This is featured post 1 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 2 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 3 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 4 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 5 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

நியூ(ஸ்):

தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 1)

0 உங்களின் கருத்து (Comments)

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃஅபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை விரைவில் (இன்ஷா அல்லாஹ்) அடைய இருக்கிறோம். 

இந்த துல்ஹஜ் மாதமானது ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு மட்டும் வணக்கத்திற்குரிய‌ மாதமல்ல‌! நபி இப்ராஹீம்(அலை)மற்றும் அவர்களின் மைந்தரான‌ இஸ்மாயீல்(அலை)அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஒரு வணக்க‌த்தை நிறைவேற்றும் "ஈதுல் அள்ஹா" என்று சொல்லப்படும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமாகும். எனவே, இந்த துல்ஹஜ் மாதத்தில் "குர்பானி" என்று சொல்லப்படும் 'அறுத்துப் பலியிடுதல்' பற்றி இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. 

நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்த வணக்கங்களில் "குர்பானி" கொடுப்பது என்பதும் ஒரு வண‌க்கமாகும். அல்லாஹ்தஆலா தனது திருமறையில் கூறுகிறான்.

"உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!" (அல்குர்ஆன் 108:2) 

நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு, அது இறைக் கட்டளை என்பதையுணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். அப்போது இறைக் கட்டளைக்கு உடனே அடிபணியும் அவர்களின் பணிவையும் தியாகத்தையும் இறைவன் ஏற்றுக்கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாற்று நிகழ்ச்சி திருக்குர்ஆனில் 37:102- 108 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் "பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டுவைத்தோம்" என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

குர்பானி யார் மீது கடமை?

குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்றவேண்டும். ஏழ்மைப்பட்டவர்கள் மீது கடமையில்லை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் வசதி இருக்கிறதோ இல்லையோ, மற்ற தேவையற்ற விஷய‌ங்களுக்கெல்லாம் கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் சிலர் , குர்பானி போன்றவற்றுக்கு மட்டும் ரொம்ப யோசனை செய்வார்கள். எனவே இதுபோன்ற‌ விஷயத்தில் தங்கள் மீது இது கடமையாகிவிட்டதா, இல்லையா என்பதை அவரவர் மனசாட்சியுடன் முடிவு செய்துக் கொள்வதே நல்லது. அதே சமயம் உண்மையிலேயே வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பது அவசியமல்லாத ஒன்று. ஏனெனில் எந்த ஒருவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். எனவே குர்பானி கொடுக்குமளவு வசதி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு தனியாகவோ, கூட்டாகவோ கொடுக்கலாம்.

ஆடு, மாடு, ஒட்டகம்

இஸ்லாம் குறிப்பிட்ட சில பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஹலாலாக்கியுள்ளது. அவற்றில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் மட்டும்தான் குர்பானி கொடுக்க வேண்டும்.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!(அல்குர்ஆன் 22:28)

குர்பானிக்குரிய‌ பிராணிகளைப் பற்றிய‌ மேற்கண்ட வசனத்தில் சொல்லப்படும் "அன்ஆம்" என்ற வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மட்டும் குறிப்பதாகும். எனவே அல்லாஹ்தஆலா குறிப்பிடும் இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதல்ல‌.

குர்பானி கொடுக்கும் ஆரம்ப நேரம் 

பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகிலிருந்து குர்பானிக்கான நேரம் ஆரம்பமாகின்றது. தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாகாது என்று நபி(ஸல்)அவ‌ர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த செலவுக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி என்ற‌) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
               அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி); நூல்:புகாரி (5546)

நபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், யார் இத்தொழுகையை நிறைவேற்றிவிட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் எனக் குறிப்பிட்டார்கள்.
                      அறிவிப்ப‌வர்: பராஃ(ரலி); நூல்: புகாரி(955,5556)

நபி(ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடிந்தபின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக் கிடப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்பொது "யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டானோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
        அறிவிப்பவர் : ஜுன்துப் இப்னு சுப்யான்(ரலி); நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இந்த ஹதீஸ்களிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதிலிருந்து தொடங்குகிறது என்பதையும் தொழுகைக்கு முன்பே யாராவது கொடுத்திருந்தால், மீண்டும் கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.

'அஹ்மத்' என்ற ஹதீஸ் கிரந்தத்தின் குர்பானி பற்றி வர‌க்கூடிய 16151 வது ஹதீஸின் மூலமாக‌, 10 வது நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும் என்பதை அறிய முடிகிறது. 

