்பானிப்
பிராணிகள் எவ்வாறு இருக்கவேண்டும்?
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய பிராணிகளில் குர்பானி
கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் பார்த்தோம். அவற்றில் நான்கு குறைகள் உள்ளவை
குர்பானி கொடுப்பதற்கு ஏற்றவையல்ல.
1. வெளிப்படையாகத்
தெரியக்கூடிய குருட்டுத் தன்மை
2. வெளிப்படையாகத்
தெரியக்கூடிய நோய்
3. வெளிப்படையாகத்
தெரியக்கூடிய ஊனம்
4. கொம்பு முறிந்தது
ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
'அல்லாஹ்வின்
தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை
இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள்,
'உனக்கு எது
விருப்பமில்லையோ அதை விட்டுவிடு; மற்றவருக்கு அதை
ஹராமாக்கிவிடாதே' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்: நஸயீ(4293)
இந்த ஹதீஸின்
அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால்
தவிர்த்துக் கொள்ளவேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க
விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை
இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆண்மை நீக்கம்
செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் ஆண்மை
நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி
கொடுத்துள்ளதாக அபூராபிஃ(ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மத் இமாம் தனது நூலில்
பதிவு செய்துள்ளார்கள்.
பெண் ஆட்டை
குர்பானி கொடுக்கலாமா?
பெட்டை
ஆடுகளையும், கிடாய்களையும்
நம் மக்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சில பகுதிகளில் பெட்டை ஆடுகள்
சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர். சாதாரணமான
நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக்கூடாது எனக் கருதக்கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே
தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும்
நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
உண்பதற்கு
அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும்
சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்பவேண்டும். பறவையினங்களில் இதை ஏற்கக்
கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர்.
குர்பானி
கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானது என்று திருக்குர்ஆனிலும்
கூறப்படவில்லை. நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும்
சொல்லப்போனால் குர்பானி பற்றிக் கூறும் போது "ஜத்வு" என்று ஆண்பால்
கூறப்பட்டுள்ளது போலவே "ஜத்அத்" என்று பெண்பாலும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் "முஸின்" என்று ஆண் பாலாகவும் "முஸின்னத்" என்று
பெண்பாலாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைதான் குர்பானி கொடுக்கவேண்டும்
என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதே சமயம்,
குட்டியை ஈன்று
பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள்
கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும் பாலுக்கும்
ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு, குட்டிப்போட்டு பால்தரும் பிராணிகளை
அறுக்கக்கூடாது.
அவர்(ஒரு
அன்சாரித் தோழர்)'இதை உண்ணுங்கள்!'
என்று கூறிவிட்டு (ஆடு
அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள்,
'பால்தரும் ஆட்டை அறுக்க
வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்(3799)
எத்தனை வயதுள்ள
பிராணிகள் குர்பானிக்கு ஏற்றவை?
குர்பானி
கொடுக்கவேண்டிய ஆடு, மாடு ஒட்டகம்
ஆகிய மூன்றில், குர்பானிக்காகத்
தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நீங்கள் 'முஸின்னத்' தவிர வேறெதனையும் (குர்பானிக்காக)
அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர! அவ்வாறு சிரமமாக இருந்தால்
வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள)தை அறுங்கள் என நபி(ஸல்)அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி);
நூல்:முஸ்லிம்(3631)
பருவமடையும்
பருவத்தில் உள்ள பிராணிகள் 'முஸின்னத்'
எனப்படும். பெரும்பாலும்
ஒட்டகம் ஆறு வயதிலும், மாடுகள் மூன்று
வயதிலும், ஆடுகள் இரண்டு
வயதிலும் பருவமடையும். இந்தக் கணக்கு உத்தேசமானதுதான். பருவமடையும் வயது பல
காரணங்களால் வித்தியாசப்படும். பற்கள் விழுதல், துணை தேடுவது போன்றவற்றை வைத்து, அது சம்பந்தமான அறிவுள்ளவர்கள் அவை
பருவமடைந்துவிட்டதைக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆக, 'முஸின்னத்தை குர்பானி கொடுங்கள்' என்றால் 'பருவமடைந்ததைக் குர்பானி கொடுங்கள்' அல்லது 'அந்த பருவத்தில் உள்ளதை' என்பது பொருள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள
வேண்டும். இத்துறையில் அனுபவமுள்ளவர்களிடம் வெள்ளாடு, செம்மறியாடு, மாடு ஆகியவை எத்தனை வருடம், எத்தனை மாதத்தில் பருவமடையும் என்று கேட்டு
அறிந்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
பொதுவாகவே
பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' எனக் கூறி அறுப்பார்கள். குர்பானிப்
பிராணிக்கும் அதுபோலவே செய்தார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்)
கட்டளையிட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், 'ஆயிஷாவே! கத்தியை எடுத்து வா; அதைக் கல்லில் தீட்டி கூர்மையாக்கு' என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை
எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள்.
அப்போது 'பிஸ்மில்லாஹ்'
என்று கூறிவிட்டு,
'இறைவா! இதை முஹம்மதிடம்
இருந்தும், முஹம்மதின்
குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின்
சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக!' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்:முஸ்லிம்(3637)
முஸ்லிம் நூலில்
இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று
நபி(ஸல்)கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள்
பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும்
கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே
அறுப்பவர்கள் 'பிஸ்மில்லாஹி
வல்லாஹு அக்பர்' எனக்கூறி அறுக்க
வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
"ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு!" எனும்
ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
யார் அறுப்பது?
நபி(ஸல்)அவர்கள்
மதீனாவில் குர்பானி கொடுத்தபோது தமது கையால் தாமே அறுத்திருக்கிறார்கள் என்று
புகாரி, முஸ்லிம் உட்பட
பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் முடிந்தவரை
மற்றவர்களை வைத்து அறுக்காமல் நாமே குர்பானிப் பிராணிகளை அறுத்துக் கொள்வதே
சிறந்ததாகும்.
பெண்கள்
அறுக்கலாமா?
ஒரு பெண்மணி
(கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்)அவர்களிடம்
கேட்கப்பட்டபோது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
நூல்:புகாரி
குர்பானி அல்லாத
மற்ற சமயங்களுக்கும் இந்த சட்டம் பொதுவானதாகும்.
அறுத்த பிறகு துஆச்
செய்தல்
குர்பானி
கொடுக்கும்போது கூறவேண்டியவை:
அல்லாஹ்விற்காக நிறைவேற்றப்படும் இந்த
வணக்கத்தில் ஏராளமான பித்அத்கள் ஊடுருவி இருக்கின்றன. அறுக்கும்போதோ அல்லது
அறுத்தப் பின்போ ஃபாத்திஹா ஓதுவது மார்க்கம் என்று மக்கள் விளங்கி
வைத்துள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்களும்
குர்பானிக் கொடுத்தார்கள். அவர்கள் பின்வரும் பிரார்த்தனையைத் தவிர வேறு எதையும்
செய்யவில்லை. பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து
சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம
தகப்பல் மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின்
பெயரால், இறைவா!
முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின்
சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக) என்று கூறி அதை அறுத்தார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:முஸ்லிம்(3637), அபூதாவூத்(2410), அஹ்மத்(23351)
எனவே நாமும் 'இறைவா! என்புறத்திலிருந்தும் என் குடும்பத்தார்
புறத்திலிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக!' என்று குர்பானி கொடுத்த பிறகு பிரார்த்தனை செய்துக்கொள்ள வேண்டும்.
தொடரும்... இன்ஷா
அல்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)