தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

அறிந்தவை (பாகம்-3)

கூடைப்பந்தாட்டம் (Basketball): உலகில் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் கூடைப்பந்தாட்டம் ஓன்று ஆகும். சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.
ஒவ்வொரு வீரரும் குறிப்பான பங்களிப்பு வழங்குவர். நியமமாக இரண்டு காப்பாளர்கள் (guards)இரண்டு முன்னணிகளும் (forwards) ஒரு மத்திய வீரரும் (center) விளையாடுவர். அணியின் மிக உயரமான வீரராகமத்திய வீரர் இருப்பார். இவர் எதிர் அணியிடம் பந்து இருந்தால் அவர்கள் பந்தை கூடைக்குள் வீசுவதைத் தடுப்பார். காப்பாளர்கள் அணியின் வேகமான பந்து பரிமாற்றும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர். எது எவ்வாறாகினும் வீரர்கள் விரும்பிய இடத்தில் விளையாடலாம்.
கூடைப்ந்தாட்டம் மிக வேகமான விளையாட்டாகும் ஆகையால் அணிக்குள் மிகவும் ஒற்றுமை காணப்பட வேண்டும். பொதுவாக அணியை ஒரு பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பார். இவரே அணியின் தந்திரோபாயங்களை முடிவு செய்வார். அணியிடம் பந்து இருக்கும்போது பந்தை கூடைக்குள் போடுவதும், எதிரணியிடம் பந்து இருக்கும்போது பந்து கூடைக்குள் விழாமல் தடுப்பது அல்லது பந்து மீதான கட்டுப்பாடை இழக்கச்செய்வதும் முக்கியமான செயற்பாடுகளாகும்.
3.1 மீற்றர் உயரத்தில் உள்ள வளையம் ஊடாக பந்தை வீசுவதன் மூலம் புள்ளிகளைப் பெறுவர். வீரர்கள் கூடைப்பந்தை நிலத்தில் துள்ள வைத்தவாறோ அல்லது தமக்கிடையில் பரிமாற்றிக் கொள்வதன் மூலமோ பந்தை இடமாற்றுவர். பந்தை வளையத்தின் ஊடாக போடுவதன் மூலம் இரண்டு புள்ளிகளை பெறலாம். குறித்த எல்லைக்கு அப்பால் நின்று பந்தை போடுவதன் மூலம் மூன்று புள்ளிகளை பெறலாம். எதிர் தரப்பு முறை தவறாக நடக்கும்போது இடையூறு அற்ற வீச்சு ஓன்றையோ அல்லது கூடுதலாகவோ பெறலாம். இந்த வீச்சுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்
.


ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிம்பிள் வழி: வழக்கமான இயக்கத்தைக் காட்டிலும் உடலில் கூடுதலாக ஒரு சின்ன அசைவு ஏற்பட்டாலும் அது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். இந்த இடத்தில் அவர்கள் மராத்தான் ஓட்டத்தைப் பற்றியோ, அல்லது கடினமான உடற் பயிற்சிகள் பற்றியோ பேசவில்லை. ஏன்? உடற்பயிற்சி என்ற வார்த்தையை கூட அவர்கள் உச்சரிக்கவில்லை. பின்னர் உடல் இயக்கம் என்று எதை குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? வீட்டில் நாம் சாப்பிட்ட தட்டுக்களை கழுவுவது, லிப்ட் வசதி இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது, தினந்தோறும் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அருகில் உள்ள கடைக்கு மொபட் மூலம் சென்று வாங்காமல் காலாற நடந்து போய் வாங்கி வருவது, வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வது, காய்கறிகள் நறுக்குவது போன்ற சின்ன சின்ன வேலைகளை தான் உடல் இயக்கமாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதய நோய்கள், பக்கவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணிகளில் ரத்த அழுத்த சிக்கலும் ஒன்று என்பதை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HIGH Blood Pressure Symptoms -Stressed, Sedentary, Bloated, Weak, Failing
Systolic - Diastolic
210 - 120 - Stage 4 High Blood Pressure
180 - 110 - Stage 3 High Blood Pressure
160 - 100 - Stage 2 High Blood Pressure
140 - 90 - Stage 1 High Blood Pressure
140 - 90 - BORDERLINE HIGH
130 - 85 - High Normal
120 - 80 - NORMAL Blood Pressure
110 - 75 - Low Normal
90 - 60 - BORDERLINE LOW
60 - 40 - TOO LOW Blood Pressure, Coma
50 - 33 - DANGER Blood Pressure
LOW Blood Pressure Symptoms -Weak, Tired, Dizzy, Fainting, Coma

கேள்வி: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? ஆம் எனில் எவ்வாறு தடுப்பது?

டாக்டர் ஜி செங்குட்டுவேலுவின் பதில்:ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம். இவ்வகை மாத்திரைகள் அதிக திறன் கொண்டவை. இவற்றால் கிடைக்கும் பலன்களுடன் ஒப்பிடுகையில் பக்க விளைவுகள் மிக மிகக் குறைவே. எனவே அவற்றை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. இந்தச் சிறிய அளவு பக்க விளைவு ஏற்படுவதற்குக் கூட நீங்கள் எந்த ரத்த அழுத்த எதிர்ப்பி மாத்திரையைப் பயன்படுத்துகிறீர்க்ள் என்பதைப் பொருத்தே அமையும். உதாரணத்திற்கு பரிந்துரைக்கப்படும் ஏசிஇ ரக நோய் தீர்ப்பிகள் சில சமயம் இருமலையும், கால்சியம் அடைப்பான்கள் உள்ளிட்ட ஏனைய சில மருந்துகள் கால்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். பக்க விளைவுகளைக் குணப்படுத்த உடனடியாக மருத்துவரைச் சந்தித்து மாற்று மருந்து எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ல் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களை கண்டு பிடித்தார்.

பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

மௌ டம் (Mau tam) என்பது 48 ஆrண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும், மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. மௌ டம் நிகழ்வின்போது மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக பிளேக் நோய் பரவ வாய்ப்புண்டாகிறது

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்