அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நல்லவர்களோடும் சான்றோர்களோடும் உட்காரல்
ஒரு கூட்டம்
அமர்ந்து இறைவனை திக்ரு செய்துகொண்டு துதிபாடிக் கொண்டுள்ளது எனில், அ
க்கூட்டத்தை வானவர்கள் சூழ்ந்து
கொள்கிறார்கள். இறைகருணை போர்த்திக் கொள்கின் றது. நிம்மதி அங்கே இறங்குகின்றது.
தனக்கருகில் உள்ளோரிடம் அவர்களைப் பற்றி இறைவன் எடுத்துரைக்கிறான். (முஸ்லிம்)
நாவையும் மர்ம
உறுப்பையும் பாதுகாத்தல்
‘தனது இரு
உதடுகளுக்கு இடையில் உள்ளதையும் இரு தொ டைகளுக்கு இடையில் உள்ளதையும் பாதுகாக்கும்
உறுதி மொழி அளிப்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்னும் உத்தர வாதத்தை அளிக்கிறேன்’
(புகாரி, முஸ்லிம்)
அண்ணலார் மீது
ஸலவாத் சொல்லுதல்
இறைத்தூதர் மீது
நீங்கள் ஒருமுறை ஸலவாத் சொன்னால் இறைவன் உங்கள் மீது பத்து முறை ஸலவாத் சொல்வான்.
(முஸ்லிம்)
நன்மைகளைச் செய்ய ஆர்வமூட்டுதல்
ஒவ்வொரு
நற்செயலும் ஸதக்காதான். நற்செயல் ஒன்றைச் செய்ய சுட்டிக் காட்டுபவருக்கு
செய்தவருக்கு கிடைக்கும் அளவு கூலி கிடைக்கும். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின்
பக்கம் மக்களை அழைத்தல்
நேர்வழியின்
பக்கம் ஒருவரை அழைத்தால் அந்நேர்வழி யைப் பின்பற்றுவதால் அவருக்குக் கிடைக்கும்
அதே அளவு நன்மை உங்களுக்கும் கிடைக்கும். அதேசமயம் அவருக்கு எக் குறையும்
ஏற்படாது. (முஸ்லிம்)
சகோதரர்களின் குற்றங்குறைகளை மறைத்தல்
இந்த உலகத்தில்
சகோதரன் ஒருவருடைய குற்றங்குறையை மறைத்தால் கியாமத் நாளில் உங்களுடைய குறையை இறை
வன் மறைப்பான். (முஸ்லிம்)
சகிப்புத்தன்மை
ஒரு முஸ்லிமுக்கு
இன்னலோ துன்பமோ இடுக்கனோ கவ லையோ வருத்தமோ ஏற்பட்டால், ஏன் ஒரு முள் தைத்தால் கூட அதற்குப் பதிலாக
இறைவன் அவருடைய பாவம் ஒன்றை மன்னித்து விடுகிறான். (புகாரி)
அவைப்பரிகாரம்
ஓர் அவையில்
இருந்து கலைந்த செல்வதற்கு முன்னால், ‘ஸுப்ஹானக்க அல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லா இலாஹ இல்லா அன்த்த
அஸ்தக்ஃபிருக்க வ அத்தூபு இலைஹி’ என்னும்
கஃப்பாராவை ஓதிக் கொள்ள வேண்டும். அந்த அவையில் ஏதும் சிறு தவறுகள் ஏற்பட்டிந்தால்
அவற்றை இது போக்கிவிடும். (அபு தாவுது, திர்மிதீ)
தவறு
நிகழ்ந்துவிட்டால் இரண்டு ரகஅத் தொழுதல்
ஓர் அடியான்
தவறிழைத்துவிட்டால் தூய செயல் ஒன்றைச் செய்ய வேண்டும். பின்பு, இரண்டு ரகஅத் தொழுது அல்லாஹ் விடம்
பாவமன்னிப்பு கோரினால் அது ஏற்கப்படும். (அபு தாவுது)
பெண்குழந்தைகளை நன்முறையில் வளர்த்தல்
மூன்று
பெண்குழந்தைகள் இருந்து நன்முறையில் அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்கள் மீது
கருணைகாட்டி பரிபாலித் தால் அவருக்கு சொர்க்கம் உடைமையாகிவிடும். (அஹ்மத்)
பிராணிகளிடம்
கனிவு காட்டுதல்
காட்டுவழியில்
பயணித்த ஒரு வழிப்போக்கன் வழியில் எதிர் ப்பட்ட நாயின் மீது கருணைகாட்டி நீர்
புகட்டியதால் சொர்க்க வாசியாக ஆக்கப்பட்டான். ஆகையால், வாயில்லா பிராணி களிடமும் கருணையோடு நடந்து
கொள்ள வேண்டும். (புகாரி)
யாரிடமும் எதுவும் கேட்காதிருத்தல்
யாரிடமும்
எதனையும் கேட்கக்கூடாது என வைராக்கியம் பூணவேண்டும். யாரிடம் கேட்டால் இல்லை
என்னும் பதில் கிடைக்கவேகிடைக்காதோ அவனிடம் மட்டுமே கேளுங்கள் என்கின்றது இஸ்லாம்.
