அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
அதானுக்குப்பின் துஆ
‘பாங்கைக் கேட்டபின்பு, ‘அல்லாஹும்ம
ரப்ப ஹாதிஹித் தஅவத்தித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆதி முஹம்ம தனில்
வஸீலத்த வல் ஃபழீலத்த வப்அஸ்ஹு மகாமம் மஹ் மூதா அல்லதி வஅத்தஹு’ என்னும் துஆவை ஓதினால் அவ ருக்கு நான் மறுமைறாளில்
பரிந்துரைப்பேன்’
என அண்ணலார் கூறியுள்ளார்கள். (புகாரி)
ஐவேளைத் தொழுகையை
நேரத்தோடு தொழுவது
ஐவேளைத் தொழுகைகளையும் நேரம்
வந்தவுடன் தொழுது கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தொழுவதுதான் முஃமின்களின்
மீது கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. (4-103)
ஐவேளைத் தொழுகைகளையும் விடாது
தொழுது வரவேண் டும். நேரம் வந்ததும் நன்முறையில் ஒழு செய்து பயபக்தியோ டும்
இறையச்சத்தோடும் தொழுதால் அவர் முன்பு செய்த பெரும்பாவங்கள் அல்லாத எல்லாவகை
குற்றங்களுக்கும் பரி காரமாக அத்தொழுகை ஆகிவிடுகின்றது, காலம் முழுக்க இச் செயல் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என
நபிமொழி ஒன்று தெரிவிக்கின்றது. (முஸ்லிம்)
சுபுஹும் அசரும்
இருமுனைத் தொழுகைகளை (சுபுஹ், அசர்) தவறாது தொழு பவருக்கு சொர்க்கம் கிடைக்கும் (புகாரி)
ஜும்ஆ தொழுகை
ஐவேளைத் தொழுகைகளும் ஜும்ஆ தொழுகை
அடுத்த ஜும்ஆ வரையிலும் ரமழான் அடுத்த ரமழான் வரையிலும் புரி யப்படுகின்ற
பெரும்பாவங்கள் அல்லாத சிறுசிறு குற்றங் களுக்கு பரிகாரமாக ஆகிவிடுகின்றன.
(முஸ்லிம்)
ஜும்ஆநாளின் துஆ
ஏற்கப்படும் தருணம்
ஜும்ஆ நாளின் ஒரு தருணத்தில்
இறைநம்பிக்கையுள்ள ஓர் அடியார் இறைவனுக்கு முன்பு, நின்று தொழுது, கேட்கின்ற
பிரார்த்தனை ஏற்கப்படுகின்றது. (புகாரி, முஸ்லிம்)
அத்தரு ணத்தை தவறவிடக் கூடாது.
கஹஃப் அத்தியாயம்
ஜும்ஆ அன்று கஹஃப் அத்தியாயத்தை
ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை இரண்டு ஜும்ஆகளுக்கு இடையில் அவருடைய (ஈமானியப்)
பேரொளியை அது அதிகரிக்கின்றது. (நஸாயி, ஹாகிம்)
தவறாமல் மறக்காமல் கஹஃப் அத்தியாயத்தை ஓதிப் பழகவேண்டும்.
பள்ளிவாசலுக்கு நடந்து
போதல்
பள்ளிவாசல் பக்கத்தில் இருந்தாலும்
தொலைவில் இருந்தா லும் நம்மில் பெரும்பாலோர் வாகனத்தில்தான் போகிறோம். ‘காலையிலோ மாலையிலோ பள்ளிக்கு செல்பவருக்கு இறை வன்
சொர்க்கத்தில் சிறந்த தங்குமிடத்தை உருவாக்குகிறான்’ (புகாரி, முஸ்லிம்)
நாம் பள்ளியை நோக்கி
எடுத்துவைக்கும் ஓரடிக்கு ஒரு பாவம் மன்னிக்கப் படுகின்றது. அடுதத அடிக்கு நம்
படித்தரம் ஒன்று உயர்த்தப் படுகின்றது. ஆகையால் முடிந்தவரை பள்ளி வாசலுக்கு நடந்து
செல்லப் பழக வேண்டும்.
ஜமாஅத் தொழுகையைப்
பேணுதல்
ஜமாஅத் தொழுகையில் சிறப்புகளைப்
பற்றி நாம் நன்றாக அறிந்திருந்தாலும் அதற்கு உண்மையில் தந்தாக வேண்டிய
முக்கியத்துவத்தை தருவதில்லை. இரண்டாவது ஜமாஅத் தொழுகை உண்மையில் ஜமாஅத் தொழுகையாக
கணக்கிடப் படாது என்று கருத வேண்டும். நபிமொழிகளை ஆழமாக அணு கினால் இக்கருத்தையே
அடைகிறோம். ஆகையால்,
ஜமாஅத் தோடுதான் தொழுவது என்னும் உறுதியான
முடிவை மேற் கொள்ள வேண்டும்.
