This is featured post 1 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 2 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 3 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 4 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 5 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

நியூ(ஸ்):

தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்
Showing posts with label அறிவோம். Show all posts
Showing posts with label அறிவோம். Show all posts

நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்

1 உங்களின் கருத்து (Comments)

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்

பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த
மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

இணைய பிரவுசர்கள் பற்றின ஒரு திடுக்கிடும் தகவல்

0 உங்களின் கருத்து (Comments)

குறிப்பிட்ட சில இணைய பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

காஸ்பெர்ஸ்கி நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 

மொத்தத்தில் 23% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.

இவர்களில் 14.5% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர். 

8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். 

ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர். 

நிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை. 

சில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும். 

இது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.

நன்றி :  (தகவல்) தெரிஞ்சிக்கோ 

கொசு போலவே தெரிகிறதா?

0 உங்களின் கருத்து (Comments)

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.
இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

நன்றி : த.ருஷாந்தன்

முதுகுவலி: ஏன் வருகிறது?

0 உங்களின் கருத்து (Comments)


முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

தகவல் : மூகநூலிளிருந்து

தெர்மொகோலை பற்றின சில தகவல்!

0 உங்களின் கருத்து (Comments)

இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது. 

இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிகின்  அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோலை  நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோலில் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்) மிக அதிகமாக பயன்படுகிறது.

இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

0 உங்களின் கருத்து (Comments)

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால் நாட்பட்ட வலிகளின் பாதிப்பு அதிகமாகலாம்....

வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.



குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

கண்களை பாதுகாக்க

0 உங்களின் கருத்து (Comments)

பொக்கிஷமான கண்! பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு. நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா? 

சுருக்கங்கள் மற்றும் கோடுகள் கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.

தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

நடைப்பயிற்சி அவசியம் ஏன்?

0 உங்களின் கருத்து (Comments)

நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.

கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.

நாம் விஷத்தை உண்கிறோம்..

0 உங்களின் கருத்து (Comments)

15 வருடங்களுக்கு முன்னால் Outlook பத்திரிக்கையில் ஒரு அட்டை பட கட்டுரை.    தலைப்பு இதுதான் “நாம் விஷத்தை உண்கிறோம்” என்று.    அப்பொழுது அதிக ஆங்கில அறிவு இல்லாததனால் அக்கட்டுரையின் முழுக் கருத்தை அறிய முடியவில்லை. ஆனால் கருத்து இதுதான் நாம் சாப்பிடும் உணவு அனைத்திலும் நச்சுப்பொருட்கள் உள்ளன என்று.அப்பத்திரிக்கையின் அட்டைபடத்தையே அழகாக சித்தரித்திருப்பர். காய்கறிகள்,மீன் மற்றும் உணவு வகைகள் அனைத்தையும் மண்டை ஓட்டு வடிவில் அமைத்திருப்பர்.  பார்க்கவே பயமாக இருக்கும்.இப்பொழுதும் பயம்தான் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலையில்.ஆனால் இப்பொழுது விவாதிக்க வேண்டியதே வேறு விடயம்.  ஆம்.    எப்படி நாம் உண்ணும் உணவில் விஷம் உள்ளது என்று.  
நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.ஏதேச்சையாக நான் சேர்ந்ததோ இளங்கலை சுற்றுப்புற அறிவியல் பாடத்தில் போதாதா பின்னே இவ்வுலகில் நிகழும், நிகழ்ந்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புற மாசுபடுதல் என்ன என்ன, எப்படி, எங்கே, யாரால் போன்ற பாடங்கள் பல..

அதில் ஒன்றுதான் Outlook பத்திரிக்கை சுட்டிக்காட்டிய உண்ணும் உணவில் விஷம்.       

நாம் வயல்களில் தெளிக்கும் பூச்சி மருந்துகளில் ஆரம்பிக்கின்றது விஷமம்.
ஆம்.  அப்பூச்சி மருந்துகள் இல்லாமல் நாம் நல்ல அருவடையை பார்க்க முடியாது, விளைச்சல் இருக்காது... அவ்வளவு ஏன் பொதிகை தொலைக்காட்சியிலேயே விளம்பரப்படுத்தப்படுகிறது இன்ன மருந்துகளை இன்ன காலங்களில் தெளிக்க வேண்டும் என்று.சரி, அப்பூச்சு மருந்துகளை அத்தாவரமும் தன்னுள் எடுத்துக் கொள்கிறது, அவற்றை உண்ணும் கால்நடைகளின் கொழுப்பு 20% அந்த விஷத்தை சேமித்துக்கொள்கிறது, மீதியை அவ்விலங்கின் சிறு நீரகங்கள் வெளியேற்றி விடுகிறது. கால்நடைகள் தரும் பாலிலும் உள்ளது அந்த பூச்சுக்கொல்லிகள். விளைய வைத்த அந்த தானியத்தையோ அல்லது அந்த கால்நடையையோ அல்லது பாலையோ அம்மனிதன் உண்ணும் போது அவ்வளவும் அம்மனிதனுள் இறங்குகிறது ஆனால் கடவுளின் அற்புதங்களில் ஒன்றான நமது சுத்திகரிப்பு இயந்திரங்களான சிறுநீரகங்கள் வெளியேற்றி விடுகின்றன, இப்படி ஏதாவது ஒரு நாள் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இது இருந்ததென்றால்,   ஆம்.. நாம் அன்றாடம் உண்ணும் அனைத்து உணவிலும் உள்ளது இந்த Pesticides என்ற இந்த பூச்சிக்கொல்லிகள். அதனால் நமது சிறு நீரகங்களும் தொடர்ந்து பாடுபட்டு இதனை வெளியேற்றுகிறது...ஆனால் ஒருநாள்...அந்த சிறுநீரகங்களும் நின்று விடும்.அவ்வளவுதான்....

