தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

ரமலானிலிருந்து மாறத் துவங்குவோம் - 2

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நோன்பாளிக்கு இஃப்தார் செய்விப்பது
ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் செய்வித்தால் அந்நோன்பாளி
யின் கூலி அளவு நமக்கும் கூலி கிடைக்கும். அதேசமயம்அந்நோன்பாளியின் கூலியில் குறைவேதும் ஏற்படாது. (திர்மிதீ)

ரமழான் மாதத்தில் தினந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் உணவளிக்க வேண்டும். ரமழான் அல்லாத காலத்தில் ஒரு மிஸ்கீனுக்கு உணவளிப்பதை வழக்க மாக்கிக் கொள்ளவேண்டும்.

குர்ஆன் ஓதுதல்
குர்ஆனை ஓதி வாருங்கள். அது மறுமை நாளில் தன்னை ஓதியவருக்கு சாட்சியாக அது வரும் என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழானில் குர்ஆன் ஓத தொடங்கிவிட வேண்டும். ஆண்டு முழுக்க நாள்தோறும் அதனைத் தொடர வேண்டும்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை ஜுஸ்வுவாவது ஓத வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தாள் (இரு பக்கங்கள்) ஓத வேண்டும்.

குர்ஆனைக் கற்றலும் கற்பித்தலும்
குர்ஆனைக் கற்பவரும் கற்பிப்பவரும்தான் உங்களில் சிறந்தோர் ஆவர் என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

நம்முடைய வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இதனை ஆக்கிக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நாள் தோறும் நம்முடைய வீட்டிலாவது குர்ஆனில் இருந்து ஒரு பக்கத்தை வாசித்துக் காட்டி விளங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

திக்ருல்லாஹ் – இறைநினைவு
உங்களுடைய செயல்களிலேயே சிறந்த செயல்உங்களுடைய இறைவனிடத்தில் தூய்மையான செயல்உங்களுடைய அந்தஸ்த்தை உயர்த்துகின்ற செயல்தங்கக் குவியலையும் வெள்ளிக் குவியலையும் செலவு செய்வதைவிட சிறந்த செயல்எதிரிகளைக் களத்தில் சந்தித்து அவர்தம் கழுத்துகளைச் சீவு வதை விட அவர்கள் உங்களது கழுத்துகளைச் சீவுவதைவிடச் சிறந்த செயல் ஒன்றை அறிவிக்கட்டுமா?’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள்.

கண்டிப்பாக சொல்லித்தாருங்கள்’ என்றனர் ஸஹாபாக்கள்.
திக்ருல்லாஹி தஆலா. இறைவனை நினைவுகூர்வது’ என்றார்கள் அண்ணலார். (திர்மிதீ)

இஸ்திக்ஃபார்
ஒருவர் இஸ்திக்ஃபாரை வழக்கமாகச் செய்துவந்தால் எல்லா கவலைகளில்  இருந்தும் அல்லாஹ் அவருக்கு வெற்றியை வழங்குவான். எந்தவொரு சிக்கலில் இருந்தும் அவரை விடுவிப்பான். அவர் அறியாத புறங்களில் இருந்து அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவான் என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபு தாவுது)

தூய ஒழு – இஹ்ஸானுல் ஒழு
ஓர் அடியான் இறையில்லத்திலிருந்து அழைப்போசை வந்த வுடன் தன்னுடைய எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு இறை வனைச் சந்திக்க தயாராகி விடுகிறான். அச்சத்தோ டும்நடுங்கியவாறும் ஒழு செய்ய ஆரம்பிக்கிறான். இறை வனைச் சந்திக்கப் போகிறோம் என்கிற நினைப்பே அவனை நிலை தடுமாறச் செய்கின்றது. அவனுடைய பாவங்கள் நினை வில் வந்து அலைக்கழிக்கின்றன. அல்லாஹ் தன்மீது சுமத்தி யுள்ள பொறுப்புகளைதான் எந்த அளவு கடமை உணர்வு டனும் அக்கறையோடும் நிறைவேற்றுகிறோம் என்கிற சிந்தை அவன் மனதைத் துண்டாடுகின்றது. ஒழு செய்ய ஆரம்பிக்கும் போது முகத்தில் வழியும் தண்ணீரோடு அவனுடைய கண்ணீ ரும் கலக்கின்றது.

நாம் இறைவனை எப்படி சந்திப்பதுஅவனோடு என்ன பேசு வதுஎந்த முகத்தோடு பேசுவதுஎன்பதையெல்லாம் அவன் யோசிக்கிறான். எத்தனை ரகஅத்துகள் தொழப் போகிறோம் எந்த ரகஅத்தில் எந்த சூறாவை ஓதப்போகிறோம் என்பதை யெல்லாம் ஒழுவின்போதே தீர்மானித்துக் கொள்கிறான்.

