பள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.
நம் குழந்தைகள் அணியும் உடைகள் கூட பெரிய பிரச்னைகளை கொண்டு வந்து விடுகின்றன. தந்தையின் பின்னால் அமர்ந்து செல்லும் நம் மகள்களின் பள்ளி சீருடைகள், பிறர் கண்களை உறுத்தும் அளவுக்கு உள்ளன. சீருடைகளை மாற்ற வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமே நாட்டின் பாதுகாப்பு. பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் இன்று பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை ஒத்துக் கொள்ள வேண்டும். அரைகுறை உடை அணிவித்து "ரியாலிட்டி ஷோ-க்களில் நம் குழந்தைகளை காட்சிப் பொருளாக்கும் நாம்தான் இதற்கு காரணம்.
ஆட்டோக்களில் மூன்று பேருக்கு மேல் பயணிக்க கூடாது என போக்குவரத்து துறை சட்டம் கூறுகிறது. அதே ஆட்டோவில் இருபது குழந்தைகளை திணித்து கொண்டு சென்றால் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
முதுகில் புத்தக மூட்டையை சுமந்தபடி அரசு பஸ்சின் பின்னால் ஓடும் நம் மாணவியரின் விலகும் உடைகளை அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். நிறுத்தாமல் வேகம் எடுக்கும் பஸ்சை எவரும் கண்டிப்பதில்லை. உடைகளை சரி செய்தபடி பஸ்சை பிடிக்க ஓடும் அந்த மாணவியின் இடத்தில் இருந்து பிரச்னையை நாம் பார்க்க வேண்டும்.
பெண்களையும் குழந்தைகளையும் மோசமாக சித்திகரிக்கும் சினிமாக்களையும், "டிவி' ஷோக்களையும் பார்க்காமல் புறக்கணிப்போம்,'' குழந்தைகளுடன் தினமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பள்ளியில் நடந்தவற்றை தினமும் காது கொடுத்து கேளுங்கள், என்றார்.
- பேராசிரியர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன்
'அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்கள் மீது தொங்கவிட்டு கொள்ளட்டும், அவர்களை அறிந்து கொள்வதற்க்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமாலிருப்பதற்க்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்....., - (திருக்குர்ஆன் 33:59)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய
இந்த இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல எனக்கூறி அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - (அபு தாவூத்)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!