தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

ரமலானிலிருந்து மாறத் துவங்குவோம் - 4

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

உண்ணும்போதும் பிற நேரங்களிலும் இறைநினைவு
உணவருந்திய பிறகு தன்னைப் புகழுகின்ற பானம் குடித்த பிறகு தன்னைப் புகழுகின்ற அடியானை இறைவன் திருப்தி கொள்கிறான். (முஸ்லிம்)

எந்நேரமும் இறைவனைப் புகழுவதுதான் ஓர் நல்ல இறைநம் பிக்கையாளனின் அடையாளம். அதிலும் சிறப்பாக உண்ணும் போதும் குடிக்கும்போதும் கட்டாயம் இறைவனைப் புகழ்ந்தே யாக வேண்டும். கவலையோடும் கவனத்தோடும் இதில் சிந்தை யைப் பதிக்கவேண்டும்.

 இறைவழியில் செலவு இன்ஃபாக்

நம்முடைய நாளைய மறுமை வாழ்க்கைக்காக நாம் எதனை முற்படுத்தி அனுப்பினாலும் அதனை அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். பன்மடங்கு திருப்பியளிப்பான்’ (2-110) இறை வனுடைய பொருளை இறைவன் நமக்களித்த பொருளை அவ னுடைய வழியில் அவனுடைய விருப்பத்திற்கிணங்க செலவு செய்வதுதான் ஓர் உண்மையான அடிமையின் இலக்கணமாக இருக்க முடியும். இந்த உணர்வை மனதில் பசுமையாகப் பதிய மிட வேண்டும். நாளும் வளர்க்க வேண்டும். தினந்தோறும் இறைவழியில் சிறு செலவையாவது கட்டாயம் செய்ய வேண்டும்.

ஸதக்கத்துல் ஃபித்ரா
ஸதக்கத்துல் ஃபித்ரா என்பதை ஏதோ சடங்காகச் செய்யாமல் முறையாக செய்ய முயற்சிக்க வேண்டும். இந்நூலின் இறுதிப் பகுதியில் ஸதக்கத்துல் ஃபித்ராவைப் பற்றி முழுமையான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அதை அப்படியே பின்பற்ற வேண்டும்.

ஏழ்மையிலும் சதக்கா
ஸதக்கா என்பதேதோ பணக்காரர்கள் மட்டும் செய்யவேண் டியது என நாம் பொதுவாகக் கருதிக் கொண்டுள்ளோம். ஏழை ஸஹாபாக்கள் கூலி வேலைக்குப் போய் சம்பாதித்து இறைவழி யில் செலவு செய்துள்ளார்கள்.
எத்தகைய ஸதக்கா சிறந்தது?’ என்னும் கேள்விக்கு, அண்ண லார், ‘ஒன்றுமில்லா ஏழையின் ஸதக்கா. அதை அவர் தமது வீட் டாரிடத்திலிருந்து தொடங்கட்டும்எனக் கூறியுள்ளார்கள்.

தனக்கே தேவை என்னும் நிலையில் அதனைப் பொருட்படுத் தாது மற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலவு செய்யும் நல்லடியார்கள் இறைவனிடத்தில் பெரும் அந்தஸ்த்தைப் பெறுகிறார்கள்.
இல்லாமைஇபாதத்தில் ஒரு தடைக்கல் அல்ல.

யாருமறியாமல் சதக்கா
தான் கொடுப்பதை ஊரறிய வேண்டும் உலகமறிய வேண் டும் என எண்ணுபவன் நல்ல முஃமினாக இருக்க மாட்டான். யாருக்கும் தெரியாமல் தானத்தைக் கொடுப்பவன்தான் இறை நம்பிக்கையாளனாக இருப்பான். யாருக்கும் தெரியாமல் கொடுத்தால் இறைவனுடைய கோபம் தணிகின்றது எனவும் ஒரு நபிமொழி தெரிவிக்கின்றது.
யாருமறியாமல் கொடுப்பது ஒரு நற்பண்பே எனினும் சில போது பலரும் அறிய கொடுக்கவேண்டும். சிறப்பாக, சமூகத் தில் பலர் பார்வை படும் இடத்திலுள்ள செல்வந்தர்கள் இப் பணியை அவ்வப்போது செய்ய வேண்டும். ஏனெனில், அவர் களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போலவே செய்யும் இயல் பினர் சமூகத்தில் பலர் இருப்பார்கள். அவர்களைத் தூண்டும் விதத்திலும் அவர்களுக்கு ஆர்வமூட்டும் விதத்திலும் செல்வந் தர்கள் இப்படி நடந்துகொள்வது தக்கதே, வரவேற்கத்தக்கதே.

