வீட்டிற்கு வெளியேயும், சாலையிலும் அதிகளவு மாசு இருப்பதால், வீட்டிற்குள் அல்லது 4 சுவர்களுக்குள் அதிக நேரத்தைக் கழிப்போம் என்று எண்ணினால் அது உங்களின் உடலுக்கு தீங்கானதாக அமையும்.வீட்டினுள் உள்ள காற்றின் தன்மை, வெளிப்புறக் காற்றின் தன்மையைக் காட்டிலும் உடலுக்கு அதிக அளவு தீங்கினை விளைவிக்கக்கூடியது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.மூடிய அறையில் உள்ள காற்றில் இருந்து வெளிப்படும் ரசாயன மற்றும் உயிரியல் மாசுகள் காரணமாக புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, மூச்சுத் திண்றல், நரம்பியல் தொடர்பான கோளாறுகளை உருவாக்கக்கூடிய, ஒவ்வாமை, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடிய நிலைமை இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒட்டாவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுற்றுப்புற சுகாதார அறிவியல் அமைப்பு, காற்று சுகாதார பாதிப்புகள் பிரிவு, தண்ணீர், காற்று, மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு, கனடா சுகாதார ஆய்வு ஆதாரங்கள் இணைந்து வீட்டிற்குள் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டதில் புதிய தகவல்கள் தெரிய வந்தன.வீட்டு உரிமையாளர்களுக்கும், டாக்டர்களுக்கும், சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு தடுக்க முனைவோருக்கும் இந்த தகவல் பேருதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்
வீட்டினுள் உள்ள காற்று உடலுக்கு தீங்கானது!
Posted by
அதிரை தென்றல் (Irfan Cmp)
Sunday, July 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!