தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

ரமலானே வருக...வருக...நல்றருள் புரிக!

நம்மருகில் இன்னும் சில மணி நேரங்களில் நம்மையடைய நன்மையை சுமந்து வரவிருக்கும்... 

சிறப்புமிக்க ரமலான் மாதம்..
இறைமறையை இறைத்தூதருக்கு...
அருளிய மாதம்...

நரகவாசல் - அடைத்து..
நன்மை பெய்க்கும் மாதம்..

நல்வழியாம் நபிவழிபேண..
நல்லதொருமாதம்...

இறை வசனத்தை (அல்குர்ஆன் ) 
போட்டிபோட்டுக்கொண்டு தன் 
நாவால் உறக்கவாசித்திடும் மாதம்... 

பசிவுணர்ந்து தர்மம்...
அளித்திட வகைசெய்யும் மாதம்...

அல்லாஹ்வின் அறிவிப்பாளர்களான..
வானவர்கள் வருகைதரும் மாதம்...

ஏழைகள்  இல்லாத சமுதாயம்..
ஏக்கங்கள் இல்லாத உள்ளத்தையும்..
உருவாக்கும் மாதம்...

அல்லாஹ்..! விதித்த  கடமையை...
 நிறைக்கும்  மாதம்..

மனிதனில் உயர்ந்தவன் இல்லை..
தாழ்ந்தவன் இல்லை..
சமநிலையை  விரிவாக்கும் மாதம்...

தீமையை தடுத்து..
நன்மையை ஏவும் மாதம்...

இம்மையும் மறுமையும்..
நினைவு கூறும்  மாதம்...

மறுமைவெற்றிக்கு..
பாலமாய் இருக்கும் மாதம்...

படைத்தவனை  -அளந்தவனை..
அறிந்தவனை  ஆள்பவனை..
நிலைத்தவனை  மகிழபோற்றும்...
சிறப்புமிக்க ரமலான்  மாதம்...

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், 
நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், 

பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், 
அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், 

சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், 
சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், 

ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், 
நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், 

குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், 
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் 

இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.


- அதிரை தென்றல் (Irfan Cmp)

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்