தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

அமீரகத்திலிருந்து விடுமுறைக்கு செல்லும் இந்தியர்களின் கவனத்திற்கு!

இந்தியா செல்லும் போது ரூபாய் கொண்டு செல்ல வேண்டாம் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு......!!

இந்தியாவுக்கு ரூபாய்களை எடுத்து செல்ல ஐக்கிய அரபுஅமீரகம் தடை விதித்துள்ளது.வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், இந்தியா செல்லும் போது கணிசமான பணத்தை கையில் எடுத்துசெல்கின்றனர்.


இதனால் விமான நிலைய சோதனையின் போதுபிரச்சினை எழுகிறது. விமானத்தில் பயணிப்பவர்கள் 7,500 ரூபாய் வரை பணத்தை கையில் எடுத்து செல்ல இந்தியாவில்அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது இந்த தொகை 10ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து, இந்தியா செல்பவர்கள் இனி ரூபாயை எடுத்து செல்ல வேண்டாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வங்கி களுக்கும், நாணயமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் யு.ஏ.இ., ரிசர்வ்வங்கி அறிவுறுத்தி உள்ளது.

ரூபாய்க்கு பதிலாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 5,000 திர்காம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு செல்பவர்கள் ரூபாயை எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஏ.இ.,ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

நன்றி : மணிச்சுடர்

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்