இறைவன் காண்பது நோக்கத்தையே என்னும் கருத்தும் இங்கு எண்ணத் தக்கது.

இறையில்ல ஊழியம்
பள்ளிவாசல் கட்டினால் சொர்க்கத்தில் அதேபோன்ற வீடொன்று கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, பள்ளிவாசல் ஊழியத்தில் ஈடுபடுவதற்கும் பள்ளிவாசலுக்கு வருவோருக்கு பணிவிடைகள் செய்வதற்கும் பெருங்கூலி இருக்கின்றது. கஅ பத்துல்லாஹ்வைக் கட்டிமுடித்த பிறகு, என் இல்லத்திற்கு வருவோர் தங்குதடையில்லாமல் வழிபாட்டில் ஈடுபட ஆவன செய்வாயாக என இறைவன் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆணையிட்டான்.

பள்ளியை தூய்மைப்படுத்துவது, பாய்களை விரிப்பது, அழுக் குகளையும் குப்பைகளையும் அகற்றுவது, குடிநீர் பிடித்துவைப் பது, ஜன்னல்களையும் தாழ்வாரங்களையும் சுத்தம் செய்வது, படிகளைக் கூட்டுவது, கழிப்பிடங்களை தூய்மையாக வைப் பது, ஒழு செய்யும் தண்ணீரை பிடித்துக் கொடுப்பது, விளக்கு களைச் சுத்தப்படுத்துவது, ஹவுளை (இருந்தால்) சுத்தப்படுத்து வது, மீன்களுக்கு உணவிடுவது, பள்ளியில் உள்ள புத்தகங்களை முறைப்படுத்தி வைப்பது என பள்ளியில் நாம் செய்ய வேண் டிய பணிகளும் ஊழியங்களும் ஏராளமானவை உள்ளன.

 நிதி திரட்டி வினியோகிப்போரின் சிறப்பு
நிதிப் பொறுப்பில் இருப்போர் தமக்கிடப்பட்ட கட்டளை களை முறையாகவும் திறம்படவும் நிறைவேற்றினால் தம்மை அதனின்று தூய்மையாக வைத்துக் கொண்டால் அவர்களுக் கும் செலவு செய்த நன்மை கிடைக்கும். (புகாரி, முஸ்லிம்)

உம்மத்தில் முக்கிய பங்கை வகிக்கும் உலமாக்கள் பொறுப் பாளர்கள் போன்றோர் உம்மத்தில் உள்ள ஏழைகள் எளியவர் கள் போன்றோரின் தேவைகளை அறிந்து அவர்களுக்குத் தகுந்த உதவி-ஒத்தாசைகளை வேறுயிடங்களில் இருந்து பெற்றளிக்க வேண்டும்.
நல்ல பரிந்துரைக்கு அதே அளவு (வழங்குபவருக்குக் கிடைக் கும் அளவு) கூலி கிடைக்கும் என குர்ஆன் கூறுகின்றது. (4-85) இஸ்லாமிய உம்மத்தின் நலன்களுக்காக பணியாற்றுவோருக் கும் இதில் செய்தி இருக்கின்றது.

அனைவருக்கும் ஸலாம்
தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என யாவருக்கும் ஸலாம் உரைப்பது இறை நம்பிக்கை உடையோருக்கு அழகு. ஸலாமில் முந்திக் கொள்வது இறை நம்பிக்கை உடையோருக்கு சிறப்பு.