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்...

0 உங்களின் கருத்து (Comments)

தர்பூசணிப்பழச் சாறு:
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:
அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது. 


ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும். மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும். 

பேஸ்புக்குக்கு ஆப்பு!

0 உங்களின் கருத்து (Comments)

பிரபஞ்சம் போல நொடிக்கு நொடி விரிந்துகொண்டே போகும் உலகின் மிகப்பெரிய சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்கைக் கண்டு இண்டர்நெட் சூப்பர்ஸ்டார் கூகிளே கலங்கிப்போய்க் கிடக்கிறது. ஏற்கனவே பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்காவின் நம்பர் வன் ப்ரேண்டாக பேஸ்புக் வந்துவிட்டது. முன்பு இந்த இடத்தில் இருந்தது கூகிள். ஒரு பக்கம் பேஸ்புக் என்றால் இன்னொரு பக்கம் ட்விட்டர். இன்றைய நாட்களில் இந்த இரண்டு வெப்சைட்களுமே கூகிளுக்குப் பெரிய தலையிடியாக மாறிவிட்டன.

எனக்கென்றால் கூகிளின் சோசியல் நெட்வொர்க் ஐடியாக்கள் ஒவ்வொன்றாகத் தோல்வியடைந்து வருவதுபோல் தோன்றுகிறது. ட்விட்டர் வந்து ஜைக்குவுக்கு ஆப்பு வைத்தது. பேஸ்புக் வந்து ஆர்குட்டுக்கு ஆப்பு வைத்தது. கூகிள் பெரிதாக அலப்பறை பண்ணித் தொடங்கிய கூகிள் வேவ் அடங்கிவிட்டது. அலப்பறை பண்ணாமல் தொடங்கிய கூகிள் பஸ்ஸும் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக் கூகிளுக்கு பெப்பே காட்டிவிட்டு கூகிளின் ஜென்மவிரோதியான மைக்ரோசாப்டுடன் கொஞ்சிக் கொண்டிருக்க, டிவிட்டரை கூகிளுக்கு விற்கமாட்டோம் என்று அதன் நிர்வாகிகள் சொல்லிவிட்டார்கள்.

இதெல்லாம் கூகிளின் தலைவலிகள்... நமக்கெதற்கு? நான் சொல்லவந்த மேட்டருக்கு வர்றேன். இப்படி கூகிளே அஞ்சிநடுங்கும் பேஸ்புக்குக்கு ஆப்பு வைப்பதற்கு 4 இளைஞர்கள் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! மேக்ஸ்வெல், டானியல், ரஃபேல் மற்றும் இல்யா என்ற இந்த நால்வரும் மற்றவர்களைப்போல் கல்லூரி முடித்து ஒழுங்காக வேலைக்குப் போகாமல் டயாஸ்போரா என்ற பெயரில் பேஸ்புக்குக்கு நிகரான சோசியல் நெட்வொர்க் சாஃப்ட்வேர் எழுதப்போகிறார்களாம். அதாவது ப்ளாக்குகளுக்கு வேர்ட்ப்ரஸ் போல சோசியல் நெட்வொர்க்குகளுக்கு டயாஸ்போரா! வேர்ட்ப்ரஸ் போல டயாஸ்போராவையும் உங்கள் சொந்த சேர்வர்களிலேயே இன்ஸ்டால் செய்து உங்கள் சொந்த சோசியல் நெட்வொர்க்கை உருவாக்கலாம்!

டயாஸ்போரா இன்னும் மூன்றே மூன்று மாதங்களில் தயாராகிவிடும் என்றும், அது முற்றிலும் ஃப்ரீயாக, ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேராக வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல்

0 உங்களின் கருத்து (Comments)

அதிகமான மக்கள் சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியலை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் அறிவியல் ஆனந்தம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள மிக பயனுள்ள ஒரு வீடியோ தொகுப்பு. இதை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இதை உருவாக்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
கீழே கிளிக் செய்யவும்.

இறுதி நாளின் அடையாளங்கள்!!!

1 உங்களின் கருத்து (Comments)

1.மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 477750
2.பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவதுயுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டிவாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
3. குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
4.விபச்சாரமும்மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும்,மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 8081557768085231
5.தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்குஎன்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 596496
6.பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்துஅதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும்,அரபுப் பிரதேசம் நதிகளும்சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
7.காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)
8.கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85103660377061
9.நில அதிர்வுகளும்பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 10367121
10.பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682அபூதாவூத் 379இப்னுமாஜா 731,அஹ்மத் 1193112016,
12079, 12925, 13509.
11.நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும்நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306
12.பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81523155776808
13.ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 39715098
14.உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365
15.பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511
16.தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
17.பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
18.சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 71157121
19.இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 36097121
20.முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான்,முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும்கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 34567319
21.யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போதுமுஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926
22.கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179
23.யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119
24.கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 35177117
25.அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183
26.எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191
27.செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 103614127121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424
28.மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 360971216936
29.பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176
30.மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451
31.அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546
32.மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ்மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 – இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்இது கடுமையான வேதனையாகஅமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனதுசெவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி
யஃஜுஜ்மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ்மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)
ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)
மூன்று பூகம்பங்கள்

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம்,அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்செல்லும்,அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
நன்றிஅதிரை வலைபூவிலிருந்து. 

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்