ஜமாஅத் தொழுகையில் 27 மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்றிருந்தாலும் ‘தொழுகையை நிலைநிறுத்துவது’ என்னும் நம்மீதான கடமை ஜமாஅத்தோடு தொழுதால்தான் நிறை வேறும்
என்பதை மனதிலேற்றி அதனை ஒரு கட்டாயக் கடமை யாக உணர வேண்டும்.
முதல் ஸஃப்
பாங்கு கொடுப்பதற்கும் முதல்
ஸஃப்பில் நின்று தொழுவ தற்கும் நபிமொழிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அடித்துப் பிடித்தாவது முஃமின்கள் முதல் ஸஃப்பில் நின்று தொழுவார்கள் என
சொல்கின்றன. தொழுகையைப் பற்றிய முறையான அச்ச உணர்வை நம்மைவிட்டு அகன்று விட்டதால்
இவ்வம்சங்களுக்கு நம் வாழ்வில் இடமே இல்லாமல் போய் விட்டது. உடனடியாக தீவிர கவனம்
செலுத்தியாக வேண்டிய விஷயங்கள் இவை.
ளுஹா தொழுகை
‘உங்கள் ஒவ்வொருவருடைய மூட்டுகளுக்காகவும் ஸதக்கா செய்தாக
வேண்டியுள்ளது. ஸுப்ஹானல்லாஹ் எனக்கூறும் தஸ்பீஹ் ஸதக்காவாகும். அல்ஹம்து லில்லாஹ்
என்னும் – தஹ்மீத் ஸதக்காவாகும். லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில் லாஹ்
எனக்கூறுவதும் ஸதக்காவாகும். அல்லாஹு அக்பர் என் றுரைப்பதும் ஸதக்காவாகும்.
நன்மையை ஏவுவது ஸதக்கா வாகும். தீமையைத் தடுப்பது ஸதக்காவாகும். ழுஹா தொழு கையில்
இரண்டு ரகஅத்கள் தொழுவது இவையனைத்திற்கும் நிகராகும்’ (முஸ்லிம்)
ஸஹாபியப் பெண்கள் தஹஜ்ஜுத்
தொழுகைக்குப் பதிலாக ழுஹா தொழுகும் வழக்கமுடையோராக இருந்துள்ளார்கள். இதனையும்
நர்ம மனதிற் கொள்ள வேண்டும். ஆண்களால் ழுஹா தொழுக இயலாது. நேரம் ஒத்துழைக்காது
என்றிருந் தால் பெண்கள் இத்தொழுகையில் அக்கறை செலுத்த வேண்டும்.
உபரித் தொழுகைகள்
நாள்தோறும் கடமையான தொழுகைகள் போக
உபரியாக பன்னிரெண்டு ரகஅத்கள் தொழுபவருக்காக இறைவன் சொர்க்கத்தில் மாளிகை ஒன்றைக்
கட்டுகிறான். (முஸ்லிம்) தினந்தோறும் மாளிகை ஒன்று. எளிதாகக் கிடைக்கின்றது.
விடலாமா? விடுவது அறிவுடைமை ஆகுமா?
அடுத்து, முடிந்தவரை உபரித் தொழுகைகளையும் நஃபில் தொழுகைகளையும்
வீட்டில் தொழ வேண்டும். அதனால் பல் வேறு பயன்கள் விளைகின்றன. வீடுகளை கபுறுகளாக
ஆக்கி விடாதீர்கள். அங்கும் தொழுங்கள் என அண்ணலாரும் கூறியுள்ளார்கள்.
நிறைய நிறைய ஸஜ்தாக்கள்
இறையடியான் ஸஜ்தாவில்
இருக்கும்போது இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறான். ஆகையால், ஸஜ்தாக்களை அதிக மதிகம் செய்ய வேண்டும். ஸஜ்தாக்களின்போது
துஆக்களை அதிகமதிகம் செய்ய வேண்டும். (முஸ்லிம்)
காலைத்தொழுகைக்குப்பின்
திக்ரு
காலைத் தொழுகையை ஜமாஅத்தோடு
நிறைவேற்றிவிட்டு அங்கேயே சூரிய உதயம்வரை அமர்ந்து திக்ரில் ஈடுபடுவது
நபிமொழிகளில் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயமாகும். நம்மு டைய வாழ்க்கையை முழுமையாக ‘செட்டில்’ செய்வதற்கு
நாம் பெரும்பாடு படுகிறோம். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வழக்கப்
படுத்துகிறோம். காலையிலோ மாலையிலோ ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுகைக்குப் பிறகு, பள்ளிவாசலில் உட்கார்ந்து இறைவனைத் தியானிப்பதற்கும் திக்ரு
செய்வ தற்கும் நேரத்தை ஒதுக்கி வழமைப்படுத்த வேண்டும்.
