தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

வெறும் 10 ரூபாய் கல்விக்கட்டணம்!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் வெறும் 10 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கும் ஹூப்ளி கல்லூரிகள்


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி நகரில் கே.எல்.ஈ. சமூகத்தினரின் பி.சி.ஜபின் அறிவியல் கல்லூரி மற்றும் எச்.எஸ். கோதம்பரி அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த கல்லூரிகளில் சிறப்பு கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, பட்டப்படிப்பிற்கு முன் பயிலும் இரண்டு ஆண்டு படிப்பிற்கு(பியுசி), இந்த வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுபவர்கள், இந்தக் கல்லூரிகளில் சேர்ந்தால், ஒரு ஆண்டிற்கு 10 ரூபாய் மட்டும் கட்டினால் போதும். அதிக மதிப்பெண் பெற்றும், ஏழ்மை நிலைமையினால் கல்லூரியில் சேர முடியாதவர்களுக்கு, இந்தக் கல்லூரிகள் நம்பிக்கை அளிக்கின்றன. 

இந்த சிறப்பு சலுகை பற்றி ஜபின் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஹிரேமத் கூறுகையில், “எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில், 95 சதவிகித மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், ஆண்டுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற திட்டத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தோம். இதுவரை, 15 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் படித்து வருகின்றார்கள். 

இந்த வருடம், இதுவரை 10 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும், பள்ளி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், மாணவர்களுக்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப் படுகின்றார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்றதினால் குறைந்த கட்டணம் என்ற நடைமுறை, அவர்களை இங்கும் நன்கு படிக்கத் தூண்டும்” என்று தெரிவித்தார் இந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர் ஒருவரிடம் கேட்டபோது, “நான் 95 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்துள்ளளேன். ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருவதால் இந்த வாய்ப்பினைப் பற்றித் தெரிந்துகொண்டு இங்கு சேர்ந்துள்ளேன்” என்றார். 

Source: EveningFlwr

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்