சிறு உதவியாக இருப்பினும் இறைவனி டமே கேட்டுப் பழகவேண்டும்.
தஸ்பீஹ், தஹ்லீல் செய்துகொண்டே இருத்தல்
‘லா இலாஹ
இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹு அலா குல்லி
ஷைஇன் கதீர்’ என நாள்தோறும்
நன்கு புரிந்துணர்ந்து அதிகாலையில் 100 தடவை ஓதினால் பத்து அடிமைகளை விடுவித்த நன்மை கிடைக்கும். நூறு நன்மைகள்
கிட்டும். நூறு தவறுகள் மன்னிக் கப்படும். மாலைவரை ஷைத்தான்களின் தீங்குகளில்
இருந்து பாதுகாப்பு கிடைக்கும். (புகாரி, முஸ்லிம்)
‘ஸுப்ஹானல்லாஹி
வபிஹம்திஹி’ என 100 தடவை ஓதி னால் நம்முடைய தவறுகள் நுரைபோலப்
பொங்கும் அளவு இருந்தாலும் மன்னிக்கப் படும். (புகாரி, முஸ்லிம்)
நின்றுதொடரும்
தானதருமம்
செத்தபிறகும்
நம்மை அடைபவை மூன்றுதாம். 1.நின்று தொடரும்
தானதருமம் 2. பயனளிக்கும்
கல்வி 3. நமக்காக துஆ
செய்யும் பிள்ளைகள். (முஸ்லிம்) ஆகையால் நின்று தொட ரும் தருமத்தை
முடிந்தபோதெல்லாம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
இறைவழியில்
செலவுசெய்ய பெண்களைத் தூண்டுதல்
பெண்கள் மனது
வைத்தால் எவ்வளவோ பணத்தை மிச்சப் படுத்தி இறைவழியில் செலவளிக்கலாம். அண்ணலார்
ஈதுப் பெருநாள் போன்ற சிறப்பு நாட்களின்போது, இறைவழியில் செலவு செய்யுமாறு பெண்களை
ஊக்கப்படுத்தி உள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
வீட்டுப்பணத்தில்
இருந்து பெண்கள் செலவு செய்தல்
வீட்டுச்
செலவுகளுக்கு என வழங்கப்படும் தொகையில் இருந்து ஒரு பெண் நல்ல விஷயங்களுக்கு
செலவளித்தால் அவளுக்கும் நன்மை கிடைக்கும். அவளுடைய கணவனுக்கும் நன்மை கிடைக்கும்.
(புகாரி, முஸ்லிம்)
கொடுக்கும் கரங்கள் உயர்ந்தவை
கீழிருக்கும்
கரங்களை விட மேலிருக்கும் கரங்கள் உயர்ந் தவை. உயர்ந்த கரங்கள் கொடுக்கும்
கரங்கள். தாழ்ந்த கரங்கள் யாசிக்கும் கரங்கள். (புகாரி, முஸ்லிம்)
வியாபாரத்தில் நேர்மை, நாணயம்
கொடுக்கல்-வாங்கலில்
ஈடுபடுவோர் பிரிவதற்குமுன் வியா பாரத்தை முறித்துக் கொள்ளலாம். அவர்கள் இருவரும்
வாய் மையோடு நடந்து கொண்டால் அவ்வணிகத்தில் பரக்கத் (வளம்) ஏற்படுத்தப்படும்.
அவர்களிருவரும் பொய் பேசி னாலோ ஒருவருக்குத் தெரியாமல் மறைத்தாலோ பரக்கத் அகற்றப்படும்.