எனவே பெருநாள் தினத்தில் குர்பானி கொடுக்காவிட்டால், அதைத் தொடர்ந்து வரக்கூடிய‌ 3 நாட்களிலும் கொடுத்துக் கொள்ளலாம்.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை

ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
              அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி);  நூல்: நஸாயீ(4285)

அதாவது, ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குடும்பத்தை நடத்திச் செல்லும் குடும்பத் தலைவர், தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். அவர் மட்டும் முதல் பிறையிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும். (அல்லது குடும்பத்தின் பொறுப்பாளியாக இருக்கும் ஒரு குடும்பத் தலைவி மட்டுமோகூட அதுபோல் இருந்துக் கொள்ளலாம்.)

ஆனால், தானாகவே நகம், முடி ஆகியவை விழுந்தால் தவறேதுமில்லை. அதுபோல் நிர்பந்த நிலையில் உள்ளவர்களுக்கும் குற்றமில்லை. அதாவது நகம் கிழிந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதோ, அறுவை சிகிச்சை போன்ற காரணங்களுக்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டாலோ, அதுபோன்ற சிரமமான நிலையில் முடி, நகங்களை வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ்தஆலா எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டம் கொடுப்பதில்லை.‏‏ எனவே நபி(ஸல்)அவர்களுடைய வழிமுறையை அல்லாஹ் பார்க்கிறான் என்ற‌ அச்சத்தோடு நம்மால் முடிந்த அளவு பின்பற்றினால் போதுமானது. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் (அல்குர்ஆன் 2:286)

மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் "துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை" என்று கூறப்பட்டுள்ளதால், குர்பானி கொடுக்கிறோமா இல்லையா என்ற‌ முடிவில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டாமல், குர்பானி கொடுப்பதை இயன்றவ‌ரை பிறைக்கும் முன்பாகவே முடிவு செய்துக்கொண்டு, நகம் மற்றும் முடிகளை களையும் தேவையுடைய சந்தர்ப்பமாக இருந்தால், பிறைக்கு முன்பே களைந்துக் கொள்ளவேண்டும்.   

ஆனால் பிறைக்கு பிறகு அந்த பத்து நாட்களுக்கு இடையில் குர்பானி கொடுப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராத விதமாக‌ ஒருவருக்கு கிடைத்து, அப்போதுதான் அவர் முடிவு செய்ய முடிகிறதென்றால், அப்போதிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை. எனினும் ஹஜ் மாத‌ முதல் பிறைக்கு முன்பே அதுபற்றி முடிவு செய்துக் கொள்வது சிறந்த முறையாகும். 

தொடரும்... இன்ஷா அல்லாஹ்!

(பதிவு நீளமாக இருப்பதால், வாசகர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது)

நன்றி : பயணிக்கும் பாதை 

உணவின் வீண் விரயம்

0 உங்களின் கருத்து (Comments)

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.

இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

இன்று நாம் அன்றாடம் பார்க்கின்றோம் எதை உண்ணுவது, எதை பருகுவது என்று கூட தெரியாமல் சேற்றிலும், செதும்பிலும் வாழும் பிராணிகளைப் போன்று மனிதனும் உணவுகளை சாப்பிடத் துவங்கி விட்டான். நல்ல உணவா, கெட்ட உணவா, ஆகுமா, ஆகாதா? என்று கூட பார்க்காமல் அவன் பருகும் நிலை சில நேரங்களில் பார்ப்போரை முகம் சுளிக்கும் நிலைமைக்குக் கூடத் தள்ளி விடுகிறது. எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

வீண் விரையம் என்பது நாம் பயன்படுத்தும் உணவினை யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு

வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடியாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும்) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம்.

அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருந்து பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதி

வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்



மனிதக்குலம் உணவின்றி வாடும் நிலையினைத் தவிர்க்க, பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்:

வறண்டவலையப் பிரதேசங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களைப் புதிதாக விவசாயத்துக்கென ஆக்கிரமிக்காது இருத்தல்.

இப்போது குறைந்த அளவிலான உற்பத்தியினை அளிக்கும் பகுதிகளை மேம்படுத்தி அதிக உற்பத்தியினை ஏற்படுத்துதல்.

நீர் மற்றும் உரம் இவை இரண்டினையும் உரிய வகையில் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிதல்.

இறைச்சி உண்பவர்கள் அதன் அளவினைக் குறைத்துக் கொண்டு, அதற்கான மாற்று வழிகளைப் பின்பற்றுதல்.

உணவு உற்பத்தியின் போதும், அதனைப் பின்னர் பகிர்ந்தளிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளை மட்டுப்படுத்தும் வழிகளை உருவாக்குதல்.

இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், புதிய விளைநிலங்களை உருவாக்காது தவிர்ப்பதன் மூலம் உயிர்ப்பன்மைத்துவ அழிப்பும் அதன் விளைவாய் ஏற்படும் கரிம வாயுவின் அதிகரிப்பும் தடுக்கப்படும்.

உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தீர்வுகள் அனைத்தையும் உரிய வகையில் செயல்படுத்துவதன் மூலம், 2050 ல் ஏற்படப் போகும் உணவுத் தேவையினை நாம் துணிவுடன் எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் ஜோநாதனது தலைமையில் செயல்படும் ஆய்வாளர்கள்.

உலகின் மூலை முடுக்குகளில் விளையும் சொற்ப அளவிலான உணவினையும்கூட, மற்றொரு கோடியில் அதற்கான் தேவையுடன் காத்திருக்கும் மற்றையவர்களுக்குத் தெரிவிக்கவும், அதனை அவர்களிடம் சேர்ப்பிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும் இன்றைய கணினிமய உலகில் சாத்தியமே. எதிர்வரும் சந்ததியினர் புத்திசாலித்தனதுடன் செயல்படின், 2050 ல் இன்றிருக்கும் உணவுப் பற்றாக்குறைகூட இல்லாத நிலையினை ஏற்படுத்திட இயலும்.

- அதிரை தென்றல் (Irfan Cmp)

தன் படைப்பினங்களின் உணவை, அல்லாஹ்வே தருகிறான்!

0 உங்களின் கருத்து (Comments)

மனிதனைப் படைத்து, வாழ்வதற்காக பூமிக்கு அவனை அனுப்புவதற்கு முன்பே, பூமியை அவனது சிறந்த வசிப்பிடமாக இறைவன் அமைத்துவிட்டான். இந்த பூமி எத்தனை கோடி மக்களையும் தாங்கும் ஆற்றல் உள்ளது. இங்குள்ள காற்று, நீர், நெருப்பு உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களும் பூமியில் பிறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையைவிடக் கூடுதலாகவே உள்ளன.

இயற்கை வளங்களை மனிதன் பாழ்படுத்தாமலும் ஒரு நாட்டின் வளத்தை மற்றொரு நாடு கொள்ளையடிக்காமலும் இருந்தாலே போதும். அவ்வாறே, மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள மனித ஆற்றல் வளம் வற்றாத ஒரு நீரூற்று. அதை மனிதன் வளர்க்காமல் வீணடித்தாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோதான் சிக்கலே பிறக்கும்.

அதற்கு அல்லாஹ், “நீங்கள் (சொர்க்கத்திலிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு காலம்வரை உங்களுக்குப் பூமியில் வசிப்பிடமும் வாழ்வாதாரமும் உண்டு” என்று கூறினான். (7:24)

பிறக்கும் அத்தனை பேருக்கும் பூமியில் வசிப்பிடம் உண்டு; வாழ்வதற்கு வாழ்வாதாரமும் உண்டு என்பதை இத்திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

மற்றொரு வசனம், “பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைத் தருவது –அதாவது உணவைப் பெறும் வழியைக் காட்டுவது- அல்லாஹ்வின் பொறுப்பாகவே உள்ளது. அதன் இடத்தையும் உறைவிடத்தையும் அவன் அறிவான்” (11:6) என்று விவரிக்கிறது.

அதாவது பூமியில் வசிக்கின்ற சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் உட்பட அனைத்துப் படைப்புகளுக்கும் உணவளிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். பூமியில் ஊர்வன, வானில் பறப்பன, நீரில் நீந்துவன என ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதனதன் இயல்புக்கேற்ப இறைவன் உணவளிக்கின்றான்.


காணொளி உதவி - முகநூல் 

உயிரினங்களில் சில தன் கொடுக்காலும், வேறுசில அலகாலும், இன்னும் சில நகங்களாலும், இன்னும் சில கோரப் பற்களாலும் தம் உணவைத் தேடிக்கொள்கின்றன. இவ்வாறு ஒன்றை உண்டு மற்றொன்று வாழாவிட்டால், பூமியில் உயிரினங்கள் பெருகி நெருக்கடி ஏற்படும்; அல்லது இயற்கையாகச் செத்து பூமியே நாறும். (தஃப்சீர் அல்மனார்)

எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனிடம் கடின உழைப்புடன் இறைவன்மீது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவும் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிய வேண்டும்.

“இறைவன்மீது முறைப்படி நம்பிக்கை வைத்தால், பறவைக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிற்றுடன் காலையில் செல்கிறது; நிரம்பிய வயிற்றுடன் மாலையில் திரும்புகிறது” (திர்மிதீ) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆறறிவு இல்லாத பறவை, படைத்தவனை நம்பி கூட்டைவிட்டுப் புறப்படுகிறது. கிடைத்த ஆகாரத்தை உட்கொண்டுவிட்டு, குஞ்சுக்கும் இரையை எடுத்துக்கொண்டு கூடு திரும்புகிறது. ஆக, பறவைகூட நம்பிக்கொண்டு கூட்டிலேயே இருந்துவிடாமல், தீனியைத் தேடி வெளியே செல்கிறது கடினமகப் போராடுகிறது.

