ID Card Holder’s Duties
For the purpose of public interest and according to Federal Law No. 9 of the year 2006, regarding the Population Register and ID Card System and its executive regulation, the ID Card holder should:
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்.
For the purpose of public interest and according to Federal Law No. 9 of the year 2006, regarding the Population Register and ID Card System and its executive regulation, the ID Card holder should:
- not tamper with, erase, amend or distort the ID Card
- carry the ID Card at all times and produce it whenever required by law
- abide by the dates and legal proceduresrequired for renewing, replacing or delivering the ID Card
- report any change in his/her details of the Card to the competent department in Emirates ID within one month from the date of change
- report the loss of ID card to Emirates ID service point within 7 days from the date of loss
- apply for a replacement for the damaged or lost card and pay proper fees in addition to submitting a declaration that the ID card is not taken or reserved at any authority or organization.
- notify the nearest Emirates ID service point within 7 days if the ID card is partially or entirely damaged so that it can’t be used for the purpose it is made for. In this case, the card holder should apply for a replacement for damaged or lost card and pay proper fees.
- not leave the ID card at any organization unless there is a decision or judgment passed by a competent court.
Source : EIDA
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்.
இதில் சமீபத்தில் ஒரு குழப்பமான சூழல் துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் Free Zone கம்பெனிகளில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்பட்டது. அதாவது, அபுதாபி 31-மார்ச்-2012, துபாய் 31-மே-2012 என்று கடைசி தேதி இருக்கும் பட்சத்தில் 31-ஜனவரி-2012லிருந்து அபராதம் விதிக்க தொடங்கியிருந்தனர், இதில் சிலர் அதனைச் செலுத்தி புதுப்பிக்கவும், புதிதாக செய்தும் கொண்டனர்.
இப்படி இருக்க, நேற்று செவ்வாய் கிழமை emirates id authority வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அபுதாபி மற்றும் துபாய் Free Zone கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது, அறிவிக்கப்பட்ட தேதிவரை எவ்வித அபராதங்கள் இல்லை, குறிப்பிட்ட தேதிக்குள் அவர்கள் புதிய ஐ.டி.கார்டினை முறையாக பெற்றே ஆக வேண்டும்.
மற்ற அமீரகங்களான, சார்ஜா, அஜ்மான், ராசல்கைமா, ஃபுஜைரா, உம்முல்குவய்ன் இங்கே வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு ஏற்கனவே கெடு தேதி முடிந்து விட்டதால் அபராதம் தொடர்கிறது.
நன்றி : அதிரைநிருபர்
அதிரை நிருபர் பின்னுட்டத்தில் மேலும் விளக்கமாக இதோ...
//புதிதாக செல்வோருக்கு இந்த சட்டம் பொருந்துமா? அல்லது வேரு எதுவும் சட்டம் இருக்கிறதா.//
ஆம் ! அனைவருக்கும் பொருந்தும், யார் யாரெல்லாம் வேலை நிமித்தமாக இங்கு வந்து இரண்டு / மூன்று வருட விசா அவர்களின் பாஸ்போர்ட்டில் அடித்து விட்ட முப்பது நாட்களுக்குள் எடுத்தாக வேண்டும் அவ்வாறு எடுக்க தவறினால் நாள் ஒன்றுக்கு திர்ஹம் 20/- அபராதம் அதிக பட்சமாக திர்ஹம் 1000/- அபராதம் விதிக்கப்படுகிறது.
விசிட்டில் வருபவர்களுக்கு இது பொருந்தாது.
குடும்ப்பதோடு இருப்பவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்..., விடுமுறையைல் ஊருக்கு அனுப்பியிருந்தாலும் அல்லது ஆறுமாத காலவரையறை வரை ஊரில் இருக்கட்டும் அனுப்பி வைத்திருந்தாலும், விசா பாஸ்போர்ட்டில் இருக்குமானால் அவசியம் எடுத்தாக வேண்டும், மார்ச் 31, 2012 (அபுதாபி), மே 31, 2012 (துபாய்) இதற்கு பின்னர் இங்கு பயணம் செய்தால் (விசா ஏற்கனவே பாஸ்போர்டில் உள்ளவர்கள்) அபராதத்தை ஏர்போட்டில் கட்டிவிட்டுதான் வழியைத் திற்ந்து விடுவார்கள்.
//விசிட்டில் மூன்று மாதம் வந்து இருந்து அதற்கு பிறகு கம்பெனியில் வேலையோட விசா அடித்தாலும் இந்த கார்டுக்கு பதிய வேண்டுமா? //
இங்கு வந்து வேலை அமைந்து மெடிக்கல் முடித்ததும், ரெஸிடென்ஸ் விசா பாஸ்போர்ட்டில் அடித்த நாள் முதல் 30 நாட்களுக்குள் புதிதாக எமிரேட்ஸ் ஐடி எடுத்தாக வேண்டும், துபாய் விஷாவாக இருந்தால் மே 31, வரை பொறுமையாக செய்யலாம், மற்ற அமீரகங்களாக இருந்தால் உடனடியாக செய்தே ஆக வேண்டும்.
கவனிக்க, இதுவரை... இந்த எமிரேட்ஸ் ஐ.டி.அனைத்து துறைகளோடும் இன்னும் இணைக்கப்பட வில்லை ஏர்போர்ட்களைத் தவிர, சிறுக சிறுக ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து அரசு அலுவலங்களோடு பின்னப்பட்டு விடும் அதோடு வங்கிக் கணக்குகளோடும், இனி எங்கு சென்றாலும் எடு ஐ.டி.யை என்றுதான் கேட்பார்கள் இல்லையே ஓடு இங்கிருந்து என்ற பதிலுரையும் வந்தாலும் வரலாம் (சின்ன சின்ன நாடுகளின் தலைவர்கள் பதவியைத் துறப்பதை அவதானிக்கும்போது).
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!