(புகாரி)
முஸ்லிம்களின் நலனில் அக்கறை
ஒரு முஸ்லிம்
சகோதரனுடைய உலகத்து கஷ்டம் ஒன்றை நீக்கினால் கியாமத் நாளில் நம்முடைய கஷ்டம் ஒன்றை
அல் லாஹ் நீக்குவான். (முஸ்லிம்)
முஸ்லிம்களுக்குத் தொல்லைதராமல் இருத்தல்
யாருக்கும்
எத்தொல்லையும் தராமல் இருப்பவருடைய இஸ் லாமே சிறந்ததாகும். (புகாரி, முஸ்லிம்)
நன்மை செய்வோருக்கு உதவுதல்
நம்முடைய ஒவ்வொரு
மூட்டுக்கும் நாள்தோறும் ஸதக்கா செய்ய வேண்டியுள்ளது. கால்நடைகளின் மீது பாரத்தை
ஏற்ற உதவினாலோ இறக்கிவைக்க உதவினாலோ அதுவும் கூட ஸதக்காவாகும். (புகாரி)
சகோதரனுக்காக
பரிந்துரைத்தல்
முஸ்லிம்
சகோதரனுக்காக பரிந்துரைத்தால் நற்கூலி கிடைக் கும். (புகாரி)
தந்தையின்
தோழர்களோடு நன்னடத்தை
தந்தையின்
தோழர்களோடு நன்முறையில் நடந்துகொள்வது அவர்கள்மீது அன்பைச் செலுத்துவது போலாகும்.
(முஸ்லிம்)
இன்சொல்
ஒரே ஒரு
பேரீச்சம் பழத்தைத் தானம் அளித்தேனும் அல்லது இன்சொல் பேசியேனும் நரக
நெருப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (புகாரி, முஸ்லிம்)
தனக்குக் கீழுள்ளோரிடம் கனிவு
‘இறைவா, என் உம்மத்தின் பொறுப்பில் அமர்த்தப் படு வோர்
ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களோடு கடுமையாக நடந்துகொண்டால் நீயும் அப்பொறுப்பாளர்கள்
மீது கடுமை யோடு நடந்துகொள்வாயாக. அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத் தில் மென்மையோடு
நடந்து கொண்டால் நீயும் மென்மை யோடு நடந்து கொள்வாயாக’ (முஸ்லிம்)
சிறிதாக இருப்பினும் தொடர்ந்து செய்தல்
அளவில் குறைவாக
இருப்பினும் தொடர்ந்து விடாமல் செய் யப்படும் செயலே இறைவனின் அன்பிற்குரியது.
(முஸ்லிம்)
அண்டை வீட்டாரோடு சுமூகமான உறவு
இறைவனையும் மறுமை
நாளையும் நம்புபவர் தம் அண்டை வீட்டாரோடு சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும்.
(முஸ்லிம்)
விருந்தோம்பல்
இறைவனையும் மறுமை
நாளையும் நம்புபவர் தம் விருந் தாளியை நன்முறையில் உபசரிக்க வேண்டும். (முஸ்லிம்)
பெற்றோருக்கு துஆ
தன்னுடைய நல்ல
அடியானின் நிலையை அல்லாஹ் சொர்க் கத்தில் உயர்த்துவான். ‘என்னிறைவா, எனக்கு இது எப்படி?’ என அவர் விசாரித்தால் ‘உன்னுடைய மகன் உனக்காக பாவ மன்னிப்பு
கோருகிறான்’ எனக் கூறப்படும்.
(அஹ்மத்)
சகோதரனுக்காக தனிமையில்
துஆ
மறைவான நிலையில்
ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக இன் னொரு முஸ்லிம் துஆ செய்யும்போது ‘உனக்கும் இதே போன்று கிடைக்கும்’ என அரசன் கூறுகிறான். (முஸ்லிம்)
முஸ்லிம்களுக்காக துஆவும் பாவமன்னிப்பும்
அவர்கள் ‘எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வ தில் எங்களுக்கு முந்தியவர்களான
எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர் களைப் பற்றி
எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்கா திருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க
இரக்கமு டையவன், கிருபை மிக்கவன்’
என்றும்
(பிரார்த்தித்துக்) கூறு வர். (அல்குர்ஆன் 59-10)
பள்ளிவாசல் ஊழியம்
‘நீர் எனக்கு
எவரையும் இணை வைக்காதீர்; என்னுடைய (இந்த)
ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ,
ஸுஜூது செய்(து
தொழு)வோருக்கும், அதைத்
தூய்மையாக்கி வைப்பீராக’ (அல்குர்ஆன் 22-26)
மனைவியை மகிழ்வித்தல்
உங்களில் சிறந்தவர்கள்
தமது மனைவியருக்கு சிறந்தவர்கள் தாம். நான் என்னுடைய மனைவியருக்கு சிறந்தவனாக உள்
ளேன். (இப்னு ஹிப்பான்)
அழகிய மஹர்
பெண்களின்
உரிமையான மஹரை நிறைவாகக் கொடுத்து திருமணம் நடத்தப்பட வேண்டும். வரதட்சணை
வாங்கியிருந் தால் உடனுக்குடன் அதனை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எளிய திருமணம்
எளிய முறையில்
நடத்தப்படும் திருமணம்தான் சிறந்த திரு மணம் ஆகும். நம் வீட்டுத் திருமணங்களில்
ஆடம்பரம் என சொல்லத்தக்க ஒரு நிகழ்வும் இடம்பெற்று விடக்கூடாது. சமூ கக்
குற்றத்தில் நீங்களும் பங்காளியாகி விடுவீர்கள்.
