தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

குற்றாலமென்றால் நினைவுக்கு வருவது அருவி மற்றும் ரஹ்மத் ஹோட்டல்!


கோடை ‌விடுமுறையை ப‌ல்வேறு இட‌ங்களு‌க்கு சு‌ற்றுலா‌ச் செ‌ன்று குதூகல‌த்துட‌ன் கொ‌ண்டாடி வரு‌ம் ம‌க்களு‌க்கு இ‌னிய செ‌ய்‌தியாக கு‌ற்றால‌த்‌தி‌ல் த‌ற்போது ‌சீச‌ன் துவ‌ங்குவத‌ற்கு அ‌றிகு‌றியாக மனதை வருடு‌ம் தெ‌ன்ற‌ல் கா‌ற்று‌ம், லேசான சார‌ல் மழையு‌ம் பெ‌ய்து வரு‌கிறது.

இ‌ன்னு‌ம் ஒரு வார‌த்‌தி‌ல் கு‌ற்றால‌த்‌தி‌ல் ‌சீச‌ன் துவ‌ங்‌கி‌விடு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

கு‌ற்றால‌த்‌தி‌ல் ஆ‌ண்டு தோறு‌ம் ஜூ‌ன், ஜூலை, ஆக‌ஸ்‌ட் மாத‌ங்க‌ள் ‌சீச‌ன் காலமாகு‌ம். இ‌ந்த ஆ‌ண்டு வரு‌ம் வார‌ம் ஜ‌ூ‌ன் மாத‌ம் துவ‌ங்க உ‌ள்ள ‌நிலை‌யி‌ல் த‌ற்போதே கு‌ற்றால‌த்‌திலு‌‌ம் ‌சீச‌ன் துவ‌ங்குவத‌ற்கான அ‌றிகு‌றிக‌ள் தெ‌ன்பட ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டன.
‌சீச‌ன் சமய‌த்‌தி‌ல் பக‌லி‌ல் ‌மிதமான வெ‌யிலுட‌ன் அ‌வ்வ‌ப்போது சார‌ல் மழை பொ‌ழியு‌ம். கேரளா‌வி‌ல் பெ‌ய்யு‌ம் தெ‌ன்மே‌ற்கு பருவ மழை கு‌ற்றால‌த்‌தி‌ல் சாரலாக பொ‌ழியு‌ம். த‌மிழக‌த்‌தி‌ன் ம‌ற்ற‌ப் பகு‌திக‌ளி‌ல் வெ‌யி‌ல் கொளு‌த்து‌ம் சமய‌த்‌தி‌ல் கு‌ற்றால‌த்‌தி‌ல் ‌சீச‌ன் துவ‌ங்குவதா‌ல், ஏராளமான சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் கு‌ற்றால‌த்‌தி‌ற்கு வ‌ந்து ‌சீசனை அனுப‌வி‌ப்பா‌ர்க‌ள்.

‌சீச‌ன் துவ‌ங்குவத‌ற்கு அ‌றிகு‌றியாக அன‌ல் கா‌ற்று மறை‌ந்து த‌ற்போது கு‌ற்றால‌ம், தெ‌ன்கா‌சி பகு‌திக‌ளி‌ல் இதமான தெ‌ன்ற‌ல் கா‌ற்று ‌‌வீ‌சு‌கிறது. ஐ‌ந்தரு‌வி, கு‌ற்றால‌ம் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று ம‌திய‌‌ம் வரை லேசான வெ‌யி‌ல் காண‌ப்ப‌ட்டது. ம‌திய‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு மேக‌க் கூ‌ட்ட‌ங்க‌ள் ‌திர‌ண்டு காண‌ப்ப‌ட்டது. ஐ‌ந்தரு‌வி பகு‌தி‌யி‌ல் லேசான சாரலு‌ம் பெ‌ய்தது.

இதனா‌ல் அ‌ப்பகு‌தி ம‌க்‌க‌ள் ‌மிகு‌ந்த உ‌ற்சாக‌ம் அடை‌ந்தன‌ர். இதே‌ப் போ‌ன்று சார‌ல் மழை தொடரு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல், இ‌ன்னு‌ம் ஒரு வார‌த்‌தி‌ல் ‌சீச‌ன் முழுமையாக துவ‌ங்‌கி‌விடு‌ம் எ‌ன்று‌ம், கு‌ற்றால அரு‌விக‌ளி‌ல் த‌ண்‌ணீ‌ர் கொ‌ட்டு‌ம் எ‌ன்று‌ம் ம‌க்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சியோடு கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர். 