ஜனாஸா தொழுகை
ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து
கொண்டால் ஒரு கீறாத் நன்மையும் அதனை அடக்கும்வரை கூடயிருந்தால் இரண்டு கீறாத்
நன்மையும் கிடைக்கும். கீறாத் என்றால் மலையளவு எனப்பொருள். (புகாரி, முஸ்லிம்) நம்முடைய மஹல்லாவில் யார் வஃபாத் ஆனாலும் நம்
மீது கடமை என்னும் நினைப் போடு ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும். உண்மையில் ஒரு
முஃமின் இன்னொரு முஃமினுக்கு செய்தாக வேண்டிய ஐந்து கடமைகளில் இதுவும் ஒன்று.
ஜனாஸாவைப் பின்தொடருதல்
நம்மால் இயலுமென்றால் நேரம் ஒதுக்க
முடியும் என்றால் ஜனாஸா அடக்கப்படும்வரை கூட இருக்கவேண்டும். இது ஒரு கடமை
என்பதோடு கபுறு ஸியாரத் செய்த நன்மையும் மௌத் தைப்பற்றிய ஞாபகமும் நம்முடைய
உள்ளத்தில் புத்துணர்வு அடைவதற்கும் இது வழிவகுக்கும்.
இஃதார் நேரப் பிரார்த்தனை
முறையான நோன்பை இறைவனுக்காக
இருந்து அதனை முழு மைப்படுத்தும் இஃப்தார் நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்
தனைக்கென்று ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. ஆகையால், சிரத்தையோடு அந்நேரத்தில் துஆ கேட்க வேண்டும்.
அதிகமதிகம் துஆக்கள்
பொதுவாக நாம் துஆக்களுக்கு மதிப்பே
அளிப்பதில்லை. அதாவது அக்கறையோடும் சிரத்தையோடும் துஆக்களைக் கேட்பதே இல்லை.
என்னுடைய அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறு நானுள்ளேன், அவன் துஆ செய்கையில் அவனோடு நானுள்ளேன் என இறைவன்
கூறுகிறான். (புகாரி,
முஸ்லிம்)
நம்மிடல் பலபேர் துஆ செய்யுமாறு
கேட்டுக்கொள்கிறார் கள். நாமும் சர்வசாதாரணமாக பார்ப்போரிடத்தில் எல்லாம் துஆ
செய்யுமாறு கோருகிறோம். ஆனால், தொழுகைக்குப்
பின்னால் துஆ செய்யும்போது இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து துஆ கேட்கிறோமா என்றால்
அதுதான் இல்லை.
துஆ என்பதையும் ஓர் இபாதத்தாக கருத
வேண்டும். தொழு கைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோமோ அதேயளவு நேரத் தை துஆவுக்கும்
ஒதுக்கி இறைவனிடம் நம்முடைய முறையீடு களை சமர்ப்பிக்க வேண்டும். நம்மைப் படைத்த
எல்லாம் வல்ல இறைவனிடம் கெஞ்சுவதும் மனமுருகி கேட்பதும் கூட ஒரு வகையான அடிமைத்தன
வெளிப்பாடுதான் என்பதை புரிந்து கொண்டவர்கள், இறைவனிடம் ‘கேட்பதையே’ பாக்கியமாகக்
கருதுவார்கள்.
தஹஜ்ஜுத் தொழுகை
ரமழான் மாதத்தை அலங்கரிக்கும்
அம்சங்களில் இரவுத் தொழுகையும் ஒன்று. இரவுத் தொழுகையை வழக்கப்படுத்த ரமழானை
விட்டால் வேறு தருணமே வாய்க்காது. எனவே, குறைந்தபட்சம் ஸஹ்ரு நேரத்தில் இரண்டு அல்லது நான்கு ரக
அத்களாவது தொழ முயற்சிக்க வேண்டும். அதனை அப்படியே வழக்கப்படுத்தி எல்லா
நாள்களிலும் ஸஹ்ரு நேரத்தில் எழுந்து நான்கு ரகஅத்தாவது தஹஜ்ஜுத் தொழுகையை தொழ
முயற் சிக்க வேண்டும். அதிலும் சிறப்பாக, ஏதேனும்
ஒருவகை இஸ் லாமிய பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்போர் கட்டாயம் இதில்
கவனத்தைச் செலுத்தியே தீரவேண்டும்.
தொடரும்...
- அதிரை தென்றல் (Irfan Cmp)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!