ரோஷம்
முஃமினுக்கு
ரோஷம் இருக்கவேண்டும். ‘என் மனைவியை வேறு
ஒருவனோடு கண்டால் வாளால் அவன் தலையைக் கொய்து விடுவேன்’ என்றார் ஸஅத். அதைப் பற்றிக் கேள்விப் பட்ட
அண்ணலார், ‘ஸஅதைவிட நான்
ரோஷமிக்கவன். என் னைவிட அல்லாஹ் ரோஷம் மிக்கவன்’ என்றார்கள். (புகாரி)
இல்லத்தாருக்கு இஸ்லாமிய கல்வி
நம்முடைய
மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் முறையான இஸ்லாமிய கல்வியை அளிப்பது நம்மீது
கடமையாகும். அதற் கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். சிறுசிறு வெளியீடு கள்,
இஸ்லாமிய ஒலி-ஒளி பேழைகள்,
நூற்கள், கணிணி போன்ற இஸ்லாமிய ஊடகங்களை வீடுகளில்
தருவிக்க வேண் டும். இஸ்லாமிய பத்திரிகைகளுக்கு சந்தா கட்டவேண்டும். நம் முடைய
குழந்தைகளுக்கு உலகக் கல்வியைக் கொடுப்பதில் எவ் வளவு சிரத்தை காட்டுகிறோமோ,
அதைவிட ஒருபங்கு அதிக மாக
இஸ்லாமியக் கல்வியை ஊட்டுவதில் காட்ட வேண்டும்.
பாவப்பரிகாரம்
ஏதேனும் ஒரு
சகோதரனுக்கு தீங்கு இழைத்திருந்தால் அந்தக் கணக்கை இங்கேயே நேர் செய்துகொள்ள
வேண்டும். திர்ஹ மோ தீனாரோ இல்லாத பயன்தராத நாளில் நன்மைகள்தாம் பரிமாற்றம்
செய்யப்படும். கஷ்டப்பட்டு ஈட்டிய நன்மைகள் யாவும் பறிபோய்விடும். நன்மைகள்
தீர்ந்து போய்விட்டால்அவர் செய்ய
பாவங்கள் நம் தலையில் சுமத்தப்படும்.
(புகாரி)
தீமைகளைத் தொடர்ந்து நன்மைகளைச் செய்தல்
‘எங்கேயெல்லாம்
முடியுமோ அங்கெல்லாம் இறைவனுக்கு அஞ்சுங்கள். தீமைகளுக்கு பகரமாக நன்மைகளைச்
செய்யுங் கள். அவை தீமைகளை அழித்துவிடும். மக்களோடு நன்முறை யில் நடந்து
கொள்ளுங்கள்’ (அஹ்மத், ஹாகிம்)
தாயின் சகோதர-சகோதரிகளோடு நன்னடத்தை
தாயின்
சகோதர-சகோதரிகளோடு நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும். தாயின் சகோதரி தாயின்
இடத்தில் உள்ளார். (புகாரி)
அடைக்கல நேர்மை
‘அடைக்கல நேர்மை
இல்லாதவனிடம் ஈமான் இறைநம் பிக்கை இல்லை’ (அஹ்மத்)
வாக்குமீறாமை
‘வாக்கைக் காப்பாற்றாதவனிடம்
சமயநெறி இல்லை’ (அஹ்மத்) ‘வாக்கு மீறுதல் முனாஃபிக்கின் நயவஞ்சகனின்
பண்பாகும்’ (முஸ்லிம்)
சிறியோரிடம் கனிவு பெரியோரிடம் பணிவு
‘சிறியோரிடம்
கனிவையும் பெரியோரிடம் பணிவையும் காட்டாதவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ (அஹ்மத், திர்மிதீ)
ஹதீஸ்களை சரியான
கோணத்தில் விளங்கிக் கொள்வதில் தான் வெற்றி இருக்கின்றது. பெரியோர் என்றார் யார்?
சிறி யோர் என்றால் யார்?
என்பதை முதலில் நன்கு
புரிந்து கொள்ள வேண்டும். பெரியோர் என்றால் ஏதோ சீனியர் சிட்டிசன் 65 வயதுக்கு மேற்பட்டோர் என நாம் விளங்கிக்
கொள்ளக் கூடாது. நம்மைவிட மூத்தவர்கள் என்பதும் இதில் அடங்கும். எழுந்து நின்று
மரியாதை செலுத்தத்தடை உள்ளது என்பதால் நாம் எல்லோரையும் எடுத்தெறிந்து நடந்து
கொள்ளக்கூடாது. வயதுக்கு மரியாதை எனச் சொல்வார்களே, அதைப் பேண வேண்டும்.
