தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

கொசு போலவே தெரிகிறதா?

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.
இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

நன்றி : த.ருஷாந்தன்

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்