தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

வாழை மரத்தில் இருந்து பிளாஸ்டிக் தயாரிப்பு

வாழை மரத்தில் இருந்து பிளாஸ்டிக் தயாரிப்பு; அயர்லாந்து நிறுவனம் ஆய்வு:

வாழை மரத்தில் இலைகள், பூ, காய், பழம், தண்டு போன்றவை மக்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றை பயன்படுத்திய பின்னர் அதில் உள்ள மட்டைகளில் இருந்து நார் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது வாழை மரத்தில் இருந்து மிகவும் பயனுள்ள பிளாஸ்டிக் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு அயர்லாந்து நாட்டில் தீவிரமாக நடைபெறுகிறது.

இந்த ஆய்வில் அயர்லாந்து நாட்டில் உள்ள கியூஸ் பல்கலைக்கழகத்தின் பாலிமர் தயாரிப்பு ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. இதற்கு “பதானா திட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தேவைப்படும் 20 சதவீதம் வாழைப்பழங்கள் கனாரி தீவுகளில் தான் விளைகின்றன. அங்கு ஒரு கோடி வாழை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

பழங்கள் மற்றும் காய்கள் அறுவடை செய்த பின் 25 ஆயிரம் டன் வாழை மரங்கள் வீணாக குப்பையில் வீசப்படுகின்றன. அவ்வாறு வீணாகும் வாழை மரங்களின் நார்களில் பிளாஸ்டிக் தயாரிக்கும் ரசாயன பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

எனவே, அவற்றில் இருந்து பிளாஸ்டிக் இழைகள் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இயற்கையாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கை மீண்டும் அழித்து விட்டு புதிய வடிவில் பொருட்கள் தயாரிக்கலாம்.

இதன் மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மனித குலத்துக்கு பாதிப்புகள் வராது என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைமரத்தில் இருந்து எண்ணை கேன்கள், வாட்டர் டேங்குகள், போக்குவரத்து குடைகள், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் படகுகள் கூட தயாரிக்க முடியும்.



வாழை மரத்தைப் பற்றிஅறிவோம்.


வாழைப் பழங்கள் காய்க்கும் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.

இது தவாரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன.

எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது.

வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமது அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம்.

வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.

வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்