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 4

11 உங்களின் கருத்து (Comments)

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....


ஸ்மைல் ப்ளிஸ் 

வெயில் சரி போடு போடுதப்பா...! இதேபோல் தெருவெங்கும் மரமிருந்தால் எப்படி இருக்கும்?

தண்ணீரின்றி வறண்டு சிறுசுகளின் ப்ளே கிரௌண்டாக மாறிய செக்கடிகுலம் 

அல்-குர்ஆன் சரளமாக ஓத வேண்டும் என்ற முயற்சியில் வரிகளை முத்தமிடும் இளம்பிஞ்சின் கைவிரல்.

எதனாலே சாச்சிபுட்டங்கே?...நெட்டு போல்டு எல்லாம் நல்லாதானே இருக்கு பின்னே எப்படி...? (டிரைவரோட "நெட்" கழண்டு போச்சின்னு இந்த அப்பாவிக்கு தெரியலே போல!)

அட்டேன்ஷன் ப்ளீஸ்.....ஹஜ் செல்லும் ஹாஜிகளுகும், ஹஜ் செல்லத்துடிக்கும் வருங்கால ஹாஜிமார்களுக்கும் இத்தகவல். 

இவ்விரு சொகுசு குதிரை செல்லும் வழிக்கோணல் எப்படியாயிருப்பினும் முற்றும் வழிக்கோணல் ஒன்றே!

பயமுறுத்தும் மேகக்கூட்டங்கள். அலட்டிக்காத மக்கள்...காரணம் நம்மூருக்கு மழை எல்லாம் வராதுப்பா என்ற எண்ணம்!

இறுதி ஆட்டத்தில் பல மணி நேரம் காத்திருந்து வியர்த்ததோ எங்களுக்கு (வீரர்கள் களத்தினுள் இறங்கியதோ வெயில் சாய்ந்து இருட்டும் நேரத்தில்)


சிமிட்டல் தொடரும்....


- அதிரை தென்றல் (புகைப்பட குழு)  

அதிரையில் "அம்மா திட்டம்" முகாம்!

0 உங்களின் கருத்து (Comments)

அதிரை மக்களுக்கு அறிய வாய்ப்பு!


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின்

"அம்மா திட்டம்"

(அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் திட்டம்)

முகாமன்று கிராம பொது மக்களால் அளிக்கப்படும் மனுக்களில் கீழ்கண்ட இனங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்படும்.

முகாம் நடக்கும் இடம் : அதிரை பைத்துல்மால், நடுத்தெரு, அதிராம்பட்டினம்.

தேதி : 17-09-2013 - செவ்வாய் கிழமை 



- AT நிருபர் குழு 

ஒருவரி தகவல்...சும்மா அதருதுல்லே!

0 உங்களின் கருத்து (Comments)

பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும்.

உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.

ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கோல்கட்டா நகரம்.

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

மேலும் கருத்துகளில்ஒர்வரி தகவல்களை உங்களால் இட முடியுமல்லவா?

இத்தகவல் சுட்டது முகநூலில் 

-அதிரை தென்றல் 

உயிரினங்கள் தண்ணீரின்றி வாழ முடியுமா?

0 உங்களின் கருத்து (Comments)

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 

அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 

வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.


முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை.


தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 

நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத  ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 

நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 

பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.

அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீர்களும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகிவிட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்புதாது அதிகமாகிவிட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .



இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.

மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

அதிரை தென்றல் (Irfan Cmp)

கனரா வங்கி : ஓர் புதிய அறிமுகம்!

0 உங்களின் கருத்து (Comments)

கனரா வங்கியின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கனரா வங்கி உங்களுக்கு ஒரு பதிவு மொபைல் மூலம் 092892 92892 அழைப்பை தவற (Missed Call) கொண்ட கணக்கு நிலுவை தெரியப்படுத்த ஒரு புதிய பயன்பாடு அறிமுகப்படுத்தியது.

உங்கள் கணக்கை மொபைல் மூலம் தெரிய ஆவலா! உடனடியாக ஒரு தவறிய அழைப்பு (Missed Call) கொடுங்கள்.

குறிப்பு : உங்கள் கணக்கில் மொபைல் ரிஜிஸ்டர் செய்து இருந்தால் மட்டுமே!


தகவல் : கனரா வங்கி (மின்னஞ்சல் வழி செய்தி)

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்