அதேபோல
சிறியோர்களை அதாவது நம்மைவிட வயதில் சிறியவர்களை கனிவோடு நோக்கவேண்டும். கண்டபடி
விரட் டக்கூடாது. நமக்கு பணியாளர்களாக அவர்களை மாற்ற எண் ணலாகாது.
முஸ்லிம்களின்
காரியங்களில் அனுசரனை
தமக்கிடையே
விட்டுக்கொடுப்பதிலும் கனிவுபசாரனை செய்வதிலும் பரஸ்பரம் அன்பு செலுத்துவதிலும்
முஸ்லிம்கள் ஒரே உடம்பைப்போன்று காட்சியளிக்கிறார்கள். உடம்பின் ஒரு அங்கம்
பாதிப்படைந்தாலும் ஒட்டுமொத்த உடம்பே பதறுகின்றது. அல்லலுறுகின்றது. காய்ச்சல்
வந்து விடுகின்றது. (புகாரி, முஸ்லிம்)
மௌனமே நாவின்
அணிகலன்
இறைவனையும் மறுமை
நாளையும் நம்புபவர் பேசினால் நல்லவற்றையே பேசவேண்டும், இல்லையென்றால் மௌன மாக இருக்க வேண்டும்.
(புகாரி)
சகோதரனின்
கோரிக்கையை நிராகரிக்காதிருத்தல்
முஸ்லிம்
சகோதரனின் கோரிக்கையை (தகாது) நிராகரித்தால் இறைவன் அவரை நரக நெருப்பில்
நுழைவிப்பான். (திர்மிதீ)
மனஸ்தாபத்தைக் களைதல்
திங்கள்
கிழமையும் வியாழக் கிழமையும் அடியார்களின் கணக்கு வழக்குகள் இறைவனிடம்
சமர்ப்பிக்கப் படுகின்றன. தமக்கிடையே பரஸ்பர மனஸ்தாபம் கொண்ட இருவரின் கணக்கு
வழக்குகள் தள்ளி வைக்கப் படுகின்றன. (முஸ்லிம்)
மக்களிடையே நீதி
நேர்மை
சூரியன்
உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் நம்முடைய ஒவ் வொரு மூட்டுக்கும் ஸதக்கா செய்தாக வேண்டும்.
மக்களி டையே நீதி நேர்மையோடு நடந்துகொள்வதும் ஸதக்காவா கும். (புகாரி)
நன்மையிலும்
இறையச்சத்திலும் பரஸ்பர உதவி
‘நன்மையிலும்
இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை செய்து கொள்ளுங்கள்’ (அல்குர்ஆன் 5-2)
ஒரு முஃமினும்
இன்னொரு முஃமினும் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை செய்துகொள்வதில் கட்டிடத்தைப்
போன்ற வர்கள் ஆவர்’ எனக்கூறிய
அண்ணலார் தமது கைவிரல்களைப் பிணைத்துக் காட்டினார்கள். (புகாரி)
விளிம்புநிலை
மக்களுக்கு உதவி
‘பலவீனமான
ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளை யும்
பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின்
பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது?’ (அல்குர்ஆன் 4-75)
இறைவனின்
பெயர்கூறி கேட்டால் கொடுத்தல்
இறைவனின்
பெயர்கூறி பாதுகாப்பு கோரினால் பாதுகாப்பு அளியுங்கள், இறைவனின் பெயர்கூறி ஏதேனும் கேட்டால்
கொடுத்துவிடுங்கள். உங்களை யாரேனும் அழைத்தால் பதி லளியுங்கள். யாரேனும் நன்மை
செய்தால் கைம்மாறு செய்யுங் கள். (அஹ்மத், நஸாயி)
நன்றிமறவாமையும்
கைம்மாறு கொடுத்தலும்
யாரேனும் நன்மை
செய்தால் கைம்மாறு செய்து விடுங்கள், ஏதும் இல்லையெனில் அவரை சொற்களால் பாராட்டுங்கள். நன்றி செலுத்தியதைப்
போலாகும் அது. மறைத்துவிட்டால் அது நன்றி மறத்தலாகும். (அதபுல் முஃப்ரத்- புகாரி)
சிறுசிறு
வெளியீடுகளை சேகரித்து வீட்டாருக்கும்
உறவினருக்கும்
வழங்கல்
இஸ்லாமியக்
கல்வியை வீட்டாருக்கு வழங்குவதற்காக அக் கறையுடன் சிறுசிறு வெளியீடுகளை சேகரிக்கத்
தொடங்க வேண்டும். இலவச வெளியீடுகள், ஐந்து ரூபாய் பத்து ரூபாய் மதிப்புள்ள சிற்றேடுகள் போன்றவற்றை வாங்கி
உறவினர்களு க்கு அளிப்பதை ஒரு பணியாகவே மேற்கொள்ள வேண்டும்.
