தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

பேஸ்புக்குக்கு ஆப்பு!

பிரபஞ்சம் போல நொடிக்கு நொடி விரிந்துகொண்டே போகும் உலகின் மிகப்பெரிய சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்கைக் கண்டு இண்டர்நெட் சூப்பர்ஸ்டார் கூகிளே கலங்கிப்போய்க் கிடக்கிறது. ஏற்கனவே பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்காவின் நம்பர் வன் ப்ரேண்டாக பேஸ்புக் வந்துவிட்டது. முன்பு இந்த இடத்தில் இருந்தது கூகிள். ஒரு பக்கம் பேஸ்புக் என்றால் இன்னொரு பக்கம் ட்விட்டர். இன்றைய நாட்களில் இந்த இரண்டு வெப்சைட்களுமே கூகிளுக்குப் பெரிய தலையிடியாக மாறிவிட்டன.

எனக்கென்றால் கூகிளின் சோசியல் நெட்வொர்க் ஐடியாக்கள் ஒவ்வொன்றாகத் தோல்வியடைந்து வருவதுபோல் தோன்றுகிறது. ட்விட்டர் வந்து ஜைக்குவுக்கு ஆப்பு வைத்தது. பேஸ்புக் வந்து ஆர்குட்டுக்கு ஆப்பு வைத்தது. கூகிள் பெரிதாக அலப்பறை பண்ணித் தொடங்கிய கூகிள் வேவ் அடங்கிவிட்டது. அலப்பறை பண்ணாமல் தொடங்கிய கூகிள் பஸ்ஸும் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக் கூகிளுக்கு பெப்பே காட்டிவிட்டு கூகிளின் ஜென்மவிரோதியான மைக்ரோசாப்டுடன் கொஞ்சிக் கொண்டிருக்க, டிவிட்டரை கூகிளுக்கு விற்கமாட்டோம் என்று அதன் நிர்வாகிகள் சொல்லிவிட்டார்கள்.

இதெல்லாம் கூகிளின் தலைவலிகள்... நமக்கெதற்கு? நான் சொல்லவந்த மேட்டருக்கு வர்றேன். இப்படி கூகிளே அஞ்சிநடுங்கும் பேஸ்புக்குக்கு ஆப்பு வைப்பதற்கு 4 இளைஞர்கள் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! மேக்ஸ்வெல், டானியல், ரஃபேல் மற்றும் இல்யா என்ற இந்த நால்வரும் மற்றவர்களைப்போல் கல்லூரி முடித்து ஒழுங்காக வேலைக்குப் போகாமல் டயாஸ்போரா என்ற பெயரில் பேஸ்புக்குக்கு நிகரான சோசியல் நெட்வொர்க் சாஃப்ட்வேர் எழுதப்போகிறார்களாம். அதாவது ப்ளாக்குகளுக்கு வேர்ட்ப்ரஸ் போல சோசியல் நெட்வொர்க்குகளுக்கு டயாஸ்போரா! வேர்ட்ப்ரஸ் போல டயாஸ்போராவையும் உங்கள் சொந்த சேர்வர்களிலேயே இன்ஸ்டால் செய்து உங்கள் சொந்த சோசியல் நெட்வொர்க்கை உருவாக்கலாம்!

டயாஸ்போரா இன்னும் மூன்றே மூன்று மாதங்களில் தயாராகிவிடும் என்றும், அது முற்றிலும் ஃப்ரீயாக, ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேராக வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்