ஓர் உண்மையான இறைநம்பக்கையாளன் இத்தகைய உணர்வுகளோடு தான் ஒழு செய்ய வேண்டும். இப்படி செய்யப் படுகின்ற இஃக்ளாஸான ஒழுவைச் சிறப்பித்துத்தான் கீழ்க் கண்ட ஹதீஸ்கள் பேசுகின்றன.
நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமைநாளில் ஒழுவு டைய சுவடுகளால் முகம்கைகால்கள் ஒளிமயமானவர்களே!’ என அழைக்கப்படுவார்கள். எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்என அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

முஃமின் ஒழுச் செய்த உறுப்புகளில் எல்லாம் அணிகலன்கள் ஆபரணங்கள் அணிவிக்கப்படும்! (ரியாளுஸ் ஸாலிஹீன்மேற்கோள் – சஹீஹ் முஸ்லிம்)

இறைநம்பிக்கையாளர் ஒவ்வோர் உறுப்பாக கழுவக்கழுவ அவரை விட்டு அவருடைய பாவங்கள் அகற்றப்படுகின்றன.

ஒரு முஸ்லிம் (அல்லது முஃமின்) ஒழுச் செய்து தம் முகத்தைக் கழுவும் போது அவர் கண்களால் செய்த பாவங்கள் யாவும் கடைசிச் சொட்டு தண்ணீரோடு வெளியேறி விடுகின்றன. அவர் கைகளைக் கழுவும் போது கைகளைப் பயன்படுத்தி செய்த பாவங்கள் யாவும் கடைசிச் சொட்டு தண்ணீரோடு வெளியேறி விடுகின்றன. அவர் கால்களைக் கழுவும் போது கால்களால் நடந்து சென்று செய்த பாவங்கள் யாவும் கடைசிச் சொட்டு தண்ணீரோடு வெளி யேறி விடுகின்றன. கடைசியில் அவர் எல்லாப் பாவங்களும் நீங்கி பரிசுத்தமானவராக ஆகி விடுகிறார். (ரியாளுஸ் ஸாலிஹீன்மேற்கோள் – முஸ்லிம்)

ஒழுவுக்குப்பின் துஆ
பொதுவாக நாம் அவசர அவசரமாக ஒழு செய்கிறோம். ஒழு வுக்குப்பின் துஆ ஓதவேண்டும் என்னும் நினைப்பே மனதில் இருப்பதில்லை. இந்த ரமழானில் இதனை உற்று கவனித்துப்  போக்கிக்கொள்ள வேண்டும். ஒழு செய்தபின், ‘அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்ம தன் அப்துஹு வரஸூலுஹு அல்லாஹும்மஜ் அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்’ என்னும் துஆவை ஓதுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட விதத்தில் ஒழு செய்து இந்த துஅவை வழக்கமாக ஓதிவந்தால்  சொர்க்கத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப் பட்டு நினைத்த வாசல் வழியாக உள்நுழையுங்கள் எனச் சொல்லப்படும். (முஸ்லிம்)

எந்நேரமும் ஒழுவோடு
எந்நேரமும் ஒழுவோடு இருப்பது ஒரு சிறந்த பண்பு. உயர் முஃமின்களிடம் குடியிருக்க வேண்டிய அம்சம். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் எந்நேரமும் ஒழு வோடு இருப்பதற்கு பெரிய முயற்சி ஒன்றும் தேவைப்படாது. கொஞ்சம் கவனம் இருந்தாலே போதுமானது. நாளடைவில் இதுவே வழக்கமாக மாறிவிடும். வழக்கமாக இது மாறிவிட் டால் நம்மையுமறியாமல் நாம் இதனைச் செய்து கொண்டே இருப்போம்.

பல் துலக்குவது
என்னுடைய உம்மத்தினருக்கு சிரமமாக இல்லையெனில் ஒவ்வொரு தொழுகைக்காகவும் பல் துலக்கும்படி அவர்களை ஏவியிருப்பேன்’ என அண்ணலார் கூறியுள்ளார்கள். (புகாரிமுஸ்லிம்) ஒருநாளில் குறைந்தபட்சம் இரண்டுமுறை அல்லது மூன்றுமுறையாவது பல் துலக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒழு செய்தபின் இரண்டு ரகஅத் தொழுவது

ஒருவர்அழகிய முறையில் ஒழு செய்தபின்முகத்தையும் மனதையும் ஒருமுகப் படுத்திஇரண்டு ரகஅத்கள் தொழுதால் சொர்க்கம் அவருக்கு கடமையாகி விடுகின்றது’ (முஸ்லிம்)
தொடரும்...

அதிரை தென்றல் (Irfan Cmp)


1 உங்களின் கருத்து (Comments):

{ சேக்கனா M. நிஜாம் } at: July 14, 2013 at 2:56 PM said...

மாஷா அல்லாஹ் !

காலச்சூழலுக்கேற்ற பொருத்தமான பதிவு !

தொடரட்டும்...

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்