தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

கடல் நீரை குடிநீராக்கும் கருவி : இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு

உலகின் பல்வேறு நாடுகள் குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில், கடல் நீரை குடி நீராக்கி மாற்றுவதற்கான நவீன வழிகளை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள இந்திய விஞ்ஞானி கமலேஷ் ஸிர்க்கார் முயற்சித்து வருகிறார்.இதற்கென்று "நானோ தொழில்நுட்ப" (nano technology) முறையில் இயங்கும் ஒரு கருவியும் அவர் தயாரித்துள்ளார். சுத்தமான குடி நீரின் பற்றாக்குறையால் மக்கள் சுகாதாரமற்ற குடி நீரை பயன்படுத்துவதன் காரணமாக காளரா, டைஃபாய்ட் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு (Kidney Stones) நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.மழையை மட்டும் நம்பினால் வரும்காலத்தில் குடி நீர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்ற நிலையில் இனி கடலில் மட்டும் தான் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது என்ற நிலைமை வந்துகொண்டிருக்கிறது! கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வெளியேற்றுவதற்கு "டி ஸலைனேஷன்" (Desalination) என்ற முறை தற்போது பயன்படுத்தி வருகிறது. அதிக செலவு ஏற்படும் வகையிலான இந்த முறை தான் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள ஏராளமான நாடுகள் பயன்படுத்துகின்றன. "டி ஸலைனேஷன்" முறையில் செலவு அதிகம் என்பது மட்டுமல்லாமல் இதற்கு வேகமும் குறைவு தான். நானோ தொழில்நுட்ப முறைப்படி கடல் தண்ணீரை வெகு விரைவாக சுத்திகரிக்க முடியும், இருப்பினும் செலவு ஏறத்தாழ டி ஸலைனேஷன் முறைக்கு சமமாகத்தான் வரும் என்கிறார் கமலேஷ் ஸிர்க்கார்.கடந்த 20 வருடங்களாக உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தி வரும் "சவ்வினால் பிரித்தல்" (membrane separation) என்ற முறையை மேம்படுத்தும் வகையிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் இவர். வழக்கமான முறையிலிருந்து மாறாக இவர் நானோ தொழில் நுட்ப முறை பயன்படுத்துகிறார். அதனால் குறைந்த சமயத்தில் சுத்திகரிப்பு சாத்தியமாகும்.அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி தொழில் நுட்ப கல்லூரியில் சவ்வு தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக செயலாற்றும் திரு. கமலேஷ் ஸிர்க்கார் 1963 -ம் ஆண்டில் கொரக்பூர் ஐ.ஐ.டி.யிலிருந்து இளம்கலை பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 1966 ம் ஆண்டில் முதுகலை பட்டமும், 1996 ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். இந்திய வேதியியல் விஞ்ஞானிகளின் பயிலகம் (The Indian Institute of Chemical Engineers) வழங்கும் சிறப்பு பேச்சாளருக்கான விருதை முதன்முறையாக பெற்றவர் இவர். வேதியியல் தொழில் நுட்பம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற விஷயத்தில் சென்னையில் நடந்த உலகளாவிய கருத்தரங்கத்தில் வைத்து இந்த விருதை பெற்றார். உலகெங்கும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடல்நீரை நானோ தொழில் நுட்ப முறையில் சுத்திகரிப்பதற்கான இவரது முயற்சிகள் வெற்றிபெறும் நாள் வரை நாமும் காத்திருப்போம்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்