உணவூட்டுதல்
பசித்தவர்களுக்கு உணவிடுதல் என்னும் பழக்கத்தை தாண் டி, சகோதரத்துவத்தை பேணுவதற்காகவும் உணவளிக்க வேண் டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அது ஒருபுறமிருக்க, ஏழைகள், மிஸ்கீன்கள் போன்றோருக்கு நாள்தோறும் உணவிடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மிஸ்கினுக்கு கண்டிப்பாக நான் உணவு வழங்கு வேன் என உறுதிகொண்டு அதனை அன்றாடப் பணியாக செய்து வரவேண்டும். இப்பணியை இந்த ரமழானில் இருந்து தொடங்க வேண்டும்.
 வழிப்பாதையில் இருந்து இடையூறுகளை அகற்றுதல்
வழிப்பாதைகளில் உள்ள முட்களை கற்களை இடையூறு களை அகற்றுவது ஈமானின் ஆகக்கடைசிப் படித்தரம் ஆகும். கடைநிலை முஃமின் கூட விட்டுவிடாமல் செய்தாக வேண்டிய கட்டாயப் பணி இது. இதனை இந்தக் கடைநிலைப் பணியை நான் தவறாது செய்கிறேனா? என நாம் ஒவ்வொருவரும் நெஞ் சைத்தொட்டு கேட்டுப் பார்க்கவேண்டும்.

பெற்றோர் பணிவிடை, துஆ
பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய பணிவிடைகளைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய நிலை என்ன? என்பதே இங்கு கேள்வி. அது எப்படியிருந்தாலும் அத னை இன்னும் ஒரு படி மேலாக உயர்த்திக் கொள்ளவேண்டும்.

பெற்றோர்கள் மறைவுற்றிருந்தால் நம்முடைய ஒவ்வொரு நேரத் தொழுகையிலும் அவர்களுக்காக கட்டாயம் துஆ செய்யப் பழகவேண்டும். நம்முடைய சொந்தத் தேவைகளை இறைவனிடம் முறையிடுவதைப் போலவே அதே அளவு அக் கறையுடன் நம்முடைய பெற்றோர்களுக்காகவும் துஆ செய் தாக வேண்டும்.

கொண்டவனுக்குக் கீழ்ப்படிதல்
ஒரு பெண் ஐவேளை தொழுது, ரமழானில் நோன்பிருந்து, தன் கற்பைப் பேணி, தன்னைக் கொண்டவனுக்கு (கணவ னுக்கு) கீழ்ப்படிந்து நடந்தால் நினைத்த வாசல்வழியாக சொர் க்கத்தில் நுழையலாம். (இப்னு ஹிப்பான்)
நரகின் அதிகக் கொள்ளளவு பெண்களால்தான் நிரம்புகின் றது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ளவேண்டும். அதற்குக் காரணம் அவர்களிடம் இயல்பாகவுள்ள கீழ்ப்படியா மைதான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஹலாலான வருமானம்
வருமானம் ஹலாலாக இல்லையெனில் நம்முடைய எந்த வொரு வழிபாடும் ஏற்கப்படாது நிராகரிக்கப்பட்டுவிடும்.
பலகாத தூரம் கால்நடையாகக் கடந்து தலைவிரி கோலத்து டன் பரிதாபகரமான நிலையில் ஹஜ்ஜுக்காக வரும் ஒரு மனிதருடைய ஹஜ் ஏற்கப்படாது என அண்ணலார் கூறினார் கள். காரணம் அவன் உண்கின்ற உணவும் ஹராம். உடுத்தி யுள்ள உடையும் ஹராம். பயணித்து வந்த வாகனமும் ஹராம் என்பதேயாகும். இதை மனதில் நன்கு பதித்துக் கொள்ள வேண் டும். என்னதான் நாம் விழுந்து விழுந்து வணங்கினாலும் உள் ளேபோகும் உணவு ஹலாலாக இல்லையெனும்போது அவை யனைத்தும் வீணாகிவிடும் என்பதோடு இறைவனிடத்தில் நாம் குற்றவாளிகளாகவும் ஆகி விடுவோம்.

கைகளால் உழைத்து உண்பது
தன்னுடைய கையால் உழைத்து உண்ணும் உணவுதான் என அண்ணலார் கூறுகிறார்கள். எப்படியும் சம்பாதிக்கலாம் என்னும் உணர்வு தடையில்லாமல் பரவிக் கொண்டுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆகையால், இந்த நபிமொழி மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அமைப்பின் பொறுப்பாளர்களாகவும் பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியப் பணிகளில் ஈடுபடுவோராகவும் தம்மைக் காட்டிக் கொள்ளும் பல சகோதரர்கள் வரும்படிவிஷயத்தில் எவ்வித இஸ்லாமிய வரம்புகளையும் பொருட்படுத்தாது தாண்டி ஓடுவதைக் காண் கிறோம்.
 மனைவி மக்களுக்கு செலவளிப்பது

