முகநூல் சகோதர சகோதரிகளே ..
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடைபெறுர இருக்கிறது இன்றைக்கு பெரும்பாலான பள்ளி கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் கூடுவதை விட முகப்பில் [face book ] பொழுதை கழிப்பதுதான் அதிகம் எனவே +2 படிக்கும் மாணவ மாணவி -கண்மணிகள் சிறிது காலம் முகப்பை மூடி வைத்துவிட்டு தங்களின் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வில் அதிக அதிகமாக மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் நற்பெயரையும் சந்தோசத்தை பெற்று தருமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!
உங்களின் இந்த மேல்நிலை கல்வி தேர்வுதா
ன் உங்களின் பயணத்தை -எதிர்களால எண்ணங்களை -உங்களின் வாழ்க்கை லட்சியங்களை நீங்கள் எதிர்பார்த்த வழியில் கூர் நோக்கி கொண்டு செல்லும் -
படிப்பை பாதியில் நிறுத்தி பணத்தை சம்பாதிக்க பாலைவனத்தில் பருவத்தை தொலைத்த பலபேருடைய பகல் கனவுகள் நிறைந்த, பாலை வாழ்கையை நாம் கண்கூடாக பார்க்கிறோம் !!
வேண்டாம் பாதியில் செல்லும் வெளிநாட்டு மோகம்!
நன்றாக படித்து நல்லமுறையில் முன்னேறினால் பல நாடுகள் உங்களுக்கு கம்பளம் விரித்து வரவேற்கும்!!
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.
பயனுள்ள கல்வியை கற்று அதை பிறருக்கும் கற்றுகொடுப்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வலியுருத்து சொல்லியிருகிறார்கள் -
கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது போல தங்களின் வாழ்கையை பயணத்தை தொடங்க எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்!!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
-பாலைவன வழிப்போக்கன்
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!