பக்கத்து வீட்டார்
இஸ்லாமிய
அறிவினைப்பெற உறுதுணை
அக்கம்பக்க
வீட்டார் இஸ்லாமிய அறிவைப் பெருக்கிக் கொள்ள நாமும் ஒரு கருவியாகச் செயல்பட
வேண்டும். இஸ் லாமிய பத்திரிகைகளை வாங்கி அளித்தல், நம்முடைய வீட்டி லேயே சிறு நூலகம் ஒன்றை
ஏற்படுத்துதல், ஸிடி, டிவிடிக்களை சேகரித்து வைத்துக் கொள்ளல்,
குழந்தைகளுக்கான இஸ்லாமிய
பாடல்களைக் கொண்ட ஸிடிகளை சேகரித்தல் – என்றிவ்வா றாக ஒவ்வொரு முஸ்லிமின் வீடும் சிறியதோர் இஸ்லாமிய கல்வி மையமாகத்
திகழ வேண்டும்.
மிஸ்கீன்களைக் கண்டறிதல்
உம்மத்தின்
முன்னேற்றத்தில் உலமாக்களுக்கு எந்தளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு
செல்வந்தர்களுக்கும் உள்ளது. மிஸ்கீன்களைக் கண்டறிவது அவற்றுள் ஒன்று. மஹல்லாவில்
உண்மையிலேயே மிஸ்கீன் நிலைமையில் உள்ள சகோதரர்கள் யாரென்று தெரிந்து வைத்திருப்பது
செல்வந்தர்களின் மீது கட் டாயக் கடமையாகும். அவ்வப்போது அவர்களுக்குத் தேவை யான
உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பை அப்போது தான் அவர்களால் சிறப்பாக நிறைவேற்ற
முடியும்.
செல்வந்தர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு ரூபாய்க் கும் அல்லாஹ்விடம் கணக்கு ஒப்படைத்தாக வேண்டும்.
நம்மிடம் எந்தளவு செல்வம் அடைக்கலமாக இறைவனிட மிருந்து வழங்கப்பட்டுள்ளதோ
அந்தளவுக்கு பொறுப்போடு நடந்துகொண்டே ஆகவேண்டும்.
மிஸ்கீன்களுக்குத் தேவையான உதவிகளைத்
திரட்டுதல்
நாம் கொடுப்பது
ஒருபுறமிருக்க, கொடுப்போரிடமிருந்து
பெற்று தக்கவர்களுக்கு வழங்குவதும் ஒரு சிறந்த பணியாகும். இதிலும் நம்மை
ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
ஒன்றிரண்டு ஏழை
மாணவர்களுக்கு பொறுப்பேற்றல்
நம்முடைய
மஹல்லாவில் உள்ள ஏழைக்குடும்ப பின்னணி யைக் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து
அவர்களுடைய கல்விப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது. கல்வி உதவித் தொகை யை வழங்குபவர்கள்
யார் எனத் தெரியாமல் எத்தனையோ மாணவர்கள் படிப்பை விட்டு விடுகிறார்கள். நம்மால்
எளி தாக செய்ய இயலுகின்ற இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அநாதைகள்
வளர்ப்பு
அநாதைகளை
நம்முடைய வீட்டில் வைத்து ஒரே ஒரு அநாதையையாவது வீட்டில் வளர்ப்பது குறித்து
வீட்டில் எப் போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனைவி இல்லத்தாரின்
மனோநிலையை அதற்கேற்றாற்போல மாற்றி இம்முயற்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மக்தப் மதரஸா வளர்ச்சியில் பங்கேற்றல்
நம்முடைய
பள்ளிவாசல்களில் உள்ள (இருந்த) மக்தப் மதர ஸாக்கள் இன்று காணாமல் போய்விட்டன.
அவற்றுக்கு மறு படி உயிர் கொடுக்கும் முயற்சியில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள
வேண்டும். இப்பணிகளுக்கு எல்லாம் உள்ளார்ந்த ஈடு பாடும் உழைப்பும்தான் தேவை.
கொஞ்சம் நேரத்தை இறை வனுக்காக செலவு செய்வோமே.