மனைவி-மக்களுக்கு உகந்த விதத்தில் முறையான செலவளிப் பவருக்கு ஸதக்கா செய்த நன்மையும் கூடவே கிடைக்கும் என நபிமொழி ஒன்று உரைக்கின்றது. (புகாரி, முஸ்லிம்)

உற்றார் உறவுகளுக்கு செலவளிப்பது
பணங்காசு பெருகவேண்டும், வாழ்நாள் அதிகரிக்க வேண் டும் என ஆசைப் படுபவர் தமது உற்றார் உறவினர்கள் சொந் தக்காரர்களோடு சேர்ந்து வாழட்டும் என அண்ணலார் கூறுகி றார்கள். தனித்து வாழ்ந்தால்தான் சௌகரியம் எனக்கருதும் அதனையே பிரச்சாரப்படுத்தும் ஓருலகத்தில் நாம் வாழ்கி றோம். அதற்கு நேர் எதிரான ஒரு கோட்பாட்டை இஸ்லாம் முன் வைக்கின்றது.

விதவைகளுக்கும் மிஸ்கீன்களுக்கும் செலவளிப்பது
விதவைகளுடைய மிஸ்கீன்களுடைய தேவைகளை நிறை வேற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் இறைவழி யில் போராடும் முஜாஹிதைப் போன்றவர் ஆவார். நாள்முழு க்க நோன்பு வைத்து இரவு முழுக்க நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார் என அண்ணலார் கூறியுள்ளார்கள். எந்த சமூகமாக இருந்தாலும் அங்கே மிஸ்கீன்களும் விதவைகளும் காப்பார் யாருமின்றி ஆதரவற்று இருக்கவே செய்வார்கள். அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பாடுபடுவதும் இறைநம்பிக்கையாளர்களின் பணிகளில் ஒன் றாக இருந்தாக வேண்டும்.

அநாதைகளை ஆதரிப்பது
அநாதைகளை ஆதரித்தவரும் தாமும் சொர்க்கத்தில் இணைந் துநிற்கும் இருவிரல்கைப் போல இருப்போம் என அண்ணலார் சொல்லியுள்ளார்கள். ஆதரவற்ற அநாதைகள் விஷயத்தில் கரி சனத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

அநாதைகளை நம்வீட்டில் வளர்ப்பது
அநாதைகளை ஆதரிப்பது என்றால் அநாதை இல்லங்களுக்கு நன்கொடை வழங்குவது என நாம் தவறாகப் புரிந்து வைத்துள் ளோம். எல்லா இபாதாக்களையும் பணம் சார்ந்தஇபாதத்து களாக மாற்றும் புதிய பித்அத் இப்போது வேகமாகப் பரவி வரு கின்றது.

அநாதைகளை நம்முடைய வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு முதலிடம் முக்கிய இடம் அளிக்க வேண்டும். அதில் பல்வேறு சங்கடங்கள் இருப்பினும் எப்பாடுபட்டாவது அதனை நடை முறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதனையே இஸ்லாம் வரவேற்கின்றது.

 அநாதைகள், எளியவர்களுக்கு அன்பு காட்டுவது
ஏழைக் குழந்தைகள், எளியவர்களின் குழந்தைகள், மிஸ்கீன் களின் குழந்தைகளை பரிவோடும் பாசத்தோடும் பார்க்க வேண்டும். அவர்களுடைய தலைகளை கனிவோடு தடவிக் கொடுக்க வேண்டும். சிறுசிறு பொம்மைகளை அவர்களுக்கு பரிசளிக்க வேண்டும். நாம் தேடிச்சென்று அவர்களுக்கு உதவா விட்டாலும் நம் வீடுகளுக்கு வருகின்ற மிஸ்கீன்களின் குழந் தைகளுக்கு ஏதாகினும் சிறுசிறு பொருட்களை அன்போடு வழங்க வேண்டும். நமக்குத் தேவையில்லாத உபயோகமற்ற பொருட்களை கொடுக்கலாகாது. அவ்வாறு கொடுப்பதை இறைவன் வெறுக்கிறான். குர்ஆன் கடுமையாகத் தடுக்கின்றது.