குற்றலாம் என்றால் நினைவுக்கு வருவது அருவிகளில் குளிப்பது மற்றும் சாப்பிடுவதும் தான் வேறு காண்பதற்கு ஒண்ணுமில்லை என்றாலும் குளிப்பது மற்றும் உணவு சாப்பிடுவதுதான் மாறி மாறி செய்கின்றனர்

சரி...உணவு என்றாலே பலர் சுவை மிகுந்த ரஹ்மத் ஹோட்டலை நாடுவர் எவருமிருக்க முடியாது அந்த வகையில் அக்கடையின் சுவை மிகுந்த உணவுதான் காரணம்

அதன் கடை உரிமையாளர் சகோ. ராஜா முஹம்மது கூறுவது மூன்று தலைமுறையாக இந்த ஹோட்டல் இயங்கி வருகின்றது. இந்த ரூசிக்கு முக்கிய காரணம் வீட்டிலேயே தயாரித்து அரைக்கப்படும் மசாலா தானாம்.



ரஹ்மத் ஹோட்டல் பற்றின சன் நியூஸ் செய்தி தொகுப்பு 

குற்றாலம் நகரில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருப்பது  ஐந்தருவி. மெயின் ·பால்ஸில் இருந்து ஒரு ஐந்து கி மீ தூரத்தில் அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. ஒரு இத்தினிக்கூண்டு ஏரியில் படகு சவாரி விடுகிறேன் பேர்வழி என்று நாலைந்து போட்டுகளை வைத்துப் பம்மாத்துப் பண்ணீக் கொண்டிருந்தார்கள். இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். சீசன் இல்லாத பொழுது மூன்று அருவிகள் ஒளிந்து கொண்டு இரண்டருவியாக விழுந்து கொண்டிருந்தன. அடர்ந்து வளர்ந்து தன்னுள்ளே பல மர்மங்களை ஒளித்து வைத்துக் கொண்டு அருவியைக் கொட்டுகிறதோ என்று பிரமிக்க வைக்கிறது அந்த அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பழக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பழங்கள் கண்களைக் கவருகின்றன. ஆண்களும் பெண்களும் மீண்டும் வழிய வழிய எண்ணெய் தடவிக் கொண்டிருக்கின்றனர். காமன்சென்ஸ் என்ற ஒரு விஷயம் அருவியில் அடித்துக் கொண்டு போய் விட்டது போலும்.

குற்றாலத்திலேயே பல தங்கும் விடுதிகள் உள்ளன. கூடுமான வரை அங்கு தங்கி அனுபவிப்பதே சிறப்பானது. இல்லாவிடில் திருநெல்வேலியிலோ அல்லது தென்காசியிலோ தங்கிக் கொண்டு போய் வரலாம். திருநெல்வேல்யில் பெரிய நல்ல விடுதிகள் பல உள்ளன. மதுரையில் இருந்து 4 மணி நேரப் பயணத்திலும், திருநெல்வேலியில் இருந்து 1 மணி நேரப் பயணத்திலும் அமைந்துள்ளது. செங்கோட்டை வழியாகப் போகும் கொல்லம் எக்ஸ்ப்ரஸ்களில் சென்று  தென்காசியில் இறங்கிக் கொள்ளலாம். ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் சென்று வருவது சிறப்பானது. மற்ற சமயங்களில் தண்ணீர் இருந்தாலும் கூட்டம் இருக்காது.

ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே, குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குமா என்ற பாடல் வரிகளில் இன்னும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அந்த அழகு முழுமையாக அழிவதற்குள் நீங்களும் ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடுங்களேன். அங்கு செல்லும் பொழுது நீங்களாவது சோப்பு, ஷாம்பு போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, குப்பைகளைப் போடாமல் இயற்கையோடு ஒன்றி இருந்து விட்டு வாருங்கள்.

- அதிரை தென்றல் (சுற்றுலா குழு)

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்