வீதியில் வாராந்திர வகுப்புகள்
வீதியில்
உள்ளவர்களுக்காக வாரம் ஒருமுறை இஸ்லாமிய வகுப்புகளை சிறப்பாக பெண்களுக்கான
வகுப்புகளை ஏதே னும் ஒரு வீட்டில் வைத்து நடத்த முயற்சிக்க வேண்டும். தொடர்
நிகழ்வாய் அதனை மாற்றிவிட்டால் அப்புறம் இப் பணியை நம் பெண்களே கவனித்துக்
கொள்வார்கள்.
பத்து நிமிடங்கள் முன்னதாக பள்ளிக்கு செல்லல்
இறைவனுக்காக
தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாச லுக்கு போகத்தான் செய்கிறோம். சற்றுநேரம் முன்னதாகச்
சென்றால் நம்முடைய மனம் பல்வேறு வகைப்பட்ட சிந்தனை களில் இருந்து மீண்டு முழுமையாக
இறைநினைவில் லயிக்க வசதியாக இருக்கும். ஆகையால், பத்து நிமிடம் முன்னதாக பள்ளிக்கு போக
முயற்சிக்க வேண்டும்.
பொதுமருத்துவனைக்கு செல்லுகை
இயன்றால் வாரம்
ஒருமுறையோ மாதம் இருமுறையோ அரசாங்க பொது மருத்துவமனைக்கு போக வேண்டும். அங்கு ஏழை
நோயாளிகள் படுத் துயரத்தையும் அறியாமையால் அவர்கள் படுகின்ற பாட்டையும் காண
வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். இறை அழைப்புப்
பணிக்கான வாசலாகவும் இது அமையக் கூடும்.
வியர்வை உலருமுன்
கூலி கொடுத்தல்
வியர்வை உலருமுன்
கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த நபிமொழி. எத்தனைபேர்
செயல் படுத்துகிறோம் என்பதுதான் கேள்வி. நபிமொழியை உதா சீனப்படுத்திய
குற்றத்திற்கு நாம் அனுதினமும் ஆளாகிக் கொண்டே இருக்கிறோம்.
வியர்வை வருமளவு உண்மையான உழைப்பு
வியர்வை உலருமுன்
கூலி கொடுங்கள் என்றால் அதில் வியர்வை வரும்வரை உழை என்னும் பொருளும் இருக்கின்
றது. கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிட நினைக்க வேண்டும். கூலி கொடுக்கும் முதலாளிக்கான
விசுவாசமான உழைப்பை கொடு க்கத் தவறவும் கூடாது. இதனையும் இந்நபிமொழி உள்ளடக்கி
யுள்ளது.
சிறைவாசிகளுக்கு
உதவுதல்
அடிமைகளை
விடுவித்தல் என்னும் நிலை இன்றில்லை. ஆனால், உலகத்தில் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்
முஸ்லிம் சகோதரர்கள் சிறைபட்டுள்ளார்கள். அவர்களை விடுவிக்க பெருந்தொகை
செலவாகின்றது. செல்வந்தர்கள் இதனை தம் மீதான கடமை என உணர வேண்டும். ஒருசில
குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுவிப்பதை இஸ்லாம் பரிந்துரைக் கின்றது.
அத்தகையோர் சிறை பட்டோரின் வழக்கு செலவி னங்களுக்காக செலவிட வேண்டும்.
துஆக்களில் அக்கறை
துஆ செய்வதை நாம்
மதிப்பதே இல்லை என்றே கூறவேண் டும். நம்முடைய துஆக்கள் நமக்காகவும் உலக
நலன்களுக்காக வும் தான் உள்ளன. இவ்விரு போக்கையும் நாம் மாற்றியாக வேண்டும்.
துஆக்களில் மறுமை வெற்றியும் சொர்க்க வாழ்க்கை யும் முதலிடம் பெற வேண்டும். அதேபோல
மற்றவர்களுக்காக துஆ செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தூய்மைக்கு முக்கியத்துவம்
தூய்மை என்பது
நம் வீடுகளிலும் மஹல்லாக்களிலும் பார்க்கவே முடியாத பொருளாகி விட்டது.
முஸ்லிம்களின் வீடுகள் அசுத்தமான தங்குமிடங்களாகவும் முஸ்லிம் மஹல் லாக்கள்
சுகாதாரமற்ற குடியிருப்புகளாகவும் காட்சியளிக் கின்றன. தூய்மை இறைநம்பிக்கை
ஈமானின் ஒரு பாகம் என இஸ்லாம் கூறுகின்றது.
