தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும்போது பார்த்து ஆண்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். பொன்னகையைக் கண்டால் புன்னகைக்கும் மனைவியை நினைத்து கலங்குவது இயல்பானதுதான். என்னதான் தங்கத்தின் விலை ஏறினாலும் தலையை அடைமானம் வைத்தாவது வாங்கிக் கொடுத்தே ஆகவேண்டும்தானே. அதனால், தங்கத்தைப் பற்றி சில விடயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் பயன்படுத்திய உலோகம் தங்கம். கி.மு. 4000 க்கு முன்னரே தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டதாக, பல்கேரிய தொல்பொருள் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே தங்கத்தின் வயது கற்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
* கி.மு 7 ஆம் நூற்றாண்டில், இத்தாலிய பல்மருத்துவர் ஒருவரால் தங்கத்தால் பற்கள் கட்டப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் இருந்து, பல் சொத்தைகளை அடைப்பதற்கு தங்கம் பயன்பட்டது.
* தங்கம் உயர் நீட்சியடையும் தன்மையையும், தகடாகும் தன்மையையும் கொண்டுள்ளது. பழங்காலத்திலிருந்து இன்று வரை தங்கம் பெறுமதி மிக்கதாகவே இருந்து வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் 85% தற்போது பாவனையிலுள்ளது.
*அமேரிக்காவின் அப்பல்லோ ஆகாய கப்பல் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது.கதிர்வீச்சிலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பதற்காக, இவ்வாறு செய்யப்பட்டது. இப்போதும் கூட விண்வெளி வீரர்கள் அணியும் தலைக்கவசம் தீவிர ஒளியிலிருந்து விண்வெளி வீரர்களின் கண்களைப் பாதுகாக்க, மெல்லிய தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.
* தங்க சுத்திகரிப்பு முறையானது ஓரளவிற்கு சூழலை மாசடையச்செய்யும். தங்க சுரங்கமானது, பெருமளவு சயனைடைக் கொண்டிருக்கும். மேலும், நைட்ரஜன் ஆக்சைடு (nitrogen oxides) மற்றும் சல்பர் ஆக்சைடு (sulfur oxide) என்பவற்றை வளியில் பரவச்செய்யும்.
*தங்க சேமிப்பைஇ பொறுத்த வரையில் அமெரிக்கா உலகில் முதலிடத்தில் இருக்கிறது. தங்க ஆபரணங்களைக் கருத்தில் கொண்டால், இந்தியா முன்னணியில் உள்ளது. 20% ஆன தங்கம் அலங்காரத்திற்காக பயன்படுகிறது. உதாரணமாக, சேலைகளில் பயன்படுத்தப்படும் தங்கம்.
* பூமியின் மேற்பரப்பில், அதிகளவான தங்கம் கடலில் இருக்கிறது. அண்ணளவாக அது 100 மில்லியன் தொன்களாக இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக கடலிலிருந்து தங்கம் பெறுவதற்கு சிறந்த முறையை இதுவரை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை.
* விண்வெளியில் மிக அதிகளவான தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1999 இல் செலுத்தப்பட்ட ஆகாயக்கப்பலின் தரவுப்படி, ஈரொஸ் (Eros) கிரகத்தில் காணப்படும் தங்கத்தின் அளவானது, இதுவரை பூமியில் பெறப்பட்ட அளவை விட அதிகமானதாகும். விண்வெளியில் தங்கம் தோண்டும் ரகசியம் தெரிந்தால் நம்மவர்கள் எல்லாம் ஆளுக்கொரு கடப்பாரையைக் கொண்டு கிளம்பிவிட மாட்டார்களா?
-அதிரை தென்றல் (Irfan Cmp)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!