 இஸ்லாமிய சகோதரர்களின் தேவைகளை நிறை வேற்றுவது
தன்னுடைய இஸ்லாமிய சகோதரனின் தேவைகளை நிறை வேற்றுவதற்காக முயற்சிப்பவருக்கு பெருங்கூலி கிடைக்கின் றது. இஃதிகாஃப் இருக்கும்போதும் அதற்காக வெளியே கிளம் பிச்செல்லவும் ஷரீஅத் அனுமதிக்கின்றது. ஒரு நபிமொழியில் அப்பணியில் ஈடுபடுபவர் என்னுடைய பள்ளியில் இரு மாதங் கள் இஃதிகாஃப் இருந்தவரைப் போலாவார் என குறிப்பிடப் பட்டுள்ளது.

 இறைவனுக்காக முஸ்லிம் சகோதரனை சந்திப்பது
ஒரு முஸ்லிம் சகோதரரை இறைவனுக்காக என்றுபோய் சந்திப்பது பெரிய விஷயம். அவருக்காக வானவர்களும் பிரார் த்திக்கிறார்கள். இறைவனும் மகிழ்கிறான். இஸ்லாமிய சகோத ரரை ஈமானிய வளப்படுத்திக் கொள்ளவும் இறைநேசத்தை அதி கரிக்கும் நோக்கத்திலும் போய்ச்சந்திக்க வேண்டும். அச்சந்திப் பால் நம்முடைய மறுமை வாழ்வு வளம் பெறவேண்டும்.

நோயாளிகளை நலம் விசாரிப்பது
நோயாளிகளை நலம் விசாரிப்பதும் முஃமின்களுக்கான கட் டாயக் கடமைகளுள் ஒன்று. அதுமட்டுமல்ல, நோயுற்றவரை நலம் விசாரிக்கச் செல்பவர் சொர்க்கத்தின் உயர்மாடங்களில் இருப்பார் எனவும் அண்ணலார் கூறுகிறார்கள். நம்முடைய அன்றாடச் செயல்களின் பட்டியலில் இடம் பெற்றாக வேண்டும்.

உறவை முறித்துக்கொண்டோரோடு உறவு கொண்டாடுவது
உறவானது அர்ஷைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும். என்னை யார் இணைக்கிறாரோ அவரை இறைவன் இணைப் பான். என்னை யார் துண்டிக்கிறாரோ அவரை இறைவனும் துண்டிப்பான் என்றது கூறும். (புகாரி, முஸ்லிம்)

 சகோதரனைச் சந்திப்பதில் சந்தோஷப்படுவது
ஒரு முஸ்லிம் சகோதரனை சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோ டும் சந்திக்க வேண்டும். நாம் ஏற்றுக்கொண்டுள்ள அதே கொள் கையை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு சகோதரனை பார்க்கும் போதே நம்முடைய உள்ளத்தில் தானாக சந்தோஷம் பொங்க வேண்டும். நம்மையொத்த சகோதரர் இவர் என்னும் இயல் பான பாச உணர்வு பரிணமிக்க வேண்டும்.
இது முறையாக நிறைவேற வேண்டுமென்றால் முதலில் எந்த முஸ்லிம் சகோதரரைக் குறித்தும் நம்முடைய மனதில் தவறான அபிப்பிராயம் இடம் பெற்றிருக்கக் கூடாது.

பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பது
நோன்பு நோற்றிருக்கும் பணியாளர்கள், வேலைக்காரர்கள், நோன்பு வைத்திருப்பதால் வேலைக்கு போகமுடியாமல் தவிப் பவர்கள், வேலையோடு நோன்பையும் வைக்கமுடியாது என மிகவும் யோசிப்பவர்கள் போன்றோரின் சுமையை நம்மால் இயன்றவரை குறைக்க முயல வேண்டும்.

வலுவற்றவர்களோடு நன்முறையில் நடப்பது
கஷ்டப்படுபவரின் சுமையைக் குறைப்பவரின் சுமையை இறைவன் இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் குறைக்கிறான். (முஸ்லிம்)
நம் கண்களுக்கு முன்னால் கஷ்டத்தால் வாடுபவரைக் கண் டால் நம்மால் இயன்றவரை அவருடைய கஷ்டத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். இறைவனுக்காக செய்யப்படுகின்ற இஸ் லாமியப் பணிகளில் இதுவும் அடக்கம் என எண்ண வேண்டும்.

ஏழைகளோடு கரிசனத்தோடு நடந்துகொள்வது
கருணை காட்டுபவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுகி றான். வையகத்தில் உள்ளவர்களிடம் நாம் கருணையோடு நடந்துகொண்டால் விண்ணகத்தில் உள்ளவன் நம்மோடு கருணையோடு நடந்துகொள்வான். (அபு தாவுது, திர்மிதீ) இறு மாப்போடு நடந்து கொள்வதையும் எகத்தாளத்தோடு பேசு வதையும் விட்டு எந்நேரமும் விலகி இருக்க வேண்டும்.

மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவது
நோன்பைவிட, தொழுகையை விட, ஸதக்காவை விட சிறந்த செயல் எது, தெரியுமா? மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத் துவதுதான் என ஒரு நபிமொழி அறிவிக்கின்றது.

நன்னடத்தை
ஏகப்பட்ட மக்களை சொர்க்கம் கொண்டுபோய்ச் சேர்ப்பது எது? என வினவப்பட்டபோது அண்ணலார் கூறினார்கள், ‘இறையச்சமும் நன்னடத்தையும்’ (திர்மிதீ)

நன்னடத்தை என்பது, நம்முடைய அடையாளக் குறியீடாக மாறிப்போய் இருக்க வேண்டும்.

நாணம்
நாணம் ஈடானின் ஒரு பகுதி, ஈமான் சொர்க்கத்திற்கு வழி வகுக்கும். நாணமின்மை வழிகேடின் ஒரு பகுதி, வழிகேடு நர கத்திற்கு வழிவகுக்கும்.  (அஹ்மத், இப்னு ஹிப்பான், திர்மிதீ)

பணிவு
பணிவென்பது அகங்காரத்தின் எதிரி. கர்வத்தின் பகைவன். பணிவும் தாழ்மையும் இறையடிமைத்தனத்தின் வெளிப்பாடு கள். ஒரு முஃமின் எவ்விடத்திலும் தன்னை உயர்வானவனாகக் கருதிக் கொள்ளவே கூடாது.

 வாய்மை
வாய்மையைக் கடைப்பிடியுங்கள். வாய்மை நன்மைக்கு வழி கோலும். நன்மையோ சொர்க்கத்திற்கு வழிகோலும். (புகாரி, முஸ்லிம்)

பெருந்தன்மையும் மன்னிப்பும்
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ் வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கிறான். (3-134)

சினத்தை அடக்கியாள்வது
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 3-134)

கைகுலுக்குவது
இரு முஸ்லிம் சகோதரர்கள் சந்தித்து கைகுலுக்கிக் கொண் டால் அவர்கள் பிரிவதற்குள் இறைவன் அவர்களை மன்னித்து விடுகிறான். (அபுதாவுது, திர்மிதீ)

சிரித்த முகத்தோடு சந்திப்பது
எந்த நற்செயலையும் கீழ்த்தரமாக எண்ணாதீர்கள். ஒரு சகோ தரனை சிரித்த  முகத்தோடு சந்திப்பதையும் தரக்குறைவாக எண் ணாதீர்கள். (முஸ்லிம்)

கொடுக்கல்-வாங்கலில் பெருந்தன்மை
வாங்கும் போதும் விற்கும் போதும் தீர்த்து முடிக்கும் போதும் பெருந்தன்மையோடு நடந்து கொள்பவர் மீது அல்லாஹ் கருணை காட்டுகிறான். (புகாரி)

பார்வையைத் தாழ்த்துவது
பார்வை என்பது ஷைத்தானின் விஷம் தோய்ந்த அம்புகளில் ஒன்றாகும். என்னுடைய பயத்தின் காரணத்தினால் தன் பார் வையை விலக்கிக் கொண்டவருக்கு ஈமானை அளிப்பேன். அதன் சுவையை அவர் தனது உள்ளத்தில் உணருவார். (தபு ரானி)

நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல்

தீமையொன்றைக் காண்பவர் அதனைத் தனது கரத்தால் தடுக்கட்டும். முடியவில்லை என்றால் தனது வாயால் தடுக்கட் டும். அதுவும் முடியவில்லை என்றால் மனதால் வெறுத்து ஒதுங் கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும். (முஸ்லிம்)

தொடரும்...
- அதிரை தென்றல் (Irfan Cmp)

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்