அந்நியப் பெண்களோடு பேச்சைத் தவிர்த்தல்
நாங்கள் அந்நியப்
பெண்களோடு சகஜமாக பேசவும் மாட் டோம், பழகவும் மாட்டோம் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) கூறுகிறார். இன்று இது சர்வ
சாதாரணமான செயலாகி விட்டது. இஸ்லாமியப் பணியில் ஈடுபடுவோர் இதனை கவனத்தில் கொள்வதே
கிடையாது. யாராக இருப்பினும் எவ ரும் வலியுல்லாஹ் கிடையாது என்பதைக் கருத்தில்
கொள்ள வேண்டும்.
செல்போன் பேச்சில் இஸ்ராஃப்
செல்போனில்
கண்டபடி பேசுவது சாதாரண காட்சி. நம்மு டைய பெண்கள் இதில் வரம்பு மீறி
ஈடுபடுகிறார்கள். பேசு வதைப் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டுதல் ஏற்கனவே குறிப் பிடப்
பட்டுள்ளது. செல்போனில் அதிலும் சிறப்பாக, பெண் களிடம் பேசுவது சகஜமாகக் காணப்படுகின்றது. இவையனைத் தும் நம்முடைய மறுமை
வெற்றிக்கு உலை வைக்கின்ற விஷ யங்கள் என்பதை நினைவில் கொண்டால் சரி.
உழைத்துச்
சாப்பிடுவதற்கு முதலிடம்
உழைப்பைச்
செலவிடாமல் சம்பாதிப்பதற்கு உம்மத் மிக வும் கவலைப் படுகின்றது. உழையாக் காசு
உம்மத்தில் கொட் டிக்கிடக்கின்றது. ஹலாலான தொகையும் ஹராமான தொ கையும் கலந்து ஒரே
வர்ணத்தில் காட்சியளிக்கின்றது. கவன மாக இருந்தாக வேண்டிய விஷயம் இது.
ஞானத்தைத் தேடுவது முஸ்லிமின் மீது கடமை
ஹிக்மத் என்னும்
ஞானத்தைத் தேடுவது ஒவ்வொரு முஸ் லிம் ஆண் பெண்ணின் மீதும் கடமையாகும். ஞானம் என்ப
தில் உலகறிவு என்பதும் அடங்கும் தானே. நம்முடைய இளை ஞர்களும் யுவதிகளும் படிப்பதே
கிடையாது. அடிப்படைக் கல்வித்தகுதி கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று சொல்
லிக்கொண்டு வெறுமனே போராட்டங்களை நடத்திக் கொண் டிருந்தால் போதுமா? அதை சரிப்படுத்த ஆரோக்கியமான முயற்சிகளில்
இறங்க வேண்டாமா? முஸ்லிம்
அறிஞர்கள், விஞ்ஞானிகளை
நீங்கள் பார்த்த துண்டா? சமூகவியல்
அறிஞர்கள், வேளாண் அறிஞர்கள்
போன்ற பல்துறை வல்லுறர்கள் இஸ்லாமிய உம்மத்தில் தோன்ற வேண்டாமா? அடுத்தவர்கள் கண்டுபிடித்த கருவி களைத்தானே
நாம் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்?
அவையொழுங்கு
அவையொழுங்கை நாம்
பொதுவாகக் கடைப்பிடிப்பதே கிடையாது. இஸ்லாமிய பண்பாட்டுக்கு ஒவ்வாத முறையில்
கூச்சமே இல்லாமல் நடந்து கொள்கிறோம். கேட்க வேண்டுமே என்பதற்காக எதையாவது கேட்டு
வைப்பது, விதண்டாவாத மான
கேள்விகளை கேட்பது, என்ன சொல்லப்
படுகின்றது என் பதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து கொள்வது, இன்னபிற.
குறிப்பிட்டுச்
சொல்லவேண்டிய பல பண்புகள் இங்கு கூறப் படவில்லை. அதேசமயம், இந்த 150 பண்புகளைப் பற்றியும் உண்மையில் தனித்தனி
நூல்களாக வெளியிட வேண்டும். அந்தளவுக்கு சமூக அரங்கில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற
அம் சங்களாக இவை விளங்குகின்றன. நம்மிடம் இவற்றில் என் னென்ன உள்ளன? என்னென்ன இல்லை? என்பதைக் கண்ட றிந்து அவற்றை இஸ்லாமிய
பண்புகளாக உருமாற்றும் முயற் சியை இந்த ரமழானில் இருந்து தொடங்க வேண்டும். ஏற்கன
வே சொன்னபடி இவற்றுள் மூன்றிலொரு பகுதியையாவது தொடர்ந்து கடைப்பிடிக்க முயற்சிக்க
வேண்டும். அதனை இன்றிலிருந்து தொடங்க வேண்டும்.
முற்றும்.
- அதிரை தென்றல